இயற்கை எனது நண்பன், வாழ்க்கை எனது தத்துவ ஆசிரியன், வரலாறு எனது வழிகாட்டி - தமிழீழ தேசிய தலைவர் யோசிப்பதானால் நிதானமாக யோசியுங்கள், செயல்படுவதானால் உறுதியுடன் செயல்படுங்கள், விட்டுக் கொடுப்பதனால் பெருந்தன்மையுடன் விட்டுக் கொடுங்கள். எதிர்ப்பதனால் துணிந்து எதிர்த்து நில்லுங்கள்

என்னுடைய நான்,

உலகம் பிறந்தது எனக்காக, ஓடும் நதிகளும் எனக்காக, இன்னும் உலகின் அனைத்து ஏற்பாடுகளும் எனக்காக, ஆனால் நான் யாருக்காக ?

நகரம் விமர்சனம்

நகரம் – நரகம்

நகரம் படம் மொக்கை , நகரம் படத்தில் என்ன கதை இருக்கிறது ? நகரம் பட்த்தை பற்றி எழுத வேண்டிய அவசியம் என்ன ? என பல கேள்விகளை உங்களுக்குள் கேட்டுக்கு கொண்டே இதனை படிப்பீர்கள் என நம்புகிறேன் . நகரத்தை பற்றி ஏற்கனவே ஏகப்பட்டோர் பலவிதமான விமர்சனத்தை கொடுத்திருப்பார்கள் , இவன் என்ன எழுத போகிறான் என்ற எண்ணத்துடன் படிக்க போகும் நண்பர்களே உங்களுக்கு வணக்கம்  ,

நகரம் விமர்சனம் :



ஆரம்பத்திலையே ஹீரோவை ஸ்டெச்சரில் அள்ளிக்கொண்டு போக வைக்கிறார் டைரக்டரும், கதாநாயகனுமான சுந்தர்.சி , அப்புறம் காமடிங்கிற பேர்’ல நீதிமன்றத்தில் ஒரு சில நொடிகள் மொக்கையா வசனங்களோட ஆரம்பிக்கும் படம் நிதானமாக ஹீரோவை பெரிய ரவுடியாக காட்டும் , ஹீரோவை காதலித்தே ஆகவேண்டும் என்கிற கோட்பாடுடன் (இன்னும் தமிழ்படவுலகில் மாறலப்பா ) தனது என்ரீயை தரும் ஹீரோயின் . காவல் நிலையத்தில் நிலவும் இவர்கள் சந்திப்பு ஒரு சில நிமிட்த்து பார்வை பறிமாற்றத்திலையே காதல் வந்துவிட்ட்து என அடுத்த காட்சியில் தெளிவா சொல்லிருப்பார் டைரக்டர், புறாவை பறக்க விட்ட்தும் ஹீரோயின் ஒரு சிரிப்பு சிரிச்சிட்டு (லவ்ஸ் அங்கேயும் ஸ்டாட் ஆகிருச்சாம் ) தான் இங்கு வந்ததே உன்ன பிடிச்சிருக்குன்னு சொல்லுவதுக்குதான் என்று காதலை புது விதமாக சொல்லுவதும் (வெளங்கிடும்) , தன் காதலனிடம் இனிமேல் சண்டைபோடக்கூடாதுன்னு சத்தியம் வாங்குவதும் தனது நண்பனுக்காக சத்தியத்தை மீறின காதலனை சண்டை போடும் என்ற நோக்கமே இல்லமால் சண்டை போடும் ஹீரோயின் (இன்னும் ரொம்ப டீப்பா சொல்லிருக்கலாம்) படத்தில் கதை என்று குறிப்பிட்டு சொல்ல எதுவும் இல்லை என்ற போதும் , உண்மையான நண்பன் எப்படி இருக்க வேண்டும் என்பதை நடித்து காட்ட முயற்சி செய்திருக்கும் சுந்தர்.சி, இன்னும் கூடுதல் கவனம் செலுத்திருக்க வேண்டும் , நல்ல ஒரு விசயத்தை ரொமப் அழுத்தமாக குறிப்பிடாத விசயம் தவறு , பட்த்தில் பிடித்த விசய்ம் ஒரு நண்பனுக்காக தனது காதலியுடனான கல்யாணத்தை விட்டு செல்வதுவும் ,காதலி கேக்கும் கேள்விக்கு எனக்கு நண்பன் தான் முக்கியமென்று செல்வதும் நண்பனே வாழ்வில் முக்கியமென உணர்த்திருக்கிறார் ,ஆனாலும் கடேசியில் தனது உடன் நண்பனே ஆப்பு வைக்கிறான் என்று தெரிந்தவுடனே அவனை தான் கொல்லவும் மனமில்லாமல் ,காப்பாற்றவும் எண்ணமில்லாமலும் வருவது சற்று குறைத்து மதிப்பிட வைத்திருக்கீறார் ,நீ என்னை மாதிரியே நண்பனுக்கா உயிரையே கொடுப்பன்னு நினைத்தேன் ,ஆனா நீ ஏமாத்திட்ட ,
டேய் உயிரே போனாலும் நண்பன விட்டுக்கொடுக்க கூடாது’னு அப்பாவி தனமா பேசும் சுந்தர்.சிய பாத்து நமக்கு சிரிப்பதா அழுவதான்னே தெரியதது சோகம் :(, கடேசியும் தனது இன்னொரு நண்பன் தனது கஞ்சிக்காக,வாழ்க்கைக்காக ,பணத்துக்காக எதிரியுடன் சேர்வது இயல்பு :)


