இயற்கை எனது நண்பன், வாழ்க்கை எனது தத்துவ ஆசிரியன், வரலாறு எனது வழிகாட்டி - தமிழீழ தேசிய தலைவர் யோசிப்பதானால் நிதானமாக யோசியுங்கள், செயல்படுவதானால் உறுதியுடன் செயல்படுங்கள், விட்டுக் கொடுப்பதனால் பெருந்தன்மையுடன் விட்டுக் கொடுங்கள். எதிர்ப்பதனால் துணிந்து எதிர்த்து நில்லுங்கள்

என்னுடைய நான்,

உலகம் பிறந்தது எனக்காக, ஓடும் நதிகளும் எனக்காக, இன்னும் உலகின் அனைத்து ஏற்பாடுகளும் எனக்காக, ஆனால் நான் யாருக்காக ?

தங்கள் மகிழ்ச்சிக்கும் & அடுத்தவர்களின் மகிழ்ச்சிகும் உதவுங்கள் !

தங்கள் மகிழ்ச்சிக்கும் & அடுத்தவர்களின் மகிழ்ச்சிகும் உதவுங்கள் !

’அடுத்தவர்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் அவர்களுக்கு உதவி செய்யுங்கள்.நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று நினைத்தால் பிரதிபலனே பாராமல் அடுத்தவர்களுக்கு உதவுங்கள்’- தலாய்லாமவின் பொன்மொழி தான் இது.
இதனை எல்லோராலும் விளக்க முடியாது , இதனை அனுபவபூர்வமாக அனுபவித்தவர்கள் மட்டுமே உணர முடியும்.


பள்ளி செல்லும் சிறுவர்-சிறுமிகளுக்கு பாடப்புத்தகமோ இல்ல பேனாவோ வாங்குவதற்கு காசு கொடுத்துவிட்டு , ஏதோ என்னாலான உதவிகளை நான் செய்கிறேன், என்று பலர் தங்களைத் தாங்களே திருப்திப்படுத்திக்கொள்வதுண்டு. ஆனால் இதுபோன்ற செயல்களுக்குப் பெயர் உதவி இல்ல. அதனால் இப்படி செய்வதை நிறுத்திவிட வேண்டாம். எந்தவித பிரதிபலனும் எதிர்பாராமல் அடுத்தவர்களுக்கு உதவி செய்தால் மட்டுமே அளவில்லாத பரிபூரணமான சந்தோசத்தை உங்களால் அனுபவிக்க முடியும்.என்பதைத்தான் வலியுறுத்துகிறேன்.
நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தான் உண்டு தன் மனைவி உண்டு என்று தான் பெரும்பாலானோர் இருக்கின்றனர். விற்கும் விலை வாசியில் எங்களால் மற்றவர்களுக்கு எப்படி உதவ முடியும்? என்று கூட சிலர் கேட்கலாம். மனம் இருந்தால் மார்க்கமுண்டு , உதவ வேண்டும்னெறு எண்ணம் இருந்தால் எப்படியும் உதவலாம். இளைஞர்கள் டாஸ்மார்க் செல்வதையோ இல்ல சிகரெடையோ குறைத்துக்கொண்டு ஏழை எளியோர்க்கு ஒருவேளை சாப்பாடு வாங்கி கொடுக்கலாம், உடுத்த நல்ல ஆடைகள் வாங்கிக்கொடுக்கலாம். ஓர் உதாரணத்துக்கு மட்டுமே இதை சொல்லுகிறேன்.


நீங்க அடுத்தவர்களுக்கு உதவினால் ஆண்டவன் உங்களுக்கு உதவுவான். எப்படி என்று இந்தக் கதையை படியுங்கள் புரியும் .



கண்ணனுக்கு வயது முப்பத்திரண்டு.இந்தச் சின்ன வயசுக்குள் அவன் அனுபவித்துவிட்ட சோதனைகள் மிக மிக அதிகம்.வாழ்ந்து கெட்ட குடும்பத்தைச் சேர்ந்த அவன்.வயிற்றுப் பிழைப்புக்காக ஒரு மெக்கானிக் ஷாப்பில் குறைந்த சம்பளத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்தான். ஒரு நாள் இரவு நேரம் கண்ணனை அழைத்து டிபன் வாங்கிவரச்சொன்னார் முதலாளி. ரிப்பேருக்கு வந்திருந்த ஆட்டோவை எடுத்துக்கொண்டு கண்ணன் கிளம்பினான்.அப்போது பேய் மழை பெய்துகொண்டு இருந்த்து.தூரத்தில் வயது முதிர்ந்த ஒரு பெரியவர் ஒதுங்க இடமில்லாமல் பெட்டி படுக்கைகளுடன் மழையில் நனைந்த கோழிக்குஞ்சு மாதிரி நனைந்தபடி நின்றுகொண்டிருந்தார்.கண்ணன் அவர்ருகில் சென்று ஆட்டோவை நிறுத்தினான்.

என்ன சார் ! என்னாச்சு ? என்று விசாரித்தான்.தான் பயணம் செய்த பஸ் பிரேக்டெளன் ஆகி நடுவழியில் நின்று விட்டதாகவும் மற்ற பயணிகள் எல்லாம் லாரி ,ட்ரக் என்று பிடித்துச் சென்று விட்டதாகவும் ,தான் மட்டும் கடந்த ஒரு மணி நேரமாக வாகனம் எதுவும் கிடைக்காமல் இங்கே மழையில் நனைந்து கொண்டிருப்பதாகவும் வெட வெட்த்த குரலில் கூறினார் அந்தப்பெரியவர்.

அவரைப் பார்த்து இரக்கம் கொண்ட கண்ணன் , இந்த ராத்திரி நேரத்துல இந்த ரூட்டில் பஸ் ஒன்னும் கிடையாது சார், பேசாம ஆட்டோவில் ஏறி உட்காருங்க.இங்கிருந்து கொஞ்ச தூரம் போனா அங்கே ஏதாவது டாக்ஸி கிடைக்கும்.அதுல நீங்க செளகரியமா உங்க ஊருக்குப் போயிடலாம் ! என்றான். நன்றி பொங்கத் தலையாட்டிவிட்டு ஆட்டோவில் ஏறி அமர்ந்தார் அவர். அடுத்த ஐந்தாவது நிமிடம் அவரை ஒரு டாக்ஸி பிடித்து ஏற்றி,வழி அனுப்பினான் கண்ணன். பெரியவர் அவன் கைகளைப் பிடித்துக்கொண்டு தப்பா நினைக்கலைனா இதை வெச்சுக்கோப்பா !என்று சில ரூபாய் நோட்டுகளை கண்ணனின் கையில் திணிக்க , கண்ணன் வெடுக்கென்று கைகளை உருவிக்கொண்டான்.

இதுக்கெல்லாம் காசு வேணாம் சார். நடு ரோட்டில் பரிதாபமாக நின்னுட்டு இருந்தீங்களேன்னு லிஃப்ட் கொடுத்தேன்.அவ்வளவு தான் ! இதே மாதிரிதான் முன்னே ஒரு சமயம் எங்க அப்பா முன்பின் தெரியாத இடத்துல வழிபுரியாம தவிச்சிட்டுருந்தப்போ யோரோ ஒருத்தர் வந்து தனக்கு உதவி பண்ணினதா சொல்லிருக்கார்.இப்ப உங்களுக்கு நான் உதவி செய்தேன்.இந்த உதவிச் சங்கிலி அறுந்துடாம இருக்க நீங்க இதேபோல வேற யாருக்காவது உதவி செய்யுங்க ! என்று டயலாக் பேசிட்டு ஆட்டோவை கிளப்பிக் கொண்டு பறந்தான் கண்ணன்.


