விதியா ? மதியா ? அ’வ’தியா ?
எழுதியவர் தாத்தா கல்பட்டார்
ஒரு கிராமத்துலெ பட்டி மன்றம் ஒண்ணு நடந்தீச்சு. கிராமம் இல்லியா? அங்கெ என்ன கலைவாணர் அரங்கமா கெடெய்க்குது பட்டி மன்றம் நடத்த. ஒரு வீட்டுத் திண்ணெலெ முக்காலி ஒண்ணுமேலெ நடுவர் குந்திகினாரு. அவருக்கு ரெண்டு பக்கமும் எதிர் எதிர் அணிங்க குந்திகினாங்க. ஜனங்கள்ளாம் தரெலெ குந்திகினாங்க.
நடுவர் சொன்னாரு,
"இன்னிக்கி நடடக்கப் போற பட்டி மன்றத்துக்குத் தலைப்பு 'எது பெரிசு? விதியா? மதியா? அவதியா' ங்கறது. ரெண்டு அணிக்கும் பேசுறதுக்காக பல ஊருங்கள்ளேருந்து நம்ம ஊருக்கு பெரியவங்க வந்திருக்காங்க. அவங்க என்ன சொல்றாங்க கேப்போம்" என்று.
"இன்னிக்கி நடடக்கப் போற பட்டி மன்றத்துக்குத் தலைப்பு 'எது பெரிசு? விதியா? மதியா? அவதியா' ங்கறது. ரெண்டு அணிக்கும் பேசுறதுக்காக பல ஊருங்கள்ளேருந்து நம்ம ஊருக்கு பெரியவங்க வந்திருக்காங்க. அவங்க என்ன சொல்றாங்க கேப்போம்" என்று.
ஒரு அணித் தலைவர் ஆரம்பித்தார், "நடுவர் அவர்களே, எதிர் அணிப் பேச்சாளர்களே. கூடி இருக்கும் பொது மக்களே! என்னெக் கேட்டா நான் விதிதான் பெரிசுன்னு சொல்லுவேன். எப்படின்னு கேக்குறீங்களா? இப்ப கூட பாருங்க நான் இன்னிக்கி இங்கெ வந்து பேசுவேன்னு நெனெக்கெவே இல்லீங்க. பக்கத்து டவுனுக்குப் போகலாம்னுதான் பஸ் ஏறினேங்க. வெய்ய வேளெ. நல்ல தூக்கம். பஸ்ஸு நின்னீச்சு. நம்மஊருதான் வந்திடிச்சாகும்னு எறங்கீட்டேங்க. பஸ்ஸும் போயிடிச்சு. அப்பலதான் பாத்தேன் கண்ணுக் கெட்டினதூரம் வரெ பொட்டல் காடுதான். ஒரே தாகம். பக்கத்துல தண்ணி கெடெய்க்கு;மான்னு கூட எறங்கினவங்களெக் கேட்டேங்க. அவங்க சொன்னாங்க ரெண்டு கல்லு தூரம் இந்த வண்டிப் பாதேலெயெ நடந்தா ஒரு கிராமம் வரும். அங்கெ தண்ணி கெடெக்கும்னு. நான் நெனெக்கெவே இல்லீங்க எங்கெ வருவேன். ஒங்க முன்னாடி பேசுவேன்னு. அத்யுதாங்க விதி. நீங்களே சொல்லுங்க விதி பெரிசா இல்லியான்னு"
எதிர் அணித் தலைவர் படக்கென்று எழுந்தார். "அய்யா நடுவரே, மகா ஜனங்களே, இப்போ பேசினாரே விதிதான் பெரிசு
முதலில் பேசியவர் ஆக்ரோஷத்தோட எளுந்து சொன்னாரு, "என்னெயப் பத்தின சொந்த தகவல்களெ இங்கெ எதிர் அணித் தலைவர் தனக்கு சாதகமா உபயோகிச்சுக் கிட்டதுக்கு நான் அவரெ வன்மையாகக் கண்டிக்கிறேன்."
"அமைதி அமைதி" என்றபடி மேலும் கீழுமாக கையெ அசெச்சுகிட்டு நடுவர் தலெயெ ரெண்டு கையாலேயும் அளுத்திப் புடிச்சுகிட்டு சொன்னாரு,
"அய்யா விதியும் பெரிசில்லெ மதியும் பெரிசில்லெ. ஒங்க சண்டெயெத் தீத்து வெய்க்க நான் படுற அவதிதான் பெரிசு"ந்னு.
"அய்யா விதியும் பெரிசில்லெ மதியும் பெரிசில்லெ. ஒங்க சண்டெயெத் தீத்து வெய்க்க நான் படுற அவதிதான் பெரிசு"ந்னு.
கூட்டத்தில் இருந்த ஒருத்தரு தன் ஒரத்த குரலிலெ ஆரம்பிச்சாரு, "அய்யா ந...ந...நடுவரே வி...வி...விதியும் பெ...பெ...பெரிசில்லெ. ஒங்க அவதியும் பெ...பெ...பெரிசில்லெ. நி...நி...நீங்கள்ளாம் கு...கு...குந்திரிக்கீங்களே அந்தத் தி...தி...திண்ணெதான் பெ...பெ...பெரிசு. ஏன்னா நா...நா...நாங்க இங்கெ சு...சு...சுடுற த...த...தரெலெ கு...கு...குந்திகீறோம். நி...நி...நீங்க சொ...சொ...சொகமாமாத் தி...தி...திண்ணேலெ கு...கு...குந்திகீறீங்க."
ன்னு.
ன்னு.
என்னங்க எதுனாச்சியும் புரிஞ்சீச்சுங்களா?
நடராஜன் கல்பட்டு
0 comments:
Post a Comment