வடிவேல் வெடிவேல் :


சில மாதங்களாய் ஆளை காணாமல் இருந்த வடிவேல் தனது டெர்ர் முகத்தை இதில் காண வைத்து அதிரடியாக சிரிப்பை மூட்டுகிறார் , என் ஏரியாவுக்கு வாடா , என் தெருவுக்கு வாடா , என் வீட்டுக்கு வாடா என அவருக்கே உரித்தான காமடி கலந்த பாடி லாங்வேஜில் சொல்லிருப்பது படத்துக்கு + பாயிண்ட் தானுங்க , மணி 3 ,லஞ்ச் டைம்,நாங்க அன்னத்துல கை வைக்கற டைம், யார் கன்னத்துலயும் கை வைக்க மாட்டோம்கடேசியாக கதாநாய்கன் வடிவேலின் குடியுருப்புக்கே வந்த பின் அவர் காலை பிடித்துக்கொண்டு கதறி கதறி அழுவதும் ,பின்பு நான் ஒன்னும் பைட்டர் கிடையாது ஒன்லி பாடிலாங்குவேஜ் தான்னு சொல்லுவதும் , அப்புறம் அவரு அதுதாங்க அந்த கதாநாயகரூஊஊ வீடு பாக்கத்தான் வந்திருக்கார்னு தெரிஞ்சவுடனே வீட்டுக்காரம்மாவை கேக்கபோய் வீட்டுக்காரம்மாவை இரு இரு உன்ன வச்சிக்கிறேன்னு பொதுவான வார்த்தையில் சொல்ல அதுக்கு அந்த அம்மா நான் ஏற்கனவே ரெண்டு பேரை வச்சிருக்கேனு சொல்லவும், ரெண்டு பேரா மாமீஈஈஇ நு இவ்வள்வு நாளா நமக்கு தெரியாம போச்சே’னு ஒரு இளிப்ப போடுவாரூஊஉ பாருங்க , அது வடிவேலுக்கே உரித்தானது  , பல பீதிகளுக்கு மத்தி’ல எங்கோ பிறந்து எங்கோ வளந்த உன்ன மாமி மூலம் கடவுள் என்னோட ரூம் மேட்டா ஆக்கிட்டான் ,God Is Great (போட்டு விட்டா வேடிக்கை பார்க்கிற இரு உன்ன வச்சிக்கிறேன்) , பிறந்தநாள் விழாவில் ஒரு முத்த்த்த தப்பான இட்த்தில் பதிவு செய்து தப்பிக்க நினைத்து ஓடும் போது ஒரு குரல் கேக்கும் , சத்தம் போடாம இவளை அவனுக்கே கல்யாணம் பண்ணி கொடுத்திருங்கனு மாமி சொல்லுவதும்,அதுக்கு அந்த பன் சே பெண் அப்படி ஒன்னு நடந்தா ஒன்னையும் கொல்லுவேன் ,அவனையும் கொல்லுவேன்னு பத்திரகாளியா மாறுவதை கேட்ட்தும் அப்படினா இந்த கல்யாணத்து சம்மதிக்க மாட்டேன்னு ஓடுவதும் ஜாலி தான் சத்தியத்த வாங்கிட்டு செத்துபோகும் முத்தக்காளை தம்பிக்காக அண்ணன்கள் இவரை பின் தொடர, பொண்ண கரெக்ட் பண்ணுவதுக்கு முன்னாடி ஆண்டியை கரெக்ட் பண்ணுவேனு உள்ள நுழைந்து நாய்க்கு பன்’ல ஜின்’ன ஊத்தி கொடுப்பதும் ,நாயோட வெளாடும் வெளையாட்டும் சூப்பர் , கடேசியா 100 திருட்டை போஸ்டர் அடிச்சி கொண்டாடும் விழுதுகள் இதுவரை கண்டுபிடிக்காத புது ட்ரெண்டு ,

