இயற்கை எனது நண்பன், வாழ்க்கை எனது தத்துவ ஆசிரியன், வரலாறு எனது வழிகாட்டி - தமிழீழ தேசிய தலைவர் யோசிப்பதானால் நிதானமாக யோசியுங்கள், செயல்படுவதானால் உறுதியுடன் செயல்படுங்கள், விட்டுக் கொடுப்பதனால் பெருந்தன்மையுடன் விட்டுக் கொடுங்கள். எதிர்ப்பதனால் துணிந்து எதிர்த்து நில்லுங்கள்

என்னுடைய நான்,

உலகம் பிறந்தது எனக்காக, ஓடும் நதிகளும் எனக்காக, இன்னும் உலகின் அனைத்து ஏற்பாடுகளும் எனக்காக, ஆனால் நான் யாருக்காக ?

சகிக்க முடியாத கேள்விகள் ஒரு பார்வை:-

சிலர் இடம் பொருள் தெரியாமல் கேள்விகள் கேக்கும் போது உங்கள் மனதில் வரும் பதில்கள் பெரும்பாலும் இவையாகவே இருக்கும்.
 

எச்சாம்பிள் : கல்யாண வீட்டிற்க்கு வந்திருக்கும் போது கல்யாணத்துக்கு வந்தீங்களா’னு கேப்பதும்,பந்தி பரிமாறும் இடத்திலிருந்து வெளிவரும் போது சாப்பிட்டாச்சா’னு கேப்பதும் சகஜம் தானே பாஸ் :)


1. படுக்கையில் படுத்து கண்மூடும்போது....தூங்கப்போரியா ?
[இல்லை தூக்குல தொங்கப்போறேன் :-)

2. மழை நேரத்தில் வெளில கிளம்புறதைப் பார்த்துட்டு..... மழைல வெளியே போறியா?
[ இல்லை மாரியாத்தாவுக்கு கூழ் ஊத்தப்போறேன்:-) ]

3. அறிவாளி நண்பன் லேண்ட் லைனுக்கு கால் பண்ணிட்டு...... மச்சி எங்கிருக்கே?
[ உங்க ஆயா வீட்ல இருக்கேன் மச்சி :-) ]

4. பாத்ரூம்லேர்ந்து ஈரத்தோட தலை துவட்டிகிட்டு வெளில வரும்போது..... குளிச்சியா?
[ இல்லை கும்மி அடிச்சேன் :-) ]

5. தரைதளத்தில் லிஃப்டுக்காக காத்திருக்கும் போது... மேலே மாடிக்கு போறியா?
[ இல்லை அமெரிக்கா போறேன் :-) ]

6. அழகான பூங்கொத்தை டார்லிங்குக்கு கொடுக்கும் போது..... இது என்ன பூவா?
[ இல்லை புளியம்பழம் :-) ]

7. சினிமா டிக்கெட் எடுக்க வரிசையில் நிக்கும்போது, அறிவாளி நண்பன் .....இங்கே என்ன பண்றே?
[ ம்ம் மண்ணெண்ணெய் வாங்க நிக்கிறேன் :-) ]

8. கேண்டீன்ல நின்னுகிட்டிருகும்போது, நண்பன்....... என்ன மச்சி சாப்பிட வந்தியா?
[ இல்லை சாணி வறட்டி தட்ட வந்தேன் மச்சி :-) ]

9. எழுதிட்டிருக்கும் போது, நண்பன்.... மச்சி எழுதிட்டிருக்கியா?
[ இல்லை மச்சி எருமை மாடு மேய்ச்சிட்டு இருக்கேன் :-) ]

10. தடிக்கி தரையில் விழுந்ததை பார்த்துட்டு, நண்பன்.... என்ன மச்சி விழுந்துட்டியா?
[ இல்லை, நீச்சல் அடிச்சிட்டிருக்கேன் :-) ]

#கடுப்பேத்துறாங்க_பாஸ்

நன்றி- https://www.facebook.com/neeenfrienduda

இன்று ஒரு தகவல் !!!


