ஹைதராபாத்.... இந்தியாவின் சிறந்த விமான நிலையம்!
விமானப் போக்குவரத்தில் இன்று உலகின் முன்னணி நாடுகளில் ஒன்றாகத் திகழ்கிறது இந்தியா. முன்பு தூங்கி வழிந்து கொண்டிருந்து இந்திய விமான நிலையங்கள் தற்போது மகா சுறுசுறுப்பாகக் காட்சியளிக்கின்றன. முக்கியமாக பெரிய விமான நிலையங்களை தனியார் நிறுவனங்களுடன் இணைந்து நவீனப்படுத்தி வருகிறது விமானப் போக்குவரத்து இயக்கம்.
இங்கிலாந்தைச் சேர்ந்த ஸ்கைட்ராக்ஸ் நிறுவனம், சமீபத்தில் இந்தியாவின் சிறந்த விமான நிலையமாக ஹைதராபாத்தை தேர்வு செய்துள்ளது. வாடிக்கையர் திருப்தி, விமானங்களின் வருகை, செக் இன் செய்யப்படும் முறை என பல்வேறு விஷயங்களில் பயணிகளின் திருப்தியை அடிப்படையாகக் கொண்டு ஹைதராபாத்துக்கு இந்த கவுரவத்தை அளித்துள்ளது இந்த நிறுவனம்.
இது தவிர இந்தியாவின் சிறந்த 10 விமான நிலையங்களையும் அறிவித்துள்ளனர்.அந்த வகையில் ஹைதராபாத் உள்பட இந்தியாவின் சிறந்த 10 விமான நிலையங்கள்...
1. ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையம் [^], ஹைதராபாத்
ஹைதராபாத் நகரிலிருந்து 25 கிமீ தூரத்தில் உள்ளது இந்த விமான நிலையம்.
ஆண்டுக்கு 4 கோடி பயணிகளைக் கையாளும் திறன் கொண்ட இந்த விமான நிலையத்தில் எவ்வளவு பெரிய விமானமும் தரையிறங்கலாம்.
இந்திய அரசும் ஜிஎம்ஆர் நிறுவனமும் இணைந்து உருவாக்கியுள்ள விமான நிலையம் இது. ஆந்திரப் பிரதேச அரசு மற்றும் மலேசிய ஏர்போர்ட்ஸ் ஹோல்டிங்க்ஸ் ஆகியவையும் இதன் பங்குதாரர்கள். 31 மாதங்களில் கட்டப்பட்டு கடந்த மார்ச் 2008-ல் பயன்பாட்டுக்குவிடப்பட்டது. இதில் 13 லவுஞ்ச்கள் உள்ளன.
சுற்றுச்சூழலுக்கு உகந்த முறையில் அமைக்கப்பட்டுள்ள இந்த விமான நிலையத்துக்கு 'Leadership Energy and Environment Design' விருது வழங்கப்பட்டது. உலகிலேயே இந்த விருது பெற்ற முதல் விமான நிலையம் ஹைதராபாத்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
2. இந்திரா காந்தி சர்வதேச விமானநிலையம், டெல்லி
நாட்டின் மிகப்பெரிய விமான நிலையம் இதுவே. ஜிஎம்ஆர் குழுமம், ஏர்போர்ட்ஸ் அத்தாரிட்டி ஆப் இந்தியா, ப்ராபோர்ட் மற்றும் மலேசியன் ஏர்போர்ட் ஹோல்டிங்க்ஸ் ஆகிய நிறுவனங்களின் கூட்டு முயற்சியில் கட்டப்பட்டுள்ளது. மூன்று டெர்மினல்கள் உள்ளன.
இதில் மூன்றாவது டெர்மினல் மிக சமீபத்தில் கட்டப்பட்டது. உலகத் தரத்தில் அமைந்த இந்த மூன்றாவது டெர்மினல் சர்வதேச நாடுகளையும் வியக்க வைத்துள்ளது. அத்தனை நவீன வசதி. உலகின் எட்டாவது பெரிய பயணிகள் டெர்மினல் இதுவே. இந்த ஒரு டெர்மினலில் மட்டும் 34 மில்லியன் பயணிகள் வந்து போகமுடியும், ஆண்டுக்கு.