டாக்ஸி நகர ஆரம்பித்த பிறகுதான் பெரியவருக்கு தான் ஒழுங்காக ஊர் போய்ச் சேர்ந்துவிடுவோம் என்ற பாதுகாப்பி உணர்வு வந்தது. உடனே பசியும் வந்தது. அவர் டாக்ஸி ட்ரைவரைப் பார்த்து , தம்பி நான் சாப்பிட்டு நாலு மணி நேரத்துக்கு மேல ஆகுது , இனிமே என்னால தாங்க முடியாது. உடனடியா நான் சாப்பிடலைன்னா எனக்கு மயக்கமே வந்துடும்.அதனால் வழியில ஓட்டல் ஏதாவது இருந்தா நிறுத்தேன் என்றார்.அதற்கு ட்ரைவர் சார் , இந்த வழியில ஓட்டல் ஏதும் இல்லீங்களே.. ஏழை ஜன்ங்க வசிக்கிற பகுதியாச்சுங்களே இது ! என்றான்.டாக்ஸி மெதுவா ஓடிக்கொண்டிருக்க ,சாலை ஓரத்தில் ஒரு குடிசைக்கு வெளியே ஒரு பெண்மனி இட்லி சுட்டு விற்றுக்கொண்டுருப்பதை யதேச்சையாகப் பார்த்துவிட்டார் அந்தப் பெரியவர்.டிரைவரிடம் டாக்ஸியை நிறுத்தச் சொன்னார். என்ன சார் , இங்கையா சாப்பிடப் போறீங்க ? என்று டிரைவர் முகம் சுளித்த்தைக் கூடப் பொருட்படுத்தாமல் இறங்கி விறுவிறுவென்று நடந்து சென்றார்.திருப்தியாக அந்தப் பெண்மணியிடம் ஏழெட்டு இட்லியை வாங்கிச் சாப்பிட்டார்.பின்னர் கை கழுவிக்கொண்டு எவ்வளவுமா ஆச்சு ? என்று கேட்க எட்டுரூபாய் கொடு சாமி என்றாள் அவள். பெரியவர் தன் பர்ஸில் இருந்து ஆயிரம் ரூபாய் நோட்டு ஒன்றை எடுத்து நீட்ட,ஐயோ சாமி,இதுக்கு சில்லறை கொடுக்க நான் எங்க போவேன் ? என்று பதறினாள் அவள்.

அதற்கு அந்தப் பெரியவர், நீ பாக்கி எதுவும் எனக்குத் தர வேண்டாம்மா ! எனக்கு உதவி தேவைப்பட்ட போது யாரோ முன்பின் தெரியாத ஒரு புண்ணியவான் தேடிவந்து எனக்கு உதவி செய்தார்.இப்பவும் பசியில உயிர் போகிற மாதிரி துடிச்சிட்டுருந்தப்போ அன்னலட்சுமியா என் எதிர்ல வந்து என் பசியைப் போக்கினே.இது இட்லிக்கான பைசா இல்லே. என் நன்றிக்கான அடையாளம்.உன் மடியில இருக்கிற குழைந்த சளியும் இருமலுமா அவதிப்பட்டுக்கிட்டிருக்கே... அதை ஆஸ்பத்திரியில காட்டி,மருந்து வாங்கிக்க இந்தா பணத்தை வெச்சுக்கோ ! நான் வரேன்,என்று அவளிடம் விடைபெற்றுக்கொண்டு புறப்பட்டார் பெரியவர்.பெரியவர் பயணித்த கார் சென்ற திசையையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தாள் அந்தப் பெண்.அவள் கடையின் முன் ’கிரிச்’ என்ற சத்ததுடன் ஒரு ஆட்டோ வந்து நின்றது.

வந்தவன் ஆட்டோவை விட்டு இறங்கும் வரைகூட காத்திருக்காமல்,யோவ் குழந்தைக்குக் காய்ச்சல் அடிக்குது.டாக்டர்கிட்ட போலாம்னா காசு இல்லீயே’னு கவலைப் பட்டுட்டு இருந்தீயே.. கடவுளாப் பார்த்து கண் திறந்திட்டார், யோரோ ஒரு பெரியவர் வந்து ஆயிரம் ரூபா கொடுத்திட்டு போனார்.உடனே கிளம்பு டாக்டர் கிட்ட போய் நம்ம குழந்தையைக் காட்டி மருந்து வாங்கிட்டு வரலாம் ! என்று அவள் பரபரப்பும் உற்சாகமுமாகச் சொல்ல, ஆச்சரியத்தில் உறைந்தவனாக எதிரே நின்றிருந்தான் கண்ணன்.

டிஸ்கி :

இக்கதை எங்கையோ எப்பையோ படித்தது !

மச்சான்ஸ் நமீதா !

நமிதா :

இந்திய திரைப்படங்களில் பேச ஆரம்பித்து இன்றோடு 80 ஆண்டுகள் ஆகிவிட்டது.அதனை கொண்டாடும் தங்களுக்கு இன்னும் ஒரு அதிர்ச்சி தகவல் !


1981ல குஜராத்தில் பிறந்த குல்பி தான் நம்ம மச்சி நமிதா. இளவயதில் அழகாக இருந்த நமீதாவைத்தான் இப்போ நீங்க இங்கே பார்க்க போறீங்க !








1998 குஜராத்தில் சூரத் ப்யூட்டி காண்டெஸ்டில் முதலிடத்தை நமது ஷில்பா ஷெட்டியிடமிருந்து தட்டிச் சென்றிருக்கிறார் என்று சொன்னால் நம்ப முடிகிறதா !? படத்தைப் பாருங்கள்




ஷில்பாவிடமிருந்து வாழ்த்துகளை பெறும் மச்சி நமிதா !


படங்களுக்கு நன்றி : http://gujarationweb.blogspot.com/2009/07/namithas-unseen-beauty-contest-pictures.html

கோப்பையுடன் என் குடியிப்பு என்று கோலமயிலின் புன்னகை :)




வள்ளலார் கூட பாடிருக்காரே “வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் “ அப்படியிருக்கும் போது அழகாக இருந்த ரோஜா காற்றடைத்த்து போல் ஆனால் யாரைத் தான் கவலை சூழாது ,


2001’ல மிஸ் இந்தியா காண்டெஸ்ட்’ல இவர் கலந்து கொண்டிருக்கிறார்.அதில் நாலாவது இடத்தையும் கைப்பற்றிருக்கார் .

கொசுறு தகவல்:

இதில இவருக்கு ஆங்கிலம் தெரியாமல் மொழிப்பெயர்ப்பாளரை பயன்படுத்தியதால் மிஸ் இந்தியா காண்டெஸ்டில் நாலாவது இட்த்துகு பின் தள்ளப்பட்டார்.

தகவலுக்கு நன்றி : http://www.chakpak.com/celebrity/namita/biography/15455


”எங்கள் அண்ணா” படத்தின் மூலமா தமிழுக்கு அறிமுக நம்ம நமிதா வெகுவிரைவில் தமிழ் இளைஞர்கள் மனதில் தீ’யை மூட்டினார். அதனாலோ என்னவோ அவருக்காக இயற்றப்பட்ட பாட்டு :

படம் : கோவை ப்ரதர்ஸ் :

உலகத்தில நீ எங்க வேணாலும் ஏன் பொறந்திருக்க கூடாத ?

கோரஸ் :பொறந்திருக்க கூடாத ?

ஏன் இந்தியாவுல பொறந்த ?

இந்தியாவில நீ எங்க வேணாலும் ஏன் வளர்ந்திருக்க கூடாதா ?

கோரஸ் : வளர்ந்திருக்க கூடாதா ?

ஏன் மும்பை நகரில வளர்ந்த ?

