தங்கள் மகிழ்ச்சிக்கும் & அடுத்தவர்களின் மகிழ்ச்சிகும் உதவுங்கள் !
’அடுத்தவர்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் அவர்களுக்கு உதவி செய்யுங்கள்.நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று நினைத்தால் பிரதிபலனே பாராமல் அடுத்தவர்களுக்கு உதவுங்கள்’- தலாய்லாமவின் பொன்மொழி தான் இது.
இதனை எல்லோராலும் விளக்க முடியாது , இதனை அனுபவபூர்வமாக அனுபவித்தவர்கள் மட்டுமே உணர முடியும்.
பள்ளி செல்லும் சிறுவர்-சிறுமிகளுக்கு பாடப்புத்தகமோ இல்ல பேனாவோ வாங்குவதற்கு காசு கொடுத்துவிட்டு , ஏதோ என்னாலான உதவிகளை நான் செய்கிறேன், என்று பலர் தங்களைத் தாங்களே திருப்திப்படுத்திக்கொள்வதுண்டு. ஆனால் இதுபோன்ற செயல்களுக்குப் பெயர் உதவி இல்ல. அதனால் இப்படி செய்வதை நிறுத்திவிட வேண்டாம். எந்தவித பிரதிபலனும் எதிர்பாராமல் அடுத்தவர்களுக்கு உதவி செய்தால் மட்டுமே அளவில்லாத பரிபூரணமான சந்தோசத்தை உங்களால் அனுபவிக்க முடியும்.என்பதைத்தான் வலியுறுத்துகிறேன்.
நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தான் உண்டு தன் மனைவி உண்டு என்று தான் பெரும்பாலானோர் இருக்கின்றனர். விற்கும் விலை வாசியில் எங்களால் மற்றவர்களுக்கு எப்படி உதவ முடியும்? என்று கூட சிலர் கேட்கலாம். மனம் இருந்தால் மார்க்கமுண்டு , உதவ வேண்டும்னெறு எண்ணம் இருந்தால் எப்படியும் உதவலாம். இளைஞர்கள் டாஸ்மார்க் செல்வதையோ இல்ல சிகரெடையோ குறைத்துக்கொண்டு ஏழை எளியோர்க்கு ஒருவேளை சாப்பாடு வாங்கி கொடுக்கலாம், உடுத்த நல்ல ஆடைகள் வாங்கிக்கொடுக்கலாம். ஓர் உதாரணத்துக்கு மட்டுமே இதை சொல்லுகிறேன்.
நீங்க அடுத்தவர்களுக்கு உதவினால் ஆண்டவன் உங்களுக்கு உதவுவான். எப்படி என்று இந்தக் கதையை படியுங்கள் புரியும் .
கண்ணனுக்கு வயது முப்பத்திரண்டு.இந்தச் சின்ன வயசுக்குள் அவன் அனுபவித்துவிட்ட சோதனைகள் மிக மிக அதிகம்.வாழ்ந்து கெட்ட குடும்பத்தைச் சேர்ந்த அவன்.வயிற்றுப் பிழைப்புக்காக ஒரு மெக்கானிக் ஷாப்பில் குறைந்த சம்பளத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்தான். ஒரு நாள் இரவு நேரம் கண்ணனை அழைத்து டிபன் வாங்கிவரச்சொன்னார் முதலாளி. ரிப்பேருக்கு வந்திருந்த ஆட்டோவை எடுத்துக்கொண்டு கண்ணன் கிளம்பினான்.அப்போது பேய் மழை பெய்துகொண்டு இருந்த்து.தூரத்தில் வயது முதிர்ந்த ஒரு பெரியவர் ஒதுங்க இடமில்லாமல் பெட்டி படுக்கைகளுடன் மழையில் நனைந்த கோழிக்குஞ்சு மாதிரி நனைந்தபடி நின்றுகொண்டிருந்தார்.கண்ணன் அவர்ருகில் சென்று ஆட்டோவை நிறுத்தினான்.