ஸ்டைல் பாண்டியின் 100 திருட்டு வால்போஸ்டரில் இருந்த விபரம் :

வாழ்த்துகிறோம் !
எங்கள் ஆரூயீர் அண்ணன்
திருடர் குல திலகம் “ஸ்டைல் பாண்டி
அவர்களது
100 வது திருட்டு விழா
வெற்றி பெறவும் மேலும் பல வீடுகளில் திருடி 1000 வது திருட்டு விழாவை கொண்டாட மனமாற வாழ்த்துகிறோம்

இப்படிக்கு :
அண்ணனின் விழுதுகள்

இடம் : 8, சிவன் கோயில் தெரு ,
நாள் ;10:06:2010
நேரம் : இரவு 12 மணி


இத படிச்சவுடனே அழுதுக்கிட்டே , ஒரு தடவ கூட திருடல அதுக்குள்ள டோட்டல் தமிழ் நாடு போலிஸையே முன்னாடி கொண்டு நிப்பாட்டிடாங்க , கடேசியா தன்னுடைய முகம் பதித்த போஸ்டரை போலீஸ் வேனிலையே ஒட்டி வடிவேலை கடுப்பேத்தும் விதம் அழகுதான் :)

சோ முக்கியான விசய்ங்கள் :

இந்த படத்துக்கு நகரம் என்ற பெயருக்கு பதிலா தலைநகரம் Part2 என்று பெயர் வைத்திருக்கலாம் ,ஆனால் இதுவரை தமிழ் படங்களில் பார்ட் 2 வந்த்தில்லை எனபதினாலோ என்னவோ தலையை கத்தரித்து விட்டு நகரம் என்று நரக வேதனையை கெளப்பி விட்டுருக்கிறார்கள் ,டைரக்டரும் ,தயாரிப்பாளரும் :
வடிவேலை மறுபடியும் காமடிக்காக புக் பண்ணியிருப்பது சிறுவர்களை தங்கள் படத்தை பார்க்க வைக்க இழுப்பதுக்காவே ,இது குஸ்புவின் குசும்பு :)
முத்துக்காளையின் வசனம் , நீங்க தான் என்ன விட க்ளாமரா இருக்கீங்க , ஒரு சைடு’ல பாக்கும் போது ”வாழ்வே மாயம்” கமல் மாதிரி இருக்கீங்க’னு சொல்லும் போது இஸீட்’னு இங்கீலிபீசு’ல கேக்க பக்கத்துல இருந்த கருவாயர் புரியாம இஸீட்டு’னு சொல்லும் பகுதி காமடி

