பதினாறு - பருவக்கோளாறு
காதல் நாயகன்,டவுசர் நாயகன் என்ற வருசையில் இந்த படத்தில் கோபியின் மகளை காதலிப்பவராக வரும் நாயகனை மொக்கை நாயகன் என்று சொல்லுவது மிகையாகாது. முகத்தில் ஒரு உணர்ச்சியில்லை. குவாட்டர் கட்டிங்கே கிடைக்காது மாதிரியான உணர்வே வருகிறது.
காதல் என்பது என்னவென்று தெரியாத பலர் பள்ளி கல்லூரியில் படிப்பையையும்,வேலை வெட்டிக்கு செல்லாமல் வாழ்க்கையையும் , பலர் மன நோயாளியாகவும் , சிலர் தற்கொலையும் செய்துகொண்டு இருக்கும் இந்த சமுதாயத்திற்க்கு இப்படம் ஒரு சின்ன அகழ்விளக்கு வெளிச்சம்.
காதலின் மோகத்தில் சென்றுக்கொண்டிருக்கும் இளைஞர் சமுதாயத்தை சீர்திருத்தும் நோக்கத்தோடு எடுத்த படமென்று சொல்லலாம். விளம்பரம் அதிகமாக இல்லையென்பதால் பலருக்கு இந்த படம் வந்த்தே தெரியவில்லை எனபது வருத்தம். படம் பார்த்து விட்டு எனது நண்பர் (ப்ரசாத்) ஒருவருக்கு சொன்னேன்.16’னு ஒரு படமா எப்போ வந்தது’னு கேக்குறார்.
அழகான காதல் தோல்வியை நேர்த்தியாக படமெடுத்திருக்கிறார் இயக்குனர் சபாபதி.
தனது மகள் காதலுக்கு தன்னுடைய இள வயது காதலை ஒரு எடுத்துக்காட்டாக சொல்லும் தந்தையின் கதையே இந்த பதினாறு.
கோபியின் சிறுவயது முதலே இளவரசி தோழியாக கிடைக்கிறார்.இருவரும் ஒன்றாக 10ம் வகுப்பு வரைக்கு படிக்கின்றனர். 10 படிக்கும் போது இளவயதில் எல்லோருக்கும் ஏற்படும் பருவ மாற்றம் காரணமாக கோபிக்கும் இயல்பாகவே காதல் ஏற்ப்பட்டுவிடுகிறது தனது தோழி இளவரசியின் மீது.ஆனால் இளவரசியோ ”என்னப்பா பள்ளிக்கூடம் முடியுது உன்னோட ஆள இனிமே எப்படி பாக்க போற’னு” கேக்கும் தனது தோழியின் வார்த்தையை விளையாட்டாக விட்டு விடுகிறார்.
தனது காதலை இயல்பாகவே வெளிப்படுத்தும் கோபியை சிறுவனாக நினைக்க முடியாதளவுக்கு அதிகமான வார்த்தைகளால் காதலைச் சொல்லுவார்.காதல் வந்து விட்டால்காக்கை கூட அழகாக தெரியுமென்பதுக்கு ஏற்ப. கோபியின் மீது தனக்கு காதல் இருக்கா இல்லையென்று தெரியாமல் அவனை திட்டி விட்டு வீட்டுக்கு சென்று , யோசிக்கும் போது அந்த காதல் வெளிப்படுவதும்,பின்ன அவனுக்கா பள்ளிக்கூடம் செல்வதுக்கு ஒரு நாடகத்தை அரங்கேற்றுவதும் , கோபியிடம் சென்று பல டயலாக் பேசுவதும் அழகாக சொல்லிருக்கிறார் இயக்குனர்.
பின்னர் இவர்களின் காதல் பயணம் சென்றுகொண்டிருக்க ,வீட்டில் சில தவறுகள் நடப்பதால் ஒரு சோதிடரின் பேச்சைக்கேட்டு இளவரசியை அவளது தாய்மாமனுக்கு கெட்டிக்கொடுக்க திருமண ஏற்ப்பாடுகள் நடத்துகின்றனர்.இளவரசி கோபியின் காதல் விசயம் இளவரசியின் மாமனுக்கு தெரிய வர அவரால் ஒன்றுமே சொல்ல முடியவில்லை.சிறுவயதில் இருந்து பாசம் வைத்து விட்டு இப்போது என்ன செய்யமுடியும் ?