என்ன சார் ! என்னாச்சு ? என்று விசாரித்தான்.தான் பயணம் செய்த பஸ் பிரேக்டெளன் ஆகி நடுவழியில் நின்று விட்டதாகவும் மற்ற பயணிகள் எல்லாம் லாரி ,ட்ரக் என்று பிடித்துச் சென்று விட்டதாகவும் ,தான் மட்டும் கடந்த ஒரு மணி நேரமாக வாகனம் எதுவும் கிடைக்காமல் இங்கே மழையில் நனைந்து கொண்டிருப்பதாகவும் வெட வெட்த்த குரலில் கூறினார் அந்தப்பெரியவர்.
அவரைப் பார்த்து இரக்கம் கொண்ட கண்ணன் , இந்த ராத்திரி நேரத்துல இந்த ரூட்டில் பஸ் ஒன்னும் கிடையாது சார், பேசாம ஆட்டோவில் ஏறி உட்காருங்க.இங்கிருந்து கொஞ்ச தூரம் போனா அங்கே ஏதாவது டாக்ஸி கிடைக்கும்.அதுல நீங்க செளகரியமா உங்க ஊருக்குப் போயிடலாம் ! என்றான். நன்றி பொங்கத் தலையாட்டிவிட்டு ஆட்டோவில் ஏறி அமர்ந்தார் அவர். அடுத்த ஐந்தாவது நிமிடம் அவரை ஒரு டாக்ஸி பிடித்து ஏற்றி,வழி அனுப்பினான் கண்ணன். பெரியவர் அவன் கைகளைப் பிடித்துக்கொண்டு தப்பா நினைக்கலைனா இதை வெச்சுக்கோப்பா !என்று சில ரூபாய் நோட்டுகளை கண்ணனின் கையில் திணிக்க , கண்ணன் வெடுக்கென்று கைகளை உருவிக்கொண்டான்.
இதுக்கெல்லாம் காசு வேணாம் சார். நடு ரோட்டில் பரிதாபமாக நின்னுட்டு இருந்தீங்களேன்னு லிஃப்ட் கொடுத்தேன்.அவ்வளவு தான் ! இதே மாதிரிதான் முன்னே ஒரு சமயம் எங்க அப்பா முன்பின் தெரியாத இடத்துல வழிபுரியாம தவிச்சிட்டுருந்தப்போ யோரோ ஒருத்தர் வந்து தனக்கு உதவி பண்ணினதா சொல்லிருக்கார்.இப்ப உங்களுக்கு நான் உதவி செய்தேன்.இந்த உதவிச் சங்கிலி அறுந்துடாம இருக்க நீங்க இதேபோல வேற யாருக்காவது உதவி செய்யுங்க ! என்று டயலாக் பேசிட்டு ஆட்டோவை கிளப்பிக் கொண்டு பறந்தான் கண்ணன்.