மும்பை நகரில் நீ நிரந்தரமாக இருந்திருக்க கூடாதா ?

கோரஸ் : இருந்திருக்க கூடாதா ?

ஏன் சென்னை பட்டணம் வந்த !

சென்னை பட்டணம் வந்தாலும் எங்க ஏரியா வில எதிர் வீட்ல ஏன் வந்த ?

---

உன்ன பார்த்தோம் ஒடஞ்சி தூள் ஆனோம்
உன்ன பார்த்தோம் நொறுங்கி நூலானோம்
---
நீ பல்லு வேலக்க கையில் ப்ருஷ எடுத்தா

அந்த டூத் ப்ரஷ் கூட தூரிகை ஆச்சு

உன் பலாபல மேனியில்

தொட்டு தவழும் பொது

பல சாதா சோப்பும் சந்தனம் ஆச்சு

நீ சீவும் போது சீப்புக்கு கூட சிங்க பல்லு மொளசாச்சு

நீ வாங்கும் போது ஆவின் பாலும் அடடா அக்மார்க் நெய் ஆச்சே

நீ சர்வீஸ் போட்ட டென்னிஸ் பாலும் டைபிஒய்து வந்து செஞ்சுரி ஏறி படுத்தாச்சே

----
உன்ன பார்த்தோம் ஒடஞ்சி தூள் ஆனோம்
உன்ன பார்த்தோம் நொறுங்கி நூலனோம்
----
நீ சைவம் என்று பொய் சொல்ல வேணாம்

உன் கண்ணுக்குள்ள மீன்கள் உள்ளதடி

பணக்காரி என்று ஒரு கர்வம் வேணாம்

உன் இடுப்ப பார்த்த வறுமை தெரியுதடி

நீ நடக்கும் போது கார்றேண்ட்ட் எடுத்து நெய்வேலிக்கு அனுப்பிடலாம்

நீ சாஞ்சி பாத்தா சரிஞ்சி கெடக்கும் பைசா கோபுரம் நிமிர்ந்திடலாம்

உன் சிரிப்பில் சிந்தும் சில்லறை சேர்த்தால்

இந்திய நாட்டின் மொத்த கடனையும் தீர்த்திடலாம்

----

உன்ன பார்த்தோம் ஒடஞ்சி தூள் ஆனோம்
உன்ன பார்த்தோம் நொறுங்கி நூலனோம்
----

உலகத்தில நீ எங்க வேணாலும் ஏன் பொறந்திருக்க கூடாதா ?

கோரஸ் : பொறந்திருக்க கூடாதா ?

ஏன் இந்தியா வுல பொறந்த ?
இந்தியா வில நீ எங்க வேணாலும் ஏன் வளர்ந்திருக்க கூடாதா ?

கோரஸ் : வளர்ந்திருக்க கூடாதா ?

ஏன் மும்பை நகரில வளர்ந்த ?

மும்பை நகரில் நீ நிரந்தரமாக இருந்திருக்க கூடாதா ?

கோரஸ் : இருந்திருக்க கூடாதா ?

ஏன் சென்னை பட்டணம் வந்த

சென்னை பட்டணம் வந்தாலும் எங்க ஏரியா வுல எதிர் வீட்ல ஏன் வந்த ?

உன்ன பார்த்தோம் ஒடஞ்சி தூள் ஆனோம்
உன்ன பார்த்தோம் நொறுங்கி நூலனோம்

கண்டு மகிழ காணொளி :


பசித்தவனின் விசுவாசத்தை நம்பலாமா ?

முட்டாள் தவளை :



கிணறு ஒன்றில் கங்கா என்ற கிழத்தவளை ஒன்று வசித்து வந்தது. இந்தத் தவளையை அங்கிருந்த மற்ற தவளைகள் அடிக்கடி தொல்லைப் படுத்திக் கொண்டிருந்தது.

மற்ற தவளைகள் கொடுத்த துன்பத்தைப் பொறுத்துக் கொள்ள முடியாத கிழத்தவளை இராட்டினத் தோண்டி வழியே வெளியே வந்து மற்ற தவளைகளை என்ன செய்யலாம்? என்று யோசித்துக் கொண்டிருந்த போது அந்தக் கிணற்றுக்கு அருகிலிருந்த பாம்புப் புற்று அதன் கண்ணில் பட்டது.

"நம்மைத் துன்புறுத்திக் கொண்டிருக்கும் தவளைகளை இந்தப் புற்றிலிருக்கும் குமரன் என்ற பாம்பின் உதவியோடு கொன்று விட்டால் என்ன?" என்கிற எண்ணம் வந்தது.

மெதுவாகப் பாம்புப் புற்றின் அருகில் சென்று பாம்பை நட்புக்கு அழைத்தது.

"உங்களுடைய பரம எதிரியான என்னுடன் நட்பு வைத்துக் கொள்ள வேண்டுமென்று விரும்புவது ஏன்?" என்று கேட்டது அந்த பாம்பு.

"என்னுடன் இருக்கும் சில தவளைகள் என்னை தினந்தோறும் துன்புறுத்தி வருகின்றன. என்னால் பொறுக்க முடியவில்லை. அவற்றை அழிக்கத்தான் உன்னைத் தேடி வந்திருக்கிறேன். வேண்டாதவர்களை எதிரியைக் கொண்டே அழிக்கலாம் என்று நீதி நூலில் கூட சொல்லியிருக்கிறது" என்றது அந்த கிழத்தவளை.

"என்னால் எப்படி உன் இடத்திற்கு வரமுடியும்?"

"நான் வரும் இராட்டினத்தின் வழியாக உன்னை அங்கு அழைத்துச் செல்கிறேன்" என்றது தவளை.

பாம்பும் யோசித்தது.

நாமோ தினமும் உணவிற்காகக் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் போது இப்படி வலிய வந்து உணவிற்கு வழி செய்யும் தவளையின் கோரிக்கையை நாம் ஏன் மறுக்க வேண்டும்? என்று நினைத்தபடி தவளையுடன் அந்த கிணற்றுக்குள் சென்றது.

அந்த பாம்பும் கிணற்றுக்குள் அந்த கிழத்தவளைக்குத் தொல்லை கொடுத்து வந்த தவளைகளை எல்லாம் தின்று அழித்தது. கிழத்தவளையும் மகிழ்ச்சியுற்றது.

ஆனால் அந்த மகிழ்ச்சி நெடுநாள் நீடிக்கவில்லை.

பாம்பு கிழத் தவளையைப் பார்த்து, "உன்னுடைய எதிரிகள் எல்லாம் அழிந்து விட்டபடியால் என் பசிக்கு வேறு ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும்." என்றது

கிழத்தவளையோ, "நண்பரே நீங்கள் வந்த வேலை முடிந்து விட்டது . உங்கள் உதவிக்கு நன்றி. எனக்கு இனி உங்கள் உதவி தேவையில்லை." என்றது.

ஆனால் பாம்போ கோபத்துடன், "உன்னை நம்பித்தான் நான் இங்கு வந்தேன். இப்போது என்னுடைய இடத்தில் வேறு ஏதாவது வந்து குடியேறியிருக்கும். தினந்தோறும் எனக்கு நீயே ஒரு தவளையை உணவாகக் கொடுக்க வேண்டும். இல்லையேல் உன் கூட்டத்தில் இருப்பவர்களை நான் என் விருப்பப்படி பிடித்துத் தின்று என் பசியைப் போக்கிக் கொள்வேன்." என்று அச்சுறுத்தியது.

கிழத்தவளையும் பயந்து போய் தினந்தோறும் ஒரு தவளையை பாம்புக்குக் கொடுத்து வந்தது. கடைசியில் ஒருநாள் அது கிழத்தவளையின் மகனையும் தின்று தீர்த்தது.



