எம்முட்டு நாள் ஆச்சி,உங்க எல்லாத்தையும் பாத்து பேசி(ஆமா இல்லாட்டியும் இவரு பெரிய இவுரு).கொஞ்சம் அதிகமாகவே ஆணி இருந்த காரணத்தால் என்னால் இந்தப் பக்கம் வர இயலாமல் போனதால்,பதிவுகள் போடவில்லை. இனிமே எதையாவது போட்டுக்கொண்டே இருப்பது என்று நினைத்துள்ளேன்.
இன்னைக்கு முதல் நாள் என்பதனால் ஒரு சிலவற்றை மட்டும் சொல்லிக்கொள்ள ஆசைப் படுகிறேன் இங்கு. எனக்கு கவிதை எழுத தெரியாது(எழுதுனத படிப்பேன்),கதை எழுத தெரியாது(கொஞ்சம் பெரிய கதையா இருந்தாலும் சலைக்காமல் படிப்பேன்). மொக்கையா எதாவது எழுவேன்.அதை இங்கு பதியவும் செய்வேன்.
படிக்கவும்,தவறாமல் படிக்கவும். படித்தால் மட்டும் போதாது படித்துவிட்டு பிடித்திருந்தால் (நல்லா இருக்கு என்றும்)பிடிக்கலைனா(காறி உமிழாமல்)கொஞ்சம் பரவாயில்லையென்று சொல்லிவிட்டு கெளம்பவும்.
எதாவது கேள்வி,விளக்கம் தேவைப்பட்டால் உடனடியாக எனது மின்னஞ்சலுக்கு மின்னஞ்சல் அனுப்பவும். நன்றி வணக்கத்துடன் விடைபெற்றுக்கொள்வது உங்கள் நல்லவன் கோல்ட்மாரி.
0 comments:
Post a Comment