ஒரு ஊருல ஒரு முனிவர் இருந்தார். ஒரு நாள் அவரப் பாக்க 4 பேரு வந்திருந்தாங்க. முனிவர்கிட்ட அந்த 4 பேரும்,"சாமி ஒலகத்த புரிஞ்சிக்கவே முடியலயே அதுக்கு என்ன வழின்னு" கேட்டாங்க. அதுக்கு அந்த முனிவர் "தெரியலயப்பான்னு" ஒத்த வரில பதில் சொல்லிட்டாரு. ஆனாலும் வந்தவங்க விடாம."என்ன சாமி நீங்க எவ்ளோ பெரிய முனிவர் இதுகூடத் தெரியலைன்னு சொல்லுறிங்களே!" அப்டின்னு கேட்டாங்க. அதுக்கு முனிவர் அவங்ககிட்ட "சரி இப்ப நான்உங்கள ஒரு புஷ்பக விமானத்துல அழைச்சிகிட்டுப் போவேன். போற வழியில ஒரு காட்சிய உங்களுக்கு காட்டுறேன். அது பத்தி உங்களோட கருத்த நீங்க சொல்லனும், கருத்து தப்பா இருந்திச்சின்னா இந்த விமானம் உங்கள கீழ தள்ளிவிட்டுடும்" அப்டின்னாரு. சரின்னு அந்த 4 பேரும் முனிவரோட சேந்து புஷ்பக விமானத்துல ஏறினாங்க.

கொஞ்ச தூரம் போனபிறகு ஒரு எடத்துல ஒரு புலி , குட்டிபோட்டுக்கிட்டு இருந்திச்சி. குட்டி போட்ட பெறகு தனக்கும் தன் குட்டிகளுக்கும் பசிக்கு எற தேடி அந்தப் பக்கமா வர ஆரம்பிச்சிச்சி. இந்தப் பக்கமா ஒரு மான், அதுவும் குட்டி போட்டுட்டு பசிக்கு தண்ணீர் குடிக்கிறதுக்கு அந்தப் பக்கமா வந்திச்சி. மானப் பாத்த அந்தப் புலி சட்டுன்னு அது மேல பாஞ்சி அதக் கொன்னு தானும் சாப்புட்டு தன்னோட குட்டிகளுக்கும் குடுத்திச்சி. அத சாப்புட்ட அந்தப் புலிக் குட்டிங்களுக்கு சந்தோசம். இந்தப் பக்கமா தன் அம்மாவ பரிகுடுத்த மான் குட்டிகளுக்கு வருத்தம். இந்தக் காட்சிய அவங்கிட்ட காட்டின முனிவர் இதப் பத்தி உங்க கருத்து என்னன்னு கேட்டாரு.

அதுக்கு அந்த 4 பேருல ஒருத்தர் “இது ரொம்ப தப்பு. மான் குட்டிகளுக்கு இப்ப தாய் இல்லாம போச்சேன்னு சொன்னாரு”. ஒடனே அவர அந்த விமானம் கீழ தள்ளிவிட்டுடுச்சு. அடுத்த ஆளப்பாத்து முனிவர் கேட்டாரு,"ஏம்பா உன் கருத்து என்னன்னு?", ஏற்கனவே ஒருத்தன் கீழ விழுந்தத பாத்த ஆளு," இல்ல இது சரிதான், ஏன்னா புலிகளுக்கு இ இரையாகத் தானே மான்கள் இருக்குது அப்படின்னு சொன்னாரு. ஒடனே அவரையும் விமானம் கீழ தள்ளி விட்டுடுச்சு. இதையெல்லாம் பாத்துக்கிட்டு இருந்த அடுத்த ஆளு ரொம்ப உசாரா சொன்னான், “ இது தப்பும் இல்ல சரியும் இல்லன்னு". ஒடனே அவனையும் அந்த விமானம் கீழ தள்ளிடிச்சி. கடைசியா விமானத்தில இருந்தவனைப் பாத்து கேட்டாரு முனிவர்,"ஏம்பா உன் கருத்து என்னன்னு", அதுக்கு அவன் ,"தெரியலயே சாமின்னு", சொன்னான். இந்த மொற அவன அந்த விமானம் கீழ தள்ளல. இரண்டு பேரையும் சொமந்துகிட்டு பயணம் செய்ய ஆரம்பிச்சிச்சி.