இதைக்கண்டு அதிர்ச்சியுற்ற கிழத்தவளையின் மனைவி, "நீங்கள் இந்தக் கொடியவனைக் கொண்டு வந்து நம் குழந்தையை மட்டுமில்லை, குலத்தையே அழித்து விட்டீர்கள். இனி நாமிருவர் மட்டும்தான் பாக்கி. நாமும் அழிந்து விடுவதற்கு முன்பு ஏதாவது சூழ்ச்சி செய்து அந்த பாம்பைக் கொன்று விடுங்கள் அல்லது நாமிருவரும் இங்கிருந்து தப்பித்துச் சென்று விடுவோம்." என்று எச்சரித்தது.

அந்த சமயத்தில் அங்கு வந்த பாம்பு தனக்குப் பசியாக இருப்பதால் "ஏதாவது கொடு" என்று கேட்டது.

உடனே கிழத்தவளையும், "நண்பரே நாங்கள் இருக்கும் வரை நீங்கள் கவலைப்பட வேண்டாம். நான் இப்போதே என் மனைவியை அனுப்பி வேறு கிணற்றிலிருந்து தவளைகளை இங்கே அழைத்து வரச் சொல்கிறேன்." என்று மனைவியை அங்கிருந்து போகச் செய்தது.

சில நமிடங்கள் கழிந்த பின்பு, "நீ எவ்வளவு நேரம்தான் பசியைப் பொறுத்துக் கொண்டிருப்பாய்? நானே வேகமாய்ப் போய்த் தவளைகளை அழைத்து வருகிறேன்" என்றபடி இராட்டினத்தின் வழியே அக்கிணற்றை விட்டு வெளியேறியது.

தன் பசிக்கு உணவு கொண்டு வரச் சென்ற கிழட்டுத்தவளையும் அதனுடைய மனைவியும் ஒரு நாளாகியும் வராமலிருக்கவே பாம்பு ஏமாற்றமடைந்தது.

கிணற்றுச் சுவற்றிலிருந்த ஒரு பல்லியைப் பார்த்த அந்த பாம்பு, "பல்லியாரே, அந்தக் கிழட்டுத் தவளைக்கு நீயும் நண்பன்தானே, நீ அந்தத் தவளையிடம் சென்று, நான் அந்தத் தவளைக்குத் துரோகம் செய்யமாட்டேன் என்று நான் உறுதியளித்ததாகச் சொல்லி பயப்படாமல் வரச் சொல்" என்று தகவல் சொல்லி அனுப்பியது.

பல்லியும் அந்தக் கிழட்டுத்தவளையைத் தேடிச் சென்று பாம்பு சொன்ன செய்தியைச் சொல்லியது.

அதற்கு அந்தக் கிழட்டுத்தவளை "பசித்தவன் விசுவாசம் நம்ப முடியாதது. அந்தக் கொடியவனிடம் நட்பு வைத்து என் குடும்பத்தினர் அனைவரையும் இழந்து விட்டேன். நான் இனி அங்கு வர மாட்டேன்." என்று சொல்லி அனுப்பியது.

இப்படித்தான் நாம் நம்முடைய சொல்லுக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்களை எதிர்க்க வேண்டும் என்ற எண்ணத்தோடு தீயவர்களோடு நட்பு கொண்டால் அந்தத் தீயவர்கள் நம்மையும் சேர்த்து அழித்து விடுவார்கள்.

நட்பு கூட நல்லவர்களோடுதான் இருக்க வேண்டும். இல்லையேல் இழப்பு நமக்குத்தான்.


படித்ததில் பிடித்தது உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்


நீதி :

இக்கதைக்கும் தமிழகத்துக்கும் தமிழ்ங்கிற சம்பந்தந்ததை தவிர வேற எந்தவித சம்பந்தமும் இல்லீங்............

வெற்றியை வெளியே தேடாதீர்கள் !

பேராசை -பெரு நஷ்டம்

ஆப்பிரிக்காவில் ஒரு விவசாயி தனக்கு சொந்தமான நிலத்தோடு சந்தோசமாகவும் திருப்திகரமாகவும் இருந்து வந்தான். அவன் சந்தோசமாக இருந்தான் ஏன்னென்றால் அவன் திருப்தியான மனநிலையை கொண்டிருந்தான். ஒரு நாள் அவன் அந்த நிலத்தில் வேலை செய்து கொண்டு இருக்கும் போது ஒரு ஞானி அந்த வழியாக போனவர் ,இவனுக்கு வைரக்கற்களைப் பற்றிய ஆசைகளை விதைத்து விட்டு சென்றார். எப்படி என்றால் உனக்கு கை கட்டை விரல் அளவுக்கு வைரம் கிடைக்குமேயானால் இந்த ஊரையே சொந்தமாக்கி விடலாம்,அதனை விட கொஞ்சம் பெரிய அளவு வைத்திருந்தால் இந்த நாட்டையே உனதாக்கிவிடலாமென்றும் சொல்லி விட்டு சென்றார் அந்த ஞானி.



அதற்க்கு முதல் நாள் வரை நன்றாக தூங்கிக்கொண்டு இருந்த விவசாயி , அன்று முதல் தூங்க முடியவில்லை. காரணம் வைரத்தின் மேல் உள்ள ஆசை.பெரிய பணக்காரனாக ஆசை. இதற்கு முன்னர் அவன் போதுமென்ற மனோநிலையை கொண்டிருந்ததால் நிம்மதியாக தூங்கினான்.இப்போது அது முடியவில்லை.


பொழுது விடிந்த்தும் முதல் வேலையாக அவனது நிலத்தை இன்னொருவருக்கு விற்று விட்டு நாடு முழுவதும் தேடித்திரிந்தான் வைரத்தை, பின்னர் தனது நாட்டை விட்டு ஐரோப்பா கண்டம் முழுவதும் தேட ஆரம்பித்தான்.அடுத்து வேறிடத்துக்கு சென்றான், கடேசியாக ஸ்பெனில் உடல் நிலையும் ,மன நிலையும்,பணமும் இல்லாத காரணத்தினால் அங்கையே தற்க்கொலை செய்து இறந்து போனான்.



இந்த விவசாயின் நிலத்தை வாங்கியவர் ஒரு ஒட்டகம் வளர்பவர். இவர் ஒட்டகத்துக்கு எல்லா வித செயற்பாட்டையும் விளக்குபவர்.ஒரு நாள் காலை ஒட்டகம் தனது கட்டவிழ்த்ததும் ஓட்டமாய் ஓடியது அந்த நிலத்தில் ,காலை சூரியன் தனது ஒளியை பூமியில் செலுத்தியதும் ,அந்த நிலத்தில் இருந்து வானவில் போன்று பல வர்ணங்களில் ஒளிர்ந்தது , உடனே இவன் அதனை ஏதோ ஒரு இரும்பு என்று எண்ணி தனது அறையில் வைத்து விட்டு தனது வேலையை தொடர்ந்து செய்யலானான்.

அன்று மதிய நேரம் ஞானி வந்து அந்த கல் அங்கு மினுங்குவதை பார்த்து விட்டு அந்த விவசாயின் பெயரைக் கூறி அவர் திரும்பி வந்து விட்டாரா’ என்று வினவினார். அதற்கு நிலத்தை வாங்கியவர் ,இல்லை , எதற்கு கேட்டீர்கள் ?இல்லை அதோ இருக்கிறதே அது தான் வைரக்கல், அது விலைமதிக்க முடியாதது என்று கூறினார். அதற்கு அந்த நிலைத்தின் சொந்தக்காரர் , இது வெறும் கல் , நான் எனது நிலத்தில் இருந்து எடுத்தேன் , வாருங்கள் நான் காட்டுக்கிறேன், அங்கு இன்னும் ரொம்ப கிடக்கிறது என்று அழைத்து சென்றான் ஞானியை.