இலவச அட்வைஸ் :

நகரம் படமாக பார்ப்பதுக்கு பதிலா வடிவேலின் காமடி பகுதியை மட்டும் பார்த்தால் நேரமிச்சமாகும் :) சிரித்து வாழுங்கள்

ஹைலைட் :

வடிவேலுக்கு பெண் வேடம் அழகாக இருப்பது :) ,டேய் அதென்ன உள்ள வந்து ஆத்து’ல பாயுற மாதிரி பாயுற ’னு கடுப்பாகுவது காமடியே

படத்தில் வடிவேலுவை தவிர மற்ற பகுதிகளை சுருக்கி தந்திருக்க அட்வைஸ் பண்ணியிருக்கலாம் டைரக்டருக்கு , தயாரிப்பாளரும் , டைரக்டரின் பொண்ணாட்டியுமான ,கதாநாயகனின் உண்மை நாயகியுமான குஷ்பு :)

படத்தில் பாடல்கள் தேவையற்றவை , கதாநாயகனுக்கும் ,கதாநாயகிக்கும் சுத்தமா ஒத்து போகவில்லை இருவரில் யாராவது ஒருவரை தவிர்த்திருக்கலாம் , பழைய ப்ரியாவையே (தலைநகர ஹீரோயின்) போட்டுருக்கலாம்

நகரம் எனது பார்வையில் நரகமே ,

0 comments:

Post a Comment

நானுங்கோ !!!

My photo
நான் அன்பாக, பாசமாக, கோபமாக,நட்பாக, அதிகாரமாக, அலட்சியமாக,பணிவாக, குறும்பாக பேசியிருக்கிறேன்.ஆனால் இந்த 24 ஆண்டுகளில் நான் நானாகவே இருக்கிறேன்...!

வாங்க பழகலாம்

திருக்குறள்

காமத்துப்பால்;கற்பியல்;நெஞ்சோடுபுலத்தல்:

1298-எள்ளின் இளிவாமென் றெண்ணி அவர்திறம்
உள்ளும் உயிர்க்காதல் நெஞ்சு.

பிரிந்து சென்ற காதலரை இகழ்வது தனக்கே இழிவாகும் என்பதால், அவருடைய பெருமையைப் பற்றியே என்னுயிர்க் காதல் நெஞ்சம் எண்ணிக் கொண்டிருக்கும்.

அமராவதி ஆத்தங்கரையின் விளக்கம் :

நீ பிரிந்தபிறகும் கூட
உன்னை வெறுக்கத் தோன்றவில்லை என் இதயத்துக்கு…
என் இதயம் நேசித்தவளென்பதால் மட்டுமல்ல
என் இதயத்தை நேசித்தவளென்பதாலும்!


பிரிந்து சென்ற காதலரை இகழ்வது தனக்கே இழிவாகும் என்பதால், அவருடைய பெருமையைப் பற்றியே என்னுயிர்க் காதல் நெஞ்சம் எண்ணிக் கொண்டிருக்கும் .

எனக்குப்பிடித்தவையை இணையத்தில் பிடித்தவை !

வருந்துகிறேன் !!


என் வாழ்நாள் குறைகிறது
என்பதற்காக வருந்தவில்லை...
உன் நினைவில்
வாழும் நாள் குறைகிறது
என்பதற்காக வருந்துகிறேன்... !!!


நன்றி: வாணி நாதன்

நினைவுகள்

குருதிக் குழாய்களுக்குள்
குறுக்கு நெடுக்குமாய்
பாய்ந்துக் கொண்டிருக்கிறது
இதயத்திற்குள் நிரம்பி வழிந்த
உன் நினைவுகள்...!

நன்றி : இமலாதித்தன்


நீ

சுற்றி ஒருமுறை
பார்த்துவிட்டு
உதடு குவித்து
நீ தரும் முத்தத்தில்
பாதியை அப்படியே
அள்ளிக்கொண்டு
போகிறது காற்று....