ஆட்டோமேடிக் பார்க்கிங் வசதி உண்டு. ஒரே நேரத்தில் 4300 கார்களை 7 அடுக்குகளில் நிறுத்தலாம்.
இரண்டடுக்கு கட்டடமாக உள்ள இந்த மூன்றாம் டெர்மினலில் 168 செக்-இன் கவுண்டர்கள் உள்ளன. 48 விசாரணை அல்லது தொடர்பு கவுன்டர்கள், 78 ஏரோபிரிட்ஜஸ், 72 இம்மிக்ரேஷன் கவுன்டர்ஸ், 15 ஸ்கேன் கவுன்டர்கள் என பிரமாண்ட வசதிகள் இங்குள்ளது.
3. சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையம், மும்பை
தெற்கு ஆசியாவில் அதிக பயணிகளைக் கையாளும் விமான நிலையம் என்ற பெருமைக்குரியது மும்பை விமான நிலையம். முன்பு சர்வதேச விமானங்கள் மற்றும் உள்ளூர் விமானங்களுக்கு தனித்தனி டெர்மினல்கள் இருந்தன.
இப்போது அவை ஒன்றாக்கப்பட்டு சத்ரபதி சிவாஜி விமான நிலையமாக மாற்றப்பட்டுள்ளது. ஜிவிகே இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்துடன் இணைந்து இந்த புதிய விமான நிலையம் 2006-ல் உருவாக்கப்பட்டது.
4. நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சர்வதேச விமான நிலையம், கொல்கத்தா
கிழக்கு இந்தியாவின் பெரும் விமான சேவை மையம் கொல்கத்தா சர்வதேச விமான நிலையம். பங்களா தேஷ், பாங்காக் போன்ற பகுதிகளுக்கு இங்கிருந்துதான் செல்ல வேண்டும்.
ஆண்டுக்கு 8.5 மில்லியன் பயணிகளை கையாளும் திறன் கொண்டது இந்த விமான நிலையம்.
5. சென்னை சர்வதேச விமான நிலையம், சென்னை
நகருக்குள்ளேயே அமைந்துள்ள ஒரே விமான நிலையம் என்ற பெருமை கொண்டது சென்னை விமான நிலையம். புதிதாக இரண்டாவது டெர்மினல் அமைக்கப்பட்டு வருகிறது. ரூ 2350 கோடி செலவில் அதிநவீனமயமாக்கப்பட்டு வருகிறது.
கட்டுமானப் பணிகள் முடிந்த பிறகு ஆண்டுக்கு 50 மில்லியன் பயணிகளைக் கயாளும் திறன் கொண்ட முன்னணி விமான நிலையமாகத் திகழவிருக்கிறது சென்னை.
6. சர்தார் வல்லபபாய் பட்டேல் சர்வதேச விமான நிலையம், அகமதாபாத்
நாளொன்றுக்கு 150 விமானங்களைக் கையாளும் இந்த விமான நிலையம் 1124 ஏக்கரில் பரந்து விரிந்துள்ளது. மூன்று டெர்மினல்களைக் கொண்ட அகமதாபாத் விமான நிலையத்துக்கு நாட்டின் அனைத்துப் பகுதியிலிருந்தும் விமானங்கள் உண்டு.
ஆகஸ்ட் 14 முதல் இதன் புதிய டெர்மினல் இயக்கப்படுகிறது.
7. லோக்ப்ரிய கோபிநாத் போர்டோலாய் சர்வதேச விமான நிலையம், கவுகாத்தி
ஏர்போர்ட்ஸ் அத்தாரிட்டி ஆப் இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த விமான நிலையம் இந்திய விமானப் படைத் தளமாகவும் செயல்படுகிறது. முதன்முதலாக அசாம் மாநிலத்தின் முதல்வராக இருந்தவரும் சுதந்திரப் போராட்ட வீரருமான கோபிநாத் போர்டோலாய் பெயரில் அமைக்கப்பட்டுள்ளது.