அங்கு சென்று பார்த்த ஞானி ஆச்சரியத்தில் மூழ்கி போனார்.அத்தனையும் வைரக்கற்கள் , அதனை நம்பாத அந்த புதிய நிலத்துக்காரரிடம் இரண்டு கற்களை எடுத்துக்க சொல்லிவிட்டு நேரா ஆராய்ச்சியாளர்களிடம் சென்றனர்.

அங்கு அவைகள் வைரக்கற்கள் என்று நிருபணம் ஆகியது. அந்த நிலம் முழுவதும் வைரக்கற்களா கிடைத்தன.


இதுல இருந்து என்ன தெரியுது ?

1.உங்கள் அதிர்ஸ்டம் உங்கள் காலுக்கடியில் தான் இருக்கிறது , அதனை உணரமறுக்கும் வரை நாம் வெளியில் தான் தேடித்திரிவோம்.
2.உணருங்கள் , உங்களுக்கானவை உங்களுக்கு அருகிலையே !
3. அதிர்ஸ்டம் வெளியில் இல்ல, உங்களுக்குள்ளையே !


இது ஒரு ஆங்கில புத்தகத்தில் வந்த கதை அப்படியே தமிழாக்கமும் அல்ல கதை முழுவதும் எனது சொந்த கற்பனையும் அல்ல ! படங்கள் இணையம் :-)



உங்களுக்கு எப்படி தோணுதோ ,அத அப்படியே சொல்லிட்டு போங்க

பதினாறு - திரைவிமர்சனம்

பதினாறு - பருவக்கோளாறு



காதல் நாயகன்,டவுசர் நாயகன் என்ற வருசையில் இந்த படத்தில் கோபியின் மகளை காதலிப்பவராக வரும் நாயகனை மொக்கை நாயகன் என்று சொல்லுவது மிகையாகாது. முகத்தில் ஒரு உணர்ச்சியில்லை. குவாட்டர் கட்டிங்கே கிடைக்காது மாதிரியான உணர்வே வருகிறது.

காதல் என்பது என்னவென்று தெரியாத பலர் பள்ளி கல்லூரியில் படிப்பையையும்,வேலை வெட்டிக்கு செல்லாமல் வாழ்க்கையையும் , பலர் மன நோயாளியாகவும் , சிலர் தற்கொலையும் செய்துகொண்டு இருக்கும் இந்த சமுதாயத்திற்க்கு இப்படம் ஒரு சின்ன அகழ்விளக்கு வெளிச்சம்.


காதலின் மோகத்தில் சென்றுக்கொண்டிருக்கும் இளைஞர் சமுதாயத்தை சீர்திருத்தும் நோக்கத்தோடு எடுத்த படமென்று சொல்லலாம். விளம்பரம் அதிகமாக இல்லையென்பதால் பலருக்கு இந்த படம் வந்த்தே தெரியவில்லை எனபது வருத்தம். படம் பார்த்து விட்டு எனது நண்பர் (ப்ரசாத்) ஒருவருக்கு சொன்னேன்.16’னு ஒரு படமா எப்போ வந்தது’னு கேக்குறார்.
அழகான காதல் தோல்வியை நேர்த்தியாக படமெடுத்திருக்கிறார் இயக்குனர் சபாபதி.


தனது மகள் காதலுக்கு தன்னுடைய இள வயது காதலை ஒரு எடுத்துக்காட்டாக சொல்லும் தந்தையின் கதையே இந்த பதினாறு.


கோபியின் சிறுவயது முதலே இளவரசி தோழியாக கிடைக்கிறார்.இருவரும் ஒன்றாக 10ம் வகுப்பு வரைக்கு படிக்கின்றனர். 10 படிக்கும் போது இளவயதில் எல்லோருக்கும் ஏற்படும் பருவ மாற்றம் காரணமாக கோபிக்கும் இயல்பாகவே காதல் ஏற்ப்பட்டுவிடுகிறது தனது தோழி இளவரசியின் மீது.ஆனால் இளவரசியோ ”என்னப்பா பள்ளிக்கூடம் முடியுது உன்னோட ஆள இனிமே எப்படி பாக்க போற’னு” கேக்கும் தனது தோழியின் வார்த்தையை விளையாட்டாக விட்டு விடுகிறார்.

தனது காதலை இயல்பாகவே வெளிப்படுத்தும் கோபியை சிறுவனாக நினைக்க முடியாதளவுக்கு அதிகமான வார்த்தைகளால் காதலைச் சொல்லுவார்.காதல் வந்து விட்டால்காக்கை கூட அழகாக தெரியுமென்பதுக்கு ஏற்ப. கோபியின் மீது தனக்கு காதல் இருக்கா இல்லையென்று தெரியாமல் அவனை திட்டி விட்டு வீட்டுக்கு சென்று , யோசிக்கும் போது அந்த காதல் வெளிப்படுவதும்,பின்ன அவனுக்கா பள்ளிக்கூடம் செல்வதுக்கு ஒரு நாடகத்தை அரங்கேற்றுவதும் , கோபியிடம் சென்று பல டயலாக் பேசுவதும் அழகாக சொல்லிருக்கிறார் இயக்குனர்.

பின்னர் இவர்களின் காதல் பயணம் சென்றுகொண்டிருக்க ,வீட்டில் சில தவறுகள் நடப்பதால் ஒரு சோதிடரின் பேச்சைக்கேட்டு இளவரசியை அவளது தாய்மாமனுக்கு கெட்டிக்கொடுக்க திருமண ஏற்ப்பாடுகள் நடத்துகின்றனர்.இளவரசி கோபியின் காதல் விசயம் இளவரசியின் மாமனுக்கு தெரிய வர அவரால் ஒன்றுமே சொல்ல முடியவில்லை.சிறுவயதில் இருந்து பாசம் வைத்து விட்டு இப்போது என்ன செய்யமுடியும் ?





பின்னர் கல்யாணத்தின் போது ப்ரச்சனை செய்யும் இளவரசி கோபியைத்தான் கெட்டுவேனென்று பிடிவாதம் செய்ய அவளை தனது வில்லி சித்தி வீட்டுக்கு அனுப்ப முடிவெடுக்கிறார் இளவரசியின் அப்பா.நிலமையை புரிந்துகொண்ட இளவரசி மணந்தால் ”மகாதேவன் இல்லையேல் மரண தேவன்’என்று வசனம் பேசிவிட்டு சும்மா இருந்து விடாமல் , அடுத்த கட்டத்துக்கு நகர்கிறாள்.

அவனது குழந்தையை தனது வயிற்றில் சுமந்தால் யாரும் ஒன்னும் செய்ய முடியாதென்று சொல்ல கோபியும் தலையாட்ட , அடுத்த சில மாதங்களில் குழந்தை உண்டாக அந்த விசயம் வீட்டுக்கு தெரியப்படுத்த (என்ன தெனாவட்டு) பின்னர் அதனை கலைத்து இளவரசியை அவளது மாமனுக்கே கெட்டி வைக்க முடிவு செய்து ,கெழவியை வரவழைக்க ,வந்த கிழவியின் தலைமுடியை வெட்ட ,பயத்தில் கிழவி ஒலும்பிக் ஓட்டமெடுத்த படி ”உழுதவனுக்கே நெலத்த கொடுத்திடுங்க’னு சொல்ல , பின்னர் தான் அவனைத்தான் மணப்பேன்,அவனை மதிக்காத இந்த வீட்டுக்கு இனிமேல் வர மாட்டேன்’னு பல வசனத்தை பேசிட்டு கெளம்பிடுவாங்க இளவரசி. அதனால் கொழப்பி போயிடுது அவுங்க குடும்பம்.