இந்தக் கதைய வர்ற நீதி என்னன்னா நம்ம வாழ்க்கைக்கு எது தேவையோ அதை மட்டும் நாம் புரிஞ்சிக்கிட்டா போதும் தேவையில்லாத விசயங்கள தெரிஞ்சிக்க முயற்சி செய்றது அனாவசியம், அது போல தனக்கு அறிவில்லாத விசயங்கள் குறித்து தனக்கு தெரிஞ்சமாதிரி பேசுறதும் அனாவசியம். தெரியாத விசயங்களை தெரியாதுன்னு ஒத்துக்கிறது தான் உத்தமம்.


நன்றி : தென்கச்சி கோ.சுவாமிநாதன்

திரும்பவும் நான்!


புதுவருட பிறப்பு வாழ்த்துகள் ! தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் வாழ்த்துகள்!

எம்முட்டு நாள் ஆச்சி,உங்க எல்லாத்தையும் பாத்து பேசி(ஆமா இல்லாட்டியும் இவரு பெரிய இவுரு).கொஞ்சம் அதிகமாகவே ஆணி இருந்த காரணத்தால் என்னால் இந்தப் பக்கம் வர இயலாமல் போனதால்,பதிவுகள் போடவில்லை. இனிமே எதையாவது போட்டுக்கொண்டே இருப்பது என்று நினைத்துள்ளேன்.


படம்:இணையம்

இன்னைக்கு முதல் நாள் என்பதனால் ஒரு சிலவற்றை மட்டும் சொல்லிக்கொள்ள ஆசைப் படுகிறேன் இங்கு. எனக்கு கவிதை எழுத தெரியாது(எழுதுனத படிப்பேன்),கதை எழுத தெரியாது(கொஞ்சம் பெரிய கதையா இருந்தாலும் சலைக்காமல் படிப்பேன்). மொக்கையா எதாவது எழுவேன்.அதை இங்கு பதியவும் செய்வேன்.


படிக்கவும்,தவறாமல் படிக்கவும். படித்தால் மட்டும் போதாது படித்துவிட்டு பிடித்திருந்தால் (நல்லா இருக்கு என்றும்)பிடிக்கலைனா(காறி உமிழாமல்)கொஞ்சம் பரவாயில்லையென்று சொல்லிவிட்டு கெளம்பவும்.


எதாவது கேள்வி,விளக்கம் தேவைப்பட்டால் உடனடியாக எனது மின்னஞ்சலுக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.  நன்றி வணக்கத்துடன் விடைபெற்றுக்கொள்வது உங்கள் நல்லவன் கோல்ட்மாரி.

தங்கள் மகிழ்ச்சிக்கும் & அடுத்தவர்களின் மகிழ்ச்சிகும் உதவுங்கள் !

தங்கள் மகிழ்ச்சிக்கும் & அடுத்தவர்களின் மகிழ்ச்சிகும் உதவுங்கள் !

’அடுத்தவர்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் அவர்களுக்கு உதவி செய்யுங்கள்.நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று நினைத்தால் பிரதிபலனே பாராமல் அடுத்தவர்களுக்கு உதவுங்கள்’- தலாய்லாமவின் பொன்மொழி தான் இது.
இதனை எல்லோராலும் விளக்க முடியாது , இதனை அனுபவபூர்வமாக அனுபவித்தவர்கள் மட்டுமே உணர முடியும்.