கிழக்காசிய நாடுகளின் முக்கிய நகரங்களுக்கு இங்கிருந்து விமான சேவை உண்டு. எதிர்காலத்தில் இந்த விமான நிலையத்தை பெருமளவில் விஸ்தரித்து, கிழக்கு இந்தியாவின் முதன்மை விமான நிலையமாக்க மத்திய அரசு [^] திட்டமிட்டுள்ளது.
8. ராஜா சான்ஸி சர்வதேச விமான நிலையம், அமிர்தசரஸ்
தினசரி 90 விமானங்களைக் கையாளும் அமிர்தசரஸ் விமான நிலையம், சமீபத்தில்தான் முற்றாகப் புதுப்பிக்கப்பட்டது. முன்பு வெறும் 12770 சதுர கிலோமீட்டர் பரப்பளவிலிருந்த இந்த விமான நிலையம்,
இப்போது 40175 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ளது. அனைத்து நவீன வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. கடந்த 2009-ம் ஆண்டுதான் திறக்கப்பட்டது.
9.டபோலிம் விமான நிலையம், கோவா
கோவா மாநிலத்தின் ஒரே விமான நிலையம் இது. இந்திய ராணுவத்தின் விமானப் படைத் தளமாகவும் இது செயல்படுகிறது. இதந் ஏர் ட்ராபிக் கண்ட்ரோல் இந்தியக் கடற்படை வசமுள்ளது.
நாளொன்று 250 விமானங்கள் வருகை மற்றும் புறப்பாட்டுக்கேற்ற வகையில் கட்டப்பட்டுள்ளது கோவா விமான நிலையத்தின் உள்நாட்டு முனைமம்.
வெளிநாட்டு முனைமம் 1996-ல் கட்டப்பட்டது. இப்போது புதிய டெர்மினல் கட்டப்பட்டு வருகிறது.
10. பெங்களூரு சர்வதேச விமான நிலையம், பெங்களூரு
பெங்களூரிலிருந்து 40 கிமீ தொலைவில் உள்ளது இந்த விமான நிலையம். 4000 ஏக்கரில் அமைந்துள்ள இந்தப் புதிய விமான நிலையம் 2008 முதல் செயல்படுகிறது. 2009-ல் நாளொன்றுக்கு 280 விமானங்களைக் கையாண்டது இந்த விமான நிலையம்.
பெங்களூரிலிருந்து இந்தியா மற்றும் உலகின் 50 முக்கிய நகரங்களுக்கு தினசரி விமானங்கள் இயக்கப்படுகின்றன.
தற்போது 9 மில்லியன் பயணிகளைக் கையாளும் பெங்களூரு விமான நிலையம், 2015-ல் 17 மில்லியன் பயணிகளைக் கையாளும் அளவுக்கு தரம் உயர்த்தப்பட உள்ளது.
11. கொச்சி சர்வதேச விமான நிலையம், கொச்சி
கொச்சியிலிருந்து 30 கிமீ தூரத்தில் நெடும்பாசேரி என்ற இடத்தில் உள்ளது இந்த விமான நிலையம்.
ரூ 31500 கோடியில் கட்டப்பட்டு, நாட்டிலேயே பொதுத்துறை நிறுவனமாக அறிவிக்கப்பட்ட முதல் விமான நிலையம் இதுதான். 30 நாடுகளைச் சேர்ந்த 10000 என்ஆர்ஐகள் இந்த விமான நிலையத்தில் முதலீடு செய்துள்ளனர்.
பிரிந்து சென்ற காதலரை இகழ்வது தனக்கே இழிவாகும் என்பதால், அவருடைய பெருமையைப் பற்றியே என்னுயிர்க் காதல் நெஞ்சம் எண்ணிக் கொண்டிருக்கும்.
0 comments:
Post a Comment