பின்னர் கல்யாணத்தின் போது ப்ரச்சனை செய்யும் இளவரசி கோபியைத்தான் கெட்டுவேனென்று பிடிவாதம் செய்ய அவளை தனது வில்லி சித்தி வீட்டுக்கு அனுப்ப முடிவெடுக்கிறார் இளவரசியின் அப்பா.நிலமையை புரிந்துகொண்ட இளவரசி மணந்தால் ”மகாதேவன் இல்லையேல் மரண தேவன்’என்று வசனம் பேசிவிட்டு சும்மா இருந்து விடாமல் , அடுத்த கட்டத்துக்கு நகர்கிறாள்.
அவனது குழந்தையை தனது வயிற்றில் சுமந்தால் யாரும் ஒன்னும் செய்ய முடியாதென்று சொல்ல கோபியும் தலையாட்ட , அடுத்த சில மாதங்களில் குழந்தை உண்டாக அந்த விசயம் வீட்டுக்கு தெரியப்படுத்த (என்ன தெனாவட்டு) பின்னர் அதனை கலைத்து இளவரசியை அவளது மாமனுக்கே கெட்டி வைக்க முடிவு செய்து ,கெழவியை வரவழைக்க ,வந்த கிழவியின் தலைமுடியை வெட்ட ,பயத்தில் கிழவி ஒலும்பிக் ஓட்டமெடுத்த படி ”உழுதவனுக்கே நெலத்த கொடுத்திடுங்க’னு சொல்ல , பின்னர் தான் அவனைத்தான் மணப்பேன்,அவனை மதிக்காத இந்த வீட்டுக்கு இனிமேல் வர மாட்டேன்’னு பல வசனத்தை பேசிட்டு கெளம்பிடுவாங்க இளவரசி. அதனால் கொழப்பி போயிடுது அவுங்க குடும்பம்.
கோபியோடு ஊரைவிட்டு போகும் போது ஊருக்கு வெளியே ராக்காயி கோயிலில் தனது அப்பாவும் ஊர்’ல பஞ்சாயத்து பண்ணுறவங்க வெள்ளையும் சொல்லையுமா உக்காந்திருக்க , தந்தை மனசு நொந்து பேசுவார். மிக சரியாக பேசுவார்.
எந்த தைரியத்தில் இவனோட போற ? எந்த நம்பிக்கையில் நான் உசுரோட இருக்கிறது ? தன்ன நம்பி வந்தவளுக்கு துணி வாங்கிக்கொடுக்க இவனுக்கு வக்கு இருக்கா?
இது பொட்டப்புள்ளைய பெற்ற எல்லா பெற்றோருக்கும் வரும் நினைப்பு,கவலை.அவங்கலாம் காதலை எதிர்க்க வில்லை ,மகளின் எதிர்காலத்தை எண்ணி அச்சப்படுகிறார்கள். என்பதை தெளிவா சொல்லிருக்கார் இயக்குனர்.இந்த இடத்தில் ஒரு சபாஷ் போட்டே ஆக வேண்டும் இவருக்கு.
உடனே இளவரசிக்கு கோவம் வந்து கோயிலுக்கு உள்ளே போய் தனது துணியெல்லாம் அவுத்து வெளியே எறிந்து விட்டு , கோபி நீ துணி வாங்கி கொண்டு வந்து கொடுத்திட்டு என்ன கூட்டிட்டு போ’னு சொல்லுவது ,காதலன் மேல் வைத்த நம்பிக்கையா ? இல்ல தன்னோட பிடிவாத குணமா ?’னு யோசிக்க வைக்கிறார்.
துணி வாங்கிட்டு வரும் வழியில் விபத்து ஏற்ப்பட்டு அடித்த லாரிக்காரன் கோபியை கேரளாவுக்கு தூங்கிட்டு போய் வைத்தியம் பார்க்கிறார்.
சில மாதங்கள் கழிந்து .... திரும்பி வருகையில் இளவரசியை மணக்கோலத்தில் பார்க்கிறார்,அங்கு எதுவும் பேச முடியாமல் திரும்பி விடுகிறார் கோபி.