பள்ளி செல்லும் சிறுவர்-சிறுமிகளுக்கு பாடப்புத்தகமோ இல்ல பேனாவோ வாங்குவதற்கு காசு கொடுத்துவிட்டு , ஏதோ என்னாலான உதவிகளை நான் செய்கிறேன், என்று பலர் தங்களைத் தாங்களே திருப்திப்படுத்திக்கொள்வதுண்டு. ஆனால் இதுபோன்ற செயல்களுக்குப் பெயர் உதவி இல்ல. அதனால் இப்படி செய்வதை நிறுத்திவிட வேண்டாம். எந்தவித பிரதிபலனும் எதிர்பாராமல் அடுத்தவர்களுக்கு உதவி செய்தால் மட்டுமே அளவில்லாத பரிபூரணமான சந்தோசத்தை உங்களால் அனுபவிக்க முடியும்.என்பதைத்தான் வலியுறுத்துகிறேன்.
நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தான் உண்டு தன் மனைவி உண்டு என்று தான் பெரும்பாலானோர் இருக்கின்றனர். விற்கும் விலை வாசியில் எங்களால் மற்றவர்களுக்கு எப்படி உதவ முடியும்? என்று கூட சிலர் கேட்கலாம். மனம் இருந்தால் மார்க்கமுண்டு , உதவ வேண்டும்னெறு எண்ணம் இருந்தால் எப்படியும் உதவலாம். இளைஞர்கள் டாஸ்மார்க் செல்வதையோ இல்ல சிகரெடையோ குறைத்துக்கொண்டு ஏழை எளியோர்க்கு ஒருவேளை சாப்பாடு வாங்கி கொடுக்கலாம், உடுத்த நல்ல ஆடைகள் வாங்கிக்கொடுக்கலாம். ஓர் உதாரணத்துக்கு மட்டுமே இதை சொல்லுகிறேன்.


நீங்க அடுத்தவர்களுக்கு உதவினால் ஆண்டவன் உங்களுக்கு உதவுவான். எப்படி என்று இந்தக் கதையை படியுங்கள் புரியும் .



கண்ணனுக்கு வயது முப்பத்திரண்டு.இந்தச் சின்ன வயசுக்குள் அவன் அனுபவித்துவிட்ட சோதனைகள் மிக மிக அதிகம்.வாழ்ந்து கெட்ட குடும்பத்தைச் சேர்ந்த அவன்.வயிற்றுப் பிழைப்புக்காக ஒரு மெக்கானிக் ஷாப்பில் குறைந்த சம்பளத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்தான். ஒரு நாள் இரவு நேரம் கண்ணனை அழைத்து டிபன் வாங்கிவரச்சொன்னார் முதலாளி. ரிப்பேருக்கு வந்திருந்த ஆட்டோவை எடுத்துக்கொண்டு கண்ணன் கிளம்பினான்.அப்போது பேய் மழை பெய்துகொண்டு இருந்த்து.தூரத்தில் வயது முதிர்ந்த ஒரு பெரியவர் ஒதுங்க இடமில்லாமல் பெட்டி படுக்கைகளுடன் மழையில் நனைந்த கோழிக்குஞ்சு மாதிரி நனைந்தபடி நின்றுகொண்டிருந்தார்.கண்ணன் அவர்ருகில் சென்று ஆட்டோவை நிறுத்தினான்.

என்ன சார் ! என்னாச்சு ? என்று விசாரித்தான்.தான் பயணம் செய்த பஸ் பிரேக்டெளன் ஆகி நடுவழியில் நின்று விட்டதாகவும் மற்ற பயணிகள் எல்லாம் லாரி ,ட்ரக் என்று பிடித்துச் சென்று விட்டதாகவும் ,தான் மட்டும் கடந்த ஒரு மணி நேரமாக வாகனம் எதுவும் கிடைக்காமல் இங்கே மழையில் நனைந்து கொண்டிருப்பதாகவும் வெட வெட்த்த குரலில் கூறினார் அந்தப்பெரியவர்.

அவரைப் பார்த்து இரக்கம் கொண்ட கண்ணன் , இந்த ராத்திரி நேரத்துல இந்த ரூட்டில் பஸ் ஒன்னும் கிடையாது சார், பேசாம ஆட்டோவில் ஏறி உட்காருங்க.இங்கிருந்து கொஞ்ச தூரம் போனா அங்கே ஏதாவது டாக்ஸி கிடைக்கும்.அதுல நீங்க செளகரியமா உங்க ஊருக்குப் போயிடலாம் ! என்றான். நன்றி பொங்கத் தலையாட்டிவிட்டு ஆட்டோவில் ஏறி அமர்ந்தார் அவர். அடுத்த ஐந்தாவது நிமிடம் அவரை ஒரு டாக்ஸி பிடித்து ஏற்றி,வழி அனுப்பினான் கண்ணன். பெரியவர் அவன் கைகளைப் பிடித்துக்கொண்டு தப்பா நினைக்கலைனா இதை வெச்சுக்கோப்பா !என்று சில ரூபாய் நோட்டுகளை கண்ணனின் கையில் திணிக்க , கண்ணன் வெடுக்கென்று கைகளை உருவிக்கொண்டான்.