நன்றி : மழைக்காதலன்

நெஞ்சோடு புலத்தல்

உனக்குத் துணையாக உன்மனம்…
உன்மனதுக்குத் துணையாக என்மனம்…
எனக்குத் துணையாக…
நான் மட்டும் !


நன்றி : ஆத்தங்கரை


Search This Blog

தெரிஞ்சிக்க ! பூமியிலிருந்து சூரியன் சராசரியாக 14,88,00,000 கி.மீ (93,000,000 மைல்) தூரத்திலிருக்கிறது. சூரியனின் ஒளியானது நமது பூமியை வந்தடைய சராசரியாக 8.33 நிமிடம் எடுத்துக்கொள்கிறது. எப்படி கணக்கிட்டார்கள் : 93,000,000 மைல் தூரம் வகுத்தல் 2,97,600 ஓளியின் வேகம் சூரியனுக்கும் பூமிக்கும் இடையேயான இடைவெளி / ஓளியின் வேகம் = 148800000 / 2,97,600 = 500 500 செகெண்ட்ஸ் வகுத்தல் ஒரு நிமிடற்க்கு 60 செகெண்ட்ஸ் 500/60 = 8.33 சூரிய ஒளி பூமியை வந்தடைய எடுத்துக்கொள்ளும் நேரம்

சிந்தனைக்கு

அன்பை விதைப்பவர்கள் நிம்மதியை அறுவடை செய்பவர் .

ஒவ்வொரு முடிவும் மற்ற ஒன்றுக்கான தொடக்கம் .

கல்வி, அனுபவம் , ஜாபக சக்தி இம்மூன்றையும் உன்னிடமிருந்து யாரும் பிரிக்கமுடியாது .

விரும்பியது கிடைக்கவில்லை என்று வருந்தாதே . கிடைத்துள்ளதை விரும்பு .

அருமை அறியாதவன் வீட்டுக்கு போனால் பெருமை குறைந்து போகும் .

எனக்கு பிடிச்ச பாடல் வரிகள் !

மிக மிக கூர்மையாய் என்னை ரசித்தது உன் கண்கள்தான்..
மிருதுவாய் பேசி என்னுள் வாசித்தது உன் வார்த்தை தான்...
கண்களை காணவே இமைகளே மறுப்பதா..

(தாம் தூம் )


"நான்கு கண்ணாடி சுவர்களுக்குள்ளே நானும்மெழுகு வர்த்தியும்


தனிமை தனிமையோ கொடுமை கொடுமையோ "

(சில்லுனு ஒரு காதல்)



"உன் சின்ன இதழ் முத்தம் தின்னாமல்

இந்த ஜன்மம் வீணென்று போவேனோ ??"

(பூவெல்லாம் உன் வாசம்)



"படுத்தும் பொசுக்குனு தூங்கும் பய

பித்துக்குளி போல இப்ப முழிக்குரானே

வெள்ளன எந்திருச்சு ஓடும் பய

சுள்ளுன்னு சூரியன பாக்குறேனே



அவன் பார்த்ததுமே நான் பூத்துவிட்டேன்

அந்த ஒரு நொடியை நெஞ்சில்ஒளித்துக்கொண்டேன்

நான் குழந்தை என்றே நேற்று நினைத்திருந்தேன்

அவன் கண்களிலே என் வயதறிந்தேன்"



(காதல்)



"பேச எண்ணி சில நாள் அருகே வருவேன்

பின்பு பார்வை போதும் என நான் நினைத்தேநகர்வேன் ஏமாற்றி..



இரவும் அல்லாத

பகலும் அல்லாத

பொழுதுகள்

உன்னோடு கரையுமா??!!



கரைகள் அண்டாத

காற்றும் தீண்டாத

மனதுக்குள் எப்போது நுழைந்த்திட்டாய்??!

தடையில்லை சாவிலும் உன்னோடு வர ..."


(சுப்பிரமணியபுரம்)