க(ங்குலி)ஜினி....
இன்று எனக்கு மின்னஞ்சலில் வந்த ஜோக் இது...
சவுரவ்: என் பேர் சவுரவ். முழுப்பேரு சவுரவ் கங்குலி. நான் இந்தியன் கிரிக்கெட் டீம் கேப்டன்.
டாக்டர்: அவரால 15 நிமிசத்துக்கு மேலே எந்த கிரவுண்டுலயும் தொடர்ந்து ஆடமுடியாது. யாரோ அவரோட தலையில கிரிக்கெட் பந்தை கொண்டு பலமா தாக்கியிருக்காங்க!! இத நாங்க மருத்துவ ரீதியா Short Term Batting Lossனு சொல்லுவோம்...
இதுக்கு மேல நம்ம சரக்கு.......
கேள்வி : எவ்வளவு நாளா இவருக்கு இந்த பிரச்சனை இருக்கு ?
டாக்டர்: ஒரு ஒன்றரை வருசமா இந்த வியாதி இருக்கு.
கேள்வி : அது சரி...எப்பவும் ஒரு பெரிய பையை வச்சினு சுத்துறாரே..அதுல என்னதான் இருக்கு ?
டாக்டர்: அதுவா...அது அவர் டீம்'காக விளையாட ஆரம்பித்த காலத்தில் இருந்து எடுத்த வீடியோ,போட்டோக்கள்,வாங்கின கோப்பைகள்,அவரோட 'daily fitness report' எல்லாம் வச்சி இருக்கார்.அடிக்கடி BCCI commitee'க்கு போய் விளக்கம் குடுக்க வேண்டி இருக்கர்தால எப்பவும் பையோட அலையராரு...
கேள்வி : இதென்ன..டாக்டர்....உடம்பெல்லாம் ஒரே நம்பர்'சாவும்,சில பேரோட பெயர்களுமாவும் இருக்கு ??
டாக்டர்: அவர் இதுவரைக்கும் ஆடின மேட்ச்,எவ்வளவு ரன் அடிச்சியிடிகாரு,எத்தன முறை 'டக்' அடிச்சிருக்காரு,எவ்வளவு முறை ICC'யால தடை வாங்கினாரு...அதெல்லாம்
மறக்காம இருக்க பச்சை குத்திட்டு இருக்காரு.
கேள்வி : அப்ப அவருக்கு எதுதான் நினைவிருக்கும்?
டாக்டர் : அவர் குடும்பம்,வழக்கமா பண்ற வேலைகள்,ம்.ம்....ம்ம்...கோச்'சோட சண்டை போடுறது,சட்டைய கழற்றி சுத்துறது.அப்புறம் அந்த 'incident' நடந்தபோது நிகழ்ந்த சம்பவங்கள் அதெல்லாம் மறக்கமாட்டார்...இன்னைக்கும் அவர்தான் 'கேப்டன்'னு நினைச்சிட்டு இருக்கார்னா பாத்துக்கோங்க...
கேள்வி : இவர் பிரச்சனை தீர என்னதான் வழி ?
டாக்டர் : அது BCCI,ICC' கிட்டதான் இருக்கு.டீமோட நிரந்தர கேப்டனா இவர அறிவிக்கனும்.
ஒரு ரன் எடுத்தா நூறு ரன் எடுத்த மாதிரினு சொல்லனும்.இவர் பேட்டிங் பண்ணும் போது,இவரே விருப்பபடும்போதுதான் அம்பயர் அவுட் குடுக்கனும்.இதெல்லாம் நடந்தா இவர் பழையப்படி ஆகிடுவார்...
கேள்வி : 10 digit'la ஒரு நம்பர் இருக்கே...மொபைல் நம்பர்'னு நினைக்கிறேன்...யாரோட நம்பர் டாக்டர் அது ?
டாக்டர் : ஓ..நீங்களும் பாத்துடீங்களா அத... அது நக்மா'வோட நம்பர். இவர்தான் இப்படி ஆயிட்டாரே,நானாவது ட்ரை பண்ணலாம்'னு பாத்தேன்...பாம்பே தாதாக்களுக்கும்,கொல்கத்தா தாதா(dada)க்கும்தான் லக் இருக்கு....எனக்கு லக்' இல்ல.
பிரிந்து சென்ற காதலரை இகழ்வது தனக்கே இழிவாகும் என்பதால், அவருடைய பெருமையைப் பற்றியே என்னுயிர்க் காதல் நெஞ்சம் எண்ணிக் கொண்டிருக்கும்.
0 comments:
Post a Comment