டாக்ஸி நகர ஆரம்பித்த பிறகுதான் பெரியவருக்கு தான் ஒழுங்காக ஊர் போய்ச் சேர்ந்துவிடுவோம் என்ற பாதுகாப்பி உணர்வு வந்தது. உடனே பசியும் வந்தது. அவர் டாக்ஸி ட்ரைவரைப் பார்த்து , தம்பி நான் சாப்பிட்டு நாலு மணி நேரத்துக்கு மேல ஆகுது , இனிமே என்னால தாங்க முடியாது. உடனடியா நான் சாப்பிடலைன்னா எனக்கு மயக்கமே வந்துடும்.அதனால் வழியில ஓட்டல் ஏதாவது இருந்தா நிறுத்தேன் என்றார்.அதற்கு ட்ரைவர் சார் , இந்த வழியில ஓட்டல் ஏதும் இல்லீங்களே.. ஏழை ஜன்ங்க வசிக்கிற பகுதியாச்சுங்களே இது ! என்றான்.டாக்ஸி மெதுவா ஓடிக்கொண்டிருக்க ,சாலை ஓரத்தில் ஒரு குடிசைக்கு வெளியே ஒரு பெண்மனி இட்லி சுட்டு விற்றுக்கொண்டுருப்பதை யதேச்சையாகப் பார்த்துவிட்டார் அந்தப் பெரியவர்.டிரைவரிடம் டாக்ஸியை நிறுத்தச் சொன்னார். என்ன சார் , இங்கையா சாப்பிடப் போறீங்க ? என்று டிரைவர் முகம் சுளித்த்தைக் கூடப் பொருட்படுத்தாமல் இறங்கி விறுவிறுவென்று நடந்து சென்றார்.திருப்தியாக அந்தப் பெண்மணியிடம் ஏழெட்டு இட்லியை வாங்கிச் சாப்பிட்டார்.பின்னர் கை கழுவிக்கொண்டு எவ்வளவுமா ஆச்சு ? என்று கேட்க எட்டுரூபாய் கொடு சாமி என்றாள் அவள். பெரியவர் தன் பர்ஸில் இருந்து ஆயிரம் ரூபாய் நோட்டு ஒன்றை எடுத்து நீட்ட,ஐயோ சாமி,இதுக்கு சில்லறை கொடுக்க நான் எங்க போவேன் ? என்று பதறினாள் அவள்.
அதற்கு அந்தப் பெரியவர், நீ பாக்கி எதுவும் எனக்குத் தர வேண்டாம்மா ! எனக்கு உதவி தேவைப்பட்ட போது யாரோ முன்பின் தெரியாத ஒரு புண்ணியவான் தேடிவந்து எனக்கு உதவி செய்தார்.இப்பவும் பசியில உயிர் போகிற மாதிரி துடிச்சிட்டுருந்தப்போ அன்னலட்சுமியா என் எதிர்ல வந்து என் பசியைப் போக்கினே.இது இட்லிக்கான பைசா இல்லே. என் நன்றிக்கான அடையாளம்.உன் மடியில இருக்கிற குழைந்த சளியும் இருமலுமா அவதிப்பட்டுக்கிட்டிருக்கே... அதை ஆஸ்பத்திரியில காட்டி,மருந்து வாங்கிக்க இந்தா பணத்தை வெச்சுக்கோ ! நான் வரேன்,என்று அவளிடம் விடைபெற்றுக்கொண்டு புறப்பட்டார் பெரியவர்.பெரியவர் பயணித்த கார் சென்ற திசையையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தாள் அந்தப் பெண்.அவள் கடையின் முன் ’கிரிச்’ என்ற சத்ததுடன் ஒரு ஆட்டோ வந்து நின்றது.
வந்தவன் ஆட்டோவை விட்டு இறங்கும் வரைகூட காத்திருக்காமல்,யோவ் குழந்தைக்குக் காய்ச்சல் அடிக்குது.டாக்டர்கிட்ட போலாம்னா காசு இல்லீயே’னு கவலைப் பட்டுட்டு இருந்தீயே.. கடவுளாப் பார்த்து கண் திறந்திட்டார், யோரோ ஒரு பெரியவர் வந்து ஆயிரம் ரூபா கொடுத்திட்டு போனார்.உடனே கிளம்பு டாக்டர் கிட்ட போய் நம்ம குழந்தையைக் காட்டி மருந்து வாங்கிட்டு வரலாம் ! என்று அவள் பரபரப்பும் உற்சாகமுமாகச் சொல்ல, ஆச்சரியத்தில் உறைந்தவனாக எதிரே நின்றிருந்தான் கண்ணன்.
டிஸ்கி :
இக்கதை எங்கையோ எப்பையோ படித்தது !
பிரிந்து சென்ற காதலரை இகழ்வது தனக்கே இழிவாகும் என்பதால், அவருடைய பெருமையைப் பற்றியே என்னுயிர்க் காதல் நெஞ்சம் எண்ணிக் கொண்டிருக்கும்.