கோபியோடு ஊரைவிட்டு போகும் போது ஊருக்கு வெளியே ராக்காயி கோயிலில் தனது அப்பாவும் ஊர்’ல பஞ்சாயத்து பண்ணுறவங்க வெள்ளையும் சொல்லையுமா உக்காந்திருக்க , தந்தை மனசு நொந்து பேசுவார். மிக சரியாக பேசுவார்.

எந்த தைரியத்தில் இவனோட போற ? எந்த நம்பிக்கையில் நான் உசுரோட இருக்கிறது ? தன்ன நம்பி வந்தவளுக்கு துணி வாங்கிக்கொடுக்க இவனுக்கு வக்கு இருக்கா?


இது பொட்டப்புள்ளைய பெற்ற எல்லா பெற்றோருக்கும் வரும் நினைப்பு,கவலை.அவங்கலாம் காதலை எதிர்க்க வில்லை ,மகளின் எதிர்காலத்தை எண்ணி அச்சப்படுகிறார்கள். என்பதை தெளிவா சொல்லிருக்கார் இயக்குனர்.இந்த இடத்தில் ஒரு சபாஷ் போட்டே ஆக வேண்டும் இவருக்கு.

உடனே இளவரசிக்கு கோவம் வந்து கோயிலுக்கு உள்ளே போய் தனது துணியெல்லாம் அவுத்து வெளியே எறிந்து விட்டு , கோபி நீ துணி வாங்கி கொண்டு வந்து கொடுத்திட்டு என்ன கூட்டிட்டு போ’னு சொல்லுவது ,காதலன் மேல் வைத்த நம்பிக்கையா ? இல்ல தன்னோட பிடிவாத குணமா ?’னு யோசிக்க வைக்கிறார்.

துணி வாங்கிட்டு வரும் வழியில் விபத்து ஏற்ப்பட்டு அடித்த லாரிக்காரன் கோபியை கேரளாவுக்கு தூங்கிட்டு போய் வைத்தியம் பார்க்கிறார்.

சில மாதங்கள் கழிந்து .... திரும்பி வருகையில் இளவரசியை மணக்கோலத்தில் பார்க்கிறார்,அங்கு எதுவும் பேச முடியாமல் திரும்பி விடுகிறார் கோபி.
இந்த இடம் எனக்கும் புரியவில்லை. அவ்ளோ பிடிவாதமாக அவன் தான் வேணூமென்று நின்றவள்.அவனை உயிருக்கு உயிராக மதித்து தன்னை முழுவதுமாக அர்ப்பணித்த இளவரசி. மாலை சூடும் அளவிற்க்கு என்ன நடந்த்தென்று புரியவில்லை ,விளக்கவுமில்லை இயக்குனர்.

உடனே காதல் என்பது மாயை ,காதல் என்பது பொய்.’னு தனது டைரியில் எழுதி முடித்திருக்கிறார் கோபி .

கடேசியில் மொக்கை நாயகன் அவுங்க ஊருக்கு போய் இளவரசிய பாக்க சக்கரை வீட்டுக்கு போவார்.அப்ப தான் புரியூது இளவரசியின் மாமன் சக்கர இளவரசிக்கு தாலி கெட்டாம மணத்தோழியா வந்திருந்த தோழிக்கு கெட்டுறார் தாலிய. கடேசியா பாத்தா இளவரசியாக அமைதி(ப்படை)யாக வரும் கஸ்தூரி தனது கோபி இறந்து விட்டார் என்று எண்ணி அன்பு இல்லம் ஆரம்பித்து அங்குள்ள ஆதரவற்ற குழந்தைகளுக்கெல்லாம் கோபியின் பெயரை வைக்கிறார் இன்சியலாக. கஸ்தூரி ”காதலுக்கு ப்ரச்சனை வரலாம் ,காதலர்களுக்கு உள்ள ப்ரச்சனை வரக்கூடாது “ டயாலக் பேசி முடிச்சிருவார்.

.இதெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த கோபி.இடிந்து அழுகிறார். கடேசியில் மொக்கை நாயகனிடம் நான் ஊயிரோட இல்லை’’னு அவா வாழ்ந்திட்டு இருக்கா, நான் இருக்கே’னு தெரிஞ்சா அவ செத்துருவா’னு சொல்லிட்டு போவார்.

”Life Has To Move On, Whatever Happens “
”வாழ்க்கையில் எது நடந்தாலும், நடக்காட்டியும் வாழ்க்கை ஓடிட்டே தான் இருக்கும்”


இளவரசி , கோபியின் காதல் தோற்றுப்போக யார் காரணம் ? புரிந்து கொள்ளாமையா ? வயசுக்கோளாறா ? பெற்றோர்களின் எதிர்ப்பா ?


சிறு வயதினராக நடித்திருக்கும் இளவரசி கோபியின் நடிப்பு அருமை.


என்னைப் பொறுத்தவரையில் பதினாறு – பருவக்கோளாறு



டிஸ்கி :

1. கமல் சார மாதிரி விஞ்ஞானம் பேசுறது. காதல் இல்லையா’னு கேக்குற கேள்விக்கு பதில் சொல்லாம நான் எப்ப அப்படி சொன்னேன்’னு பதில் சொல்லுறது.
2. கஸ்தூரியின் காதல் தோல்வி பாட்டு :
” ஒத்தையடி பாதையில ஊரு சனம் தூங்கயில ஒத்தையா போகுதம்மா என்னோட மனசு.. மனசு.... வெத்தல போல் வாடுதம்மா என்னோட வயசு. ...” அதனால் இந்த படத்து செலெக்ட் ஆயிருப்பாரோ’னு நம்ம குடிகார கொரங்கர் சந்தேகம் எழுப்புகிறார்.
3. இளைஞர்களை குழப்பாம முடிவெடுத்திருக்கலாம்.
4. காதல் தவறில்லை , காதலிக்கும் முன்னர் தங்களது தகுதிகளை வளர்த்துக்கொள்ள வேண்டுமென்பது இயக்குனரின் கோரிக்கை.


பதினாறு - இளமைக்கொண்டாட்டத்துக்கு யோசிக்கும் படி :



இயக்குனர் சபாபதியின் தைரியத்துக்கு சபாஷ் !

இளைஞன் - திரைவிமர்சனம்

இளைஞன் – முதியோர்களின் ஆட்சி :



முத்தமிழரிஞரின் கதையோடு, சுரேஷ் கிருஷ்ணாவின் இயக்கத்தில் ,வித்தியாசாகரின் இசையில், வித்தக கவிஞர்(!?)பா.விஜயின் பாடல்களில்,பல பெரும் நடிகர்கள் நடித்து தற்போது வெளிவந்திருக்கும் படம் தான் இளைஞன்.

படத்தின் ஆரம்பத்தில் 1959ல் ஒரு கடல் ஓரத்தில் அமைந்திருக்கும் நகரில் ......’னு ஆரம்பிப்பாங்க ,பட டைட்டில் போடும் போதும் கலைஞரின் இளைஞனென்று போடுவார்கள். இதெல்லாம் உங்களுக்கு சொல்லும் கருத்து என்னவென்று படம் முடியும் போது உங்களுக்கு புலனாகும்.