இதுக்கெல்லாம் காசு வேணாம் சார். நடு ரோட்டில் பரிதாபமாக நின்னுட்டு இருந்தீங்களேன்னு லிஃப்ட் கொடுத்தேன்.அவ்வளவு தான் ! இதே மாதிரிதான் முன்னே ஒரு சமயம் எங்க அப்பா முன்பின் தெரியாத இடத்துல வழிபுரியாம தவிச்சிட்டுருந்தப்போ யோரோ ஒருத்தர் வந்து தனக்கு உதவி பண்ணினதா சொல்லிருக்கார்.இப்ப உங்களுக்கு நான் உதவி செய்தேன்.இந்த உதவிச் சங்கிலி அறுந்துடாம இருக்க நீங்க இதேபோல வேற யாருக்காவது உதவி செய்யுங்க ! என்று டயலாக் பேசிட்டு ஆட்டோவை கிளப்பிக் கொண்டு பறந்தான் கண்ணன்.


டாக்ஸி நகர ஆரம்பித்த பிறகுதான் பெரியவருக்கு தான் ஒழுங்காக ஊர் போய்ச் சேர்ந்துவிடுவோம் என்ற பாதுகாப்பி உணர்வு வந்தது. உடனே பசியும் வந்தது. அவர் டாக்ஸி ட்ரைவரைப் பார்த்து , தம்பி நான் சாப்பிட்டு நாலு மணி நேரத்துக்கு மேல ஆகுது , இனிமே என்னால தாங்க முடியாது. உடனடியா நான் சாப்பிடலைன்னா எனக்கு மயக்கமே வந்துடும்.அதனால் வழியில ஓட்டல் ஏதாவது இருந்தா நிறுத்தேன் என்றார்.அதற்கு ட்ரைவர் சார் , இந்த வழியில ஓட்டல் ஏதும் இல்லீங்களே.. ஏழை ஜன்ங்க வசிக்கிற பகுதியாச்சுங்களே இது ! என்றான்.டாக்ஸி மெதுவா ஓடிக்கொண்டிருக்க ,சாலை ஓரத்தில் ஒரு குடிசைக்கு வெளியே ஒரு பெண்மனி இட்லி சுட்டு விற்றுக்கொண்டுருப்பதை யதேச்சையாகப் பார்த்துவிட்டார் அந்தப் பெரியவர்.டிரைவரிடம் டாக்ஸியை நிறுத்தச் சொன்னார். என்ன சார் , இங்கையா சாப்பிடப் போறீங்க ? என்று டிரைவர் முகம் சுளித்த்தைக் கூடப் பொருட்படுத்தாமல் இறங்கி விறுவிறுவென்று நடந்து சென்றார்.திருப்தியாக அந்தப் பெண்மணியிடம் ஏழெட்டு இட்லியை வாங்கிச் சாப்பிட்டார்.பின்னர் கை கழுவிக்கொண்டு எவ்வளவுமா ஆச்சு ? என்று கேட்க எட்டுரூபாய் கொடு சாமி என்றாள் அவள். பெரியவர் தன் பர்ஸில் இருந்து ஆயிரம் ரூபாய் நோட்டு ஒன்றை எடுத்து நீட்ட,ஐயோ சாமி,இதுக்கு சில்லறை கொடுக்க நான் எங்க போவேன் ? என்று பதறினாள் அவள்.