இந்த இடம் எனக்கும் புரியவில்லை. அவ்ளோ பிடிவாதமாக அவன் தான் வேணூமென்று நின்றவள்.அவனை உயிருக்கு உயிராக மதித்து தன்னை முழுவதுமாக அர்ப்பணித்த இளவரசி. மாலை சூடும் அளவிற்க்கு என்ன நடந்த்தென்று புரியவில்லை ,விளக்கவுமில்லை இயக்குனர்.
உடனே காதல் என்பது மாயை ,காதல் என்பது பொய்.’னு தனது டைரியில் எழுதி முடித்திருக்கிறார் கோபி .
கடேசியில் மொக்கை நாயகன் அவுங்க ஊருக்கு போய் இளவரசிய பாக்க சக்கரை வீட்டுக்கு போவார்.அப்ப தான் புரியூது இளவரசியின் மாமன் சக்கர இளவரசிக்கு தாலி கெட்டாம மணத்தோழியா வந்திருந்த தோழிக்கு கெட்டுறார் தாலிய. கடேசியா பாத்தா இளவரசியாக அமைதி(ப்படை)யாக வரும் கஸ்தூரி தனது கோபி இறந்து விட்டார் என்று எண்ணி அன்பு இல்லம் ஆரம்பித்து அங்குள்ள ஆதரவற்ற குழந்தைகளுக்கெல்லாம் கோபியின் பெயரை வைக்கிறார் இன்சியலாக. கஸ்தூரி ”காதலுக்கு ப்ரச்சனை வரலாம் ,காதலர்களுக்கு உள்ள ப்ரச்சனை வரக்கூடாது “ டயாலக் பேசி முடிச்சிருவார்.
.இதெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த கோபி.இடிந்து அழுகிறார். கடேசியில் மொக்கை நாயகனிடம் நான் ஊயிரோட இல்லை’’னு அவா வாழ்ந்திட்டு இருக்கா, நான் இருக்கே’னு தெரிஞ்சா அவ செத்துருவா’னு சொல்லிட்டு போவார்.
”Life Has To Move On, Whatever Happens “
”வாழ்க்கையில் எது நடந்தாலும், நடக்காட்டியும் வாழ்க்கை ஓடிட்டே தான் இருக்கும்”
இளவரசி , கோபியின் காதல் தோற்றுப்போக யார் காரணம் ? புரிந்து கொள்ளாமையா ? வயசுக்கோளாறா ? பெற்றோர்களின் எதிர்ப்பா ?
சிறு வயதினராக நடித்திருக்கும் இளவரசி கோபியின் நடிப்பு அருமை.
என்னைப் பொறுத்தவரையில் பதினாறு – பருவக்கோளாறு
டிஸ்கி :
1. கமல் சார மாதிரி விஞ்ஞானம் பேசுறது. காதல் இல்லையா’னு கேக்குற கேள்விக்கு பதில் சொல்லாம நான் எப்ப அப்படி சொன்னேன்’னு பதில் சொல்லுறது.
2. கஸ்தூரியின் காதல் தோல்வி பாட்டு :
” ஒத்தையடி பாதையில ஊரு சனம் தூங்கயில ஒத்தையா போகுதம்மா என்னோட மனசு.. மனசு.... வெத்தல போல் வாடுதம்மா என்னோட வயசு. ...” அதனால் இந்த படத்து செலெக்ட் ஆயிருப்பாரோ’னு நம்ம குடிகார கொரங்கர் சந்தேகம் எழுப்புகிறார்.
3. இளைஞர்களை குழப்பாம முடிவெடுத்திருக்கலாம்.
4. காதல் தவறில்லை , காதலிக்கும் முன்னர் தங்களது தகுதிகளை வளர்த்துக்கொள்ள வேண்டுமென்பது இயக்குனரின் கோரிக்கை.
பதினாறு - இளமைக்கொண்டாட்டத்துக்கு யோசிக்கும் படி :
இயக்குனர் சபாபதியின் தைரியத்துக்கு சபாஷ் !
பிரிந்து சென்ற காதலரை இகழ்வது தனக்கே இழிவாகும் என்பதால், அவருடைய பெருமையைப் பற்றியே என்னுயிர்க் காதல் நெஞ்சம் எண்ணிக் கொண்டிருக்கும்.
0 comments:
Post a Comment