படத்தின் கதை : (அப்படினு ஒன்னு இருக்கானு கேக்கக்கூடாது)

ராஜ நாயகம் என்னும் பெயரில் கப்பல் கட்டும் நிறுவனத்தை ஆரம்பித்த தெய்வ நாயகம் முதலில் நல்ல விதமாகவே தொழிலாளர்களை நட்த்தி வந்திருப்பதாகவும் , பின்னர் (ராஜ நாயகம்)அவரின் மகன் அந்த நிறுவனத்தை எடுத்து நடத்த ஆரம்பித்தவுடனே அங்கு மனிதர்களுக்கு மரியாதையற்று ஒரு இயந்திரம் போல வேலை வாங்குவதும் ,கொத்தடிமையாக அவரது காதலி சோனாவின் பேச்சைக்கேட்டு நடத்தி வருகிறார். அந்த கம்பெனியில் வேலை பார்க்கும் தொழிலாளர்களில் ஒருவர் நாசர் , கொஞ்சம் தொழில் திறமை படைத்தவராக இருப்பதும் ,அவரை அடித்து அவமானப்படுத்துவதும் அதனை அவர் தண்னி அடிச்சிட்டு வந்து தனது மனைவியிடம் காட்டுவதும் ,அம்மாவின் மீது பாசம் வைத்துள்ள இளைஞன் அதை அதட்டி கேப்பதும் ,அதனால் மனம் நொந்து முதலாளியை எதிர்த்து பேசிவதும்,முதலாளி கோவமாகி நாசரை அடித்து கொல்லுவதும்,அவருடைய இடத்தில் அந்த இளைஞன் வேலைக்கு செல்வதும் ,அங்கு நடக்கும் அநியாத்தைப்பார்த்து இளம் ரத்தம் கொதிப்பதும்,ஆத்திரமடைந்து ஒருவனை போட்டு புரட்டி எடுப்பதும் அதற்கு தொழிலாளர்கள் ஆதரவு தெரிவிப்பதும் , நேரடியாக ஆயுதப்போராட்டத்தில் குதிக்க போகிறார் அந்த இளைஞன்.


அதனை எப்படியோ தெரிந்து கொண்ட அந்த இளைஞனின் மாமா டெல்லி கணேஷ் ,ஆயுதப்போராட்டாம் சரியல்ல ,கத்திய தீட்டுவதுக்கு பதிலா புத்திய தீட்டுங்களென்று அறிவுறை கூறுகிறார் அந்த இளைஞனுக்கு, அவரும் பல புத்தகங்களைப் படித்து அதில் வரும் நல்ல நல்ல கருத்துக்களை பேப்பரில் எழுதி தொழிலாளர்கள் மனதில் தூங்கிக்கொண்டிருக்கும் பகுத்தறிவை தட்டி எழுப்புறார். இதற்க்கிடையில் சொத்து ஏழைத்தொழிலாளர் பெயரில் மாற்றி எழுதப் போவதாக தெரிந்துகொண்ட ராஜ நாயகம் தனது அப்பாவை கொன்று கடலில் தள்ளி விடுகிறார். இது அவரது தங்கை மீரா ஜாஸ்மினு’க்கு தெரியாமல் பார்த்தும் கொள்கிறார்.



தனது கம்பெனியில் ஏற்ப்பட்டிருக்கும் கொந்தளிப்பில் தனது பங்கையும் கொடுக்கிறார் மீரா ஜாஸ்மின்.ஒரு கட்டத்தில் சோனா கோவத்தில் அவளது அப்பாவை கொன்னது மாதிரி உன்னையும் கொல்லுவேனென்று சொல்ல தனது அப்பா செத்த விசயம் வெளிச்சத்துக்கு வருகிறது. கடலோரத்தில் ஒரு இரவு முழுவதும் ரூம் போட்டு அழுவார் மீரா ஜாஸ்மின்.காலையில் கண்ணீர் தீந்ததும் இளைஞனை அழைத்து ஆயுதப்புரட்சிக்கு வழிவகுப்பார்.இளைஞன் சரியென்று எல்லா ஆயுதங்களையும் தயாரிப்பார் தொழிலாளர்களோடு சேர்ந்து, கடேசியில் அம்மாவை கூட்டி வந்து காட்டுவார்,உடனே அம்மா அஹிம்சை தான் சரியென்று சொல்லவும் எடுக்காத ஆயுதத்தை கீழே போடுவார்.
பின்னர் ராஜ நாயகம் நல்லவர் போல் நடித்து கப்பல் வேலையை முடித்துவிடுவார் சில நாட்களிலே, அப்புறமென்ன கிளைமேக்ஸ் தான் ஒரு நீண்ட வசனத்துக்கு பிறகு அம்மா சொல்ல இளைஞன் எதிரியை அழிக்க செல்கிறார் கூண்டோட இல்லை இல்லை கப்பலோட , எதிரியை அழித்து சுற்றுசுவற்றையும் அடித்து நொறுக்கி அங்கிருந்து போக மனம் இல்லாமல் அங்கையே சுதந்திரமாக வாழ்வரென்று தனது கதையை முடித்திருக்கிறார் கலைஞர் சாரி கதையாசிரியர்.


வடிவேல் வெடி’வேல் வெத்துவேட்டு :

இதற்கு முன்னால் திரையில் பார்த்தாலே குபுக்கென்று வாந்தி வருவது போல சிரிப்பு வரும் நடிகர்களில் வடிவேல் ஒருவெறென்று சொன்னால் அது மிகையாகாது . ஆனால் இந்த படத்தில் அவரைப்பார்த்தால் சிரிக்க வேண்டுமே என்ற கட்டாயத்தில் சிரிக்க வேண்டி இருக்கிறது . நகரத்தில் கூட ஓரளவு சிரிக்க வைத்தார் வடிவேல். ஐசக் ஆறுமுகம் இது தான் இவருடைய பாத்திரம் அந்தளவுக்கு திரையில் இருக்கு பாத்திரம் கிடைக்கல என்பது உண்மை. வடிவேல் இதற்கு மேல் படம் நடித்தால் வருங்கால இளைஞர் சமுதாயம் உக்கிரமாக மாறிவிடுமென்பதே எனது கருத்து.

நமிதா :

சும்மா காட்சி பொருள் மட்டுமே .

காமடி :

இளைஞனாக வரும் நாயகன் ,மீரா ஜாஸ்மின் எண்ட்ரியில் அவர் கையில் உரை போட்டு இருப்பதை பார்த்து விட்டு குஸ்டமாக இருக்குமென்பார் கருணாஸிடம் .

கருணாஸ் :

காமடி நடிகரா ?

ஹீரோயின் :

தேவையா ?





ஏதோ படமென்று வந்தால் நாலு ரூயட் பாட்டு வருமே என்றும் , அப்படி வந்தால் ஹீரோவோட ஆட ஹீரோயினும் வேணுமே என்பதற்க்காக இந்தப் பாத்திரத்தை தயார் செய்திருப்பதாக தோணுகிறது.படம் ஆரம்பம் முதலே ஹீரோவின் மீது காதல் மழையை பொழிகின்றார்.ஹீரோவுக்கு காதலா ஒரு சின்ன பார்வை கூட கிடையாது என்பது வருத்தமே.

என்னிடம் அறிவுரை :(ப்ரீ அட்வைஸ்)

படத்தை வெளியுடும் முன்னர் என்னிடம் அறிவுரை கேட்டிருந்தால் இந்த படத்தை 1960லையே வெளியிட்டிருக்க வேண்டுமென்று கூறிருப்பேன்.
அதாவது கலைஞரின் இளமைக்காலத்திலையே வெளியிட்டு இருக்கலாம்.

மந்திரகுமாரி’ படத்தில் கதையெழுதிய அதே கதாசிரியரா இந்த படத்துக்கும் கதை எழுதிருக்கிறார் என்று நினைக்கும் போது தான்............