அதற்கு அந்தப் பெரியவர், நீ பாக்கி எதுவும் எனக்குத் தர வேண்டாம்மா ! எனக்கு உதவி தேவைப்பட்ட போது யாரோ முன்பின் தெரியாத ஒரு புண்ணியவான் தேடிவந்து எனக்கு உதவி செய்தார்.இப்பவும் பசியில உயிர் போகிற மாதிரி துடிச்சிட்டுருந்தப்போ அன்னலட்சுமியா என் எதிர்ல வந்து என் பசியைப் போக்கினே.இது இட்லிக்கான பைசா இல்லே. என் நன்றிக்கான அடையாளம்.உன் மடியில இருக்கிற குழைந்த சளியும் இருமலுமா அவதிப்பட்டுக்கிட்டிருக்கே... அதை ஆஸ்பத்திரியில காட்டி,மருந்து வாங்கிக்க இந்தா பணத்தை வெச்சுக்கோ ! நான் வரேன்,என்று அவளிடம் விடைபெற்றுக்கொண்டு புறப்பட்டார் பெரியவர்.பெரியவர் பயணித்த கார் சென்ற திசையையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தாள் அந்தப் பெண்.அவள் கடையின் முன் ’கிரிச்’ என்ற சத்ததுடன் ஒரு ஆட்டோ வந்து நின்றது.

வந்தவன் ஆட்டோவை விட்டு இறங்கும் வரைகூட காத்திருக்காமல்,யோவ் குழந்தைக்குக் காய்ச்சல் அடிக்குது.டாக்டர்கிட்ட போலாம்னா காசு இல்லீயே’னு கவலைப் பட்டுட்டு இருந்தீயே.. கடவுளாப் பார்த்து கண் திறந்திட்டார், யோரோ ஒரு பெரியவர் வந்து ஆயிரம் ரூபா கொடுத்திட்டு போனார்.உடனே கிளம்பு டாக்டர் கிட்ட போய் நம்ம குழந்தையைக் காட்டி மருந்து வாங்கிட்டு வரலாம் ! என்று அவள் பரபரப்பும் உற்சாகமுமாகச் சொல்ல, ஆச்சரியத்தில் உறைந்தவனாக எதிரே நின்றிருந்தான் கண்ணன்.

டிஸ்கி :

இக்கதை எங்கையோ எப்பையோ படித்தது !

நானுங்கோ !!!

My photo
நான் அன்பாக, பாசமாக, கோபமாக,நட்பாக, அதிகாரமாக, அலட்சியமாக,பணிவாக, குறும்பாக பேசியிருக்கிறேன்.ஆனால் இந்த 24 ஆண்டுகளில் நான் நானாகவே இருக்கிறேன்...!

வாங்க பழகலாம்

திருக்குறள்

காமத்துப்பால்;கற்பியல்;நெஞ்சோடுபுலத்தல்:

1298-எள்ளின் இளிவாமென் றெண்ணி அவர்திறம்
உள்ளும் உயிர்க்காதல் நெஞ்சு.

பிரிந்து சென்ற காதலரை இகழ்வது தனக்கே இழிவாகும் என்பதால், அவருடைய பெருமையைப் பற்றியே என்னுயிர்க் காதல் நெஞ்சம் எண்ணிக் கொண்டிருக்கும்.

அமராவதி ஆத்தங்கரையின் விளக்கம் :

நீ பிரிந்தபிறகும் கூட
உன்னை வெறுக்கத் தோன்றவில்லை என் இதயத்துக்கு…
என் இதயம் நேசித்தவளென்பதால் மட்டுமல்ல
என் இதயத்தை நேசித்தவளென்பதாலும்!


பிரிந்து சென்ற காதலரை இகழ்வது தனக்கே இழிவாகும் என்பதால், அவருடைய பெருமையைப் பற்றியே என்னுயிர்க் காதல் நெஞ்சம் எண்ணிக் கொண்டிருக்கும் .

எனக்குப்பிடித்தவையை இணையத்தில் பிடித்தவை !

வருந்துகிறேன் !!


என் வாழ்நாள் குறைகிறது
என்பதற்காக வருந்தவில்லை...
உன் நினைவில்
வாழும் நாள் குறைகிறது
என்பதற்காக வருந்துகிறேன்... !!!


நன்றி: வாணி நாதன்

நினைவுகள்

குருதிக் குழாய்களுக்குள்
குறுக்கு நெடுக்குமாய்
பாய்ந்துக் கொண்டிருக்கிறது
இதயத்திற்குள் நிரம்பி வழிந்த
உன் நினைவுகள்...!

நன்றி : இமலாதித்தன்


நீ

சுற்றி ஒருமுறை
பார்த்துவிட்டு
உதடு குவித்து
நீ தரும் முத்தத்தில்
பாதியை அப்படியே
அள்ளிக்கொண்டு
போகிறது காற்று....

நன்றி : மழைக்காதலன்

நெஞ்சோடு புலத்தல்

உனக்குத் துணையாக உன்மனம்…
உன்மனதுக்குத் துணையாக என்மனம்…
எனக்குத் துணையாக…
நான் மட்டும் !


நன்றி : ஆத்தங்கரை


Search This Blog

தெரிஞ்சிக்க ! பூமியிலிருந்து சூரியன் சராசரியாக 14,88,00,000 கி.மீ (93,000,000 மைல்) தூரத்திலிருக்கிறது. சூரியனின் ஒளியானது நமது பூமியை வந்தடைய சராசரியாக 8.33 நிமிடம் எடுத்துக்கொள்கிறது. எப்படி கணக்கிட்டார்கள் : 93,000,000 மைல் தூரம் வகுத்தல் 2,97,600 ஓளியின் வேகம் சூரியனுக்கும் பூமிக்கும் இடையேயான இடைவெளி / ஓளியின் வேகம் = 148800000 / 2,97,600 = 500 500 செகெண்ட்ஸ் வகுத்தல் ஒரு நிமிடற்க்கு 60 செகெண்ட்ஸ் 500/60 = 8.33 சூரிய ஒளி பூமியை வந்தடைய எடுத்துக்கொள்ளும் நேரம்

சிந்தனைக்கு

அன்பை விதைப்பவர்கள் நிம்மதியை அறுவடை செய்பவர் .

ஒவ்வொரு முடிவும் மற்ற ஒன்றுக்கான தொடக்கம் .

கல்வி, அனுபவம் , ஜாபக சக்தி இம்மூன்றையும் உன்னிடமிருந்து யாரும் பிரிக்கமுடியாது .

விரும்பியது கிடைக்கவில்லை என்று வருந்தாதே . கிடைத்துள்ளதை விரும்பு .

அருமை அறியாதவன் வீட்டுக்கு போனால் பெருமை குறைந்து போகும் .

எனக்கு பிடிச்ச பாடல் வரிகள் !

மிக மிக கூர்மையாய் என்னை ரசித்தது உன் கண்கள்தான்..
மிருதுவாய் பேசி என்னுள் வாசித்தது உன் வார்த்தை தான்...
கண்களை காணவே இமைகளே மறுப்பதா..

(தாம் தூம் )


"நான்கு கண்ணாடி சுவர்களுக்குள்ளே நானும்மெழுகு வர்த்தியும்


தனிமை தனிமையோ கொடுமை கொடுமையோ "

(சில்லுனு ஒரு காதல்)



"உன் சின்ன இதழ் முத்தம் தின்னாமல்

இந்த ஜன்மம் வீணென்று போவேனோ ??"

(பூவெல்லாம் உன் வாசம்)



"படுத்தும் பொசுக்குனு தூங்கும் பய

பித்துக்குளி போல இப்ப முழிக்குரானே

வெள்ளன எந்திருச்சு ஓடும் பய

சுள்ளுன்னு சூரியன பாக்குறேனே



அவன் பார்த்ததுமே நான் பூத்துவிட்டேன்

அந்த ஒரு நொடியை நெஞ்சில்ஒளித்துக்கொண்டேன்

நான் குழந்தை என்றே நேற்று நினைத்திருந்தேன்

அவன் கண்களிலே என் வயதறிந்தேன்"



(காதல்)



"பேச எண்ணி சில நாள் அருகே வருவேன்

பின்பு பார்வை போதும் என நான் நினைத்தேநகர்வேன் ஏமாற்றி..



இரவும் அல்லாத

பகலும் அல்லாத

பொழுதுகள்

உன்னோடு கரையுமா??!!



கரைகள் அண்டாத

காற்றும் தீண்டாத

மனதுக்குள் எப்போது நுழைந்த்திட்டாய்??!

தடையில்லை சாவிலும் உன்னோடு வர ..."


(சுப்பிரமணியபுரம்)