மந்திரகுமாரி படத்தில் திருடனாக நடித்திருக்கும் எஸ் ஏ.நடராஜன் பேசும் வசனமிது :
வில்லில் இருந்து புறப்படும் அம்பு எத்தனையோ உயிர்களைக் குடிக்கிறது. ஆனால், வில்வித்தை என்ற பெயரால், கொலை அங்கே கலையாகிறது. ஓவியக் கலைஞன், பெண்ணின் அங்கங்களை வரைந்து காட்டுகிறான். ஓவியக் கலையின் பெயரால், காமம் அங்கே கலையாகிறது. அதுபோல இதுவும் (திருட்டும்) ஒரு கலைதான்!


டைரக்டர் கட் & ஆக்‌ஷன்:


டைரக்டர் படத்தில் பிரமாண்டம் காட்ட முயன்று தோல்வியை தழுவிருக்கிறார் என்று வெளிப்படையா காட்டிருக்கிறார் இந்தப்படத்தில்.அந்தக்காலத்தில் கதையைக்கொண்ட படமென்பதால் அந்தக்கால சாயலிலையே எடுக்க முயன்று இருக்கிறார். உடை,கார்,பாட்டுப்பொட்டி,ஓவியமென்று அந்தக்காலத்தைக்காட்டி மற்றவற்றையும் காட்ட தவறிவிட்டார்.

எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும் சாமி :):

சோனா : என்ன அம்மா அம்மா’னு கெஞ்சுறதுனால சொல்லுறேன். டார்லிங் ஒரேரடியா சுட்டு கொல்ல வேண்டாம் , கொஞ்சம் கொஞ்சமா அடிச்சி துன்புறுத்தி கொல்லு !

டெல்லி : நீங்க நினைச்சாத்தான் கார்க்கிய(இளைஞன) காப்பாத்த முடியும்

சோனா : இப்படித்தான் எல்லாரும் நம்பி ஏமாந்து போறாங்க ?

இளைஞன் : அம்மா ,ஹுகும்ம்ம்,.. ஊர் தாலிய அறுத்து ,எல்லா தொழிலாளர்கள் வயித்திலையும் மண்ணள்ளிப் போட்டு,உலகபுகழ வாழ்ந்த தெய்வ நாயகம் ஐயா குடும்பத்தையும் ,கவுரத்தையும் குழி தோண்டி புதைச்ச இந்த குள்ள நரிக்கு பெயரா அம்மா இவலாம் சும்மா ? ஒவ்வொரு வீட்டுலையும் குடும்ப விளக்கா தான் வாழனும் நினைக்காம , மத்தவங்க வாழனும்னு நினைக்கிற என்ன பெத்தவ அம்மாவா இல்ல ஊரை அடிச்சி உலையில் போடும் இவ அம்மா ?


முக்கியமான விசயம் :

இங்கு கதாசிரியர் சொல்ல வருவது ஒரே ஒரு விசயம் தான் உலகிலையே கப்பல் கட்டும் தொழிலை முதல் முதலில் தமிழர்கள் தான் செய்தார்கள்.கப்பல் (கடல்வழி வாணிகம்)மூலமாகவும் வாணிகம் செய்தார்கள்.

படத்துக்கு பொறுத்தமான சில தலைப்புகள் :

அடிமை விலங்கு ,முதலாளித்துவம்,கொத்தடிமை,அஹிம்சை,ஆயுதப்போராட்டம்,சகுனியின் ஆட்டம்.



எல்லோரும் தனக்கு கொடுத்த வேடத்தை நிவர்த்தி செய்தாலும் , கதைக்கும் அவர்களுக்கும் சம்பந்தமில்லாதவாறு ,ஏனோ தானா என்று வந்து செல்கின்றனர். ஆதலால் இளைஞன் எனது பார்வையில் முதியோர்களின் ஆட்சியே !


டிஸ்கி தகவல் :

ரஷ்ய நாவலாசி‌ரியர் மாக்சிம் கார்க்கியின் நாவலை தழுவி நமது கதாசிரியர் திரு.முதல்வர் முத்தமிழறிஞர் மு.கருணாநிதி அவர்கள் திரைக்கதையாக எழுதியிருக்கும் படமே இளைஞன் என்கிறார் டாஸ்மார்க் குவாட்டர் கட்டிங் .



படிச்சிட்டு சீரியஸா ஆனா கம்பெனி பொருப்பல்ல :)

சும்மா தெரிஞ்சிக்கோங்க :

சூரிய குடும்பம் :




நமது பூமியும் ,பூமியைச் சுற்றி இருக்கும் கோள்களும் எவ்ளோ தூரத்தில இருக்குனும் அதன் பருமன் எவ்ளோனும் ,ஓவ்வொரு கோள்களும் தன்னைத்தானே சுற்றிக்கொள்ள எவ்ளோ காலமெடுக்குதுனும் ,சூரியனைச் சுற்றி வர எவ்ளோ காலத்தை எடுத்துக்கொள்கிறதுனும் , அதன் அடர்த்தி நம்ம பூமியிலிருந்து அதிகமா இல்லை கம்மியானும் சும்மா தெரிஞ்சிக்க இந்த அட்டவணைய பாருங்க :

(அட்டவணை சிறியதா தெரிஞ்சால் அட்டவணையில் கிளிக் பண்ணி பார்க்கவும்)

கோள்களெல்லாம் இரண்டு வேலை செய்கிறது’னு உங்களுக்கு இப்போ தெரிந்திருக்கும் .
1.தன்னைத்தானே சுற்றிக்கொள்கிறது
2.சூரியனையும் சுற்றி வருகிறது.


அப்புறம் ஒரு சின்ன மொக்கை :


நாம் வாழ்கின்ற நாடு இந்தியா; இந்தியா ஆசியாக் கண்டத்தில் ஒரு நாடு.ஆசியாக்கண்டமென்பது உலகத்தின் ஒரு பகுதி:உலகம்,பூமி என்ற கோளத்தின் ஒரு பாகம்.பூமியோ ஞாயிற்றுத்தொகுதியின் சூரிய மண்டலத்தின் ஒரு பாகம்;அண்டமோ பிரபஞ்சம் என்ற பேரண்டத்தின் ஒரு துகள்.பிரபஞ்சத்தில் இது தான் நமது நிலை.என்று சொன்னால் நம்ம முடிகின்றதா ? நம்பித்தான் ஆகனும் என்கிறார்கள் பல வருடமாக போராடி இவ்வுண்மையை கண்டறிந்த அறிவியல் அறிஞர்கள்.

இரவு நேரத்தில் வானத்தைப்பார்த்தால் கோடிக்கணக்கான ஒளிச்சிதறல்கள் நமது கண்ணுக்குப்புலப்படும்.அவைகள் நட்சத்திரங்களும்,கோள்களும்,இதே தன்மையுற்ற வேறு ஒரு சிலப் பொருட்களுமே ஆகும்.தாமே ஒளி பிரகாசிப்பவைகளை நட்சத்திரமென்றும் ,நட்சத்திரங்களிடமிருந்து ஒளியை வாங்கி தானும் பிரகாசிப்பவைகளை கோள்களென்றும் வரையறுக்கப்பட்டுள்ளன.

பூமி சூரியனை ஒரு நீள்வட்டப்பாதையில் சுற்றி வருகின்றது எனறு நமக்கெல்லாம் தெரியுமல்லவா ?
அப்படி சுற்றி வரும் போது ஒவ்வொரு ஆண்டும் ஜன 3ம் தேதி பூமியானது சூரியனுக்கு மிக அருகில் செல்லும் அப்போது இவற்றின் இடைத்தூரம் 14,63,18,000கி.மீ(9,14,49,000 மைல்)ஆகும். பிறகு ஜீலை 3ஆம் தேதி பூமி சூரியனிடமிருந்து மிகவும் தூரத்திலிருக்கும்.அப்போது இவற்றின் இடைத்தூரம் 15,12,97,000 கி.மீ (9,45,61,000மைல்)ஆகும். என்ன கொடும பால்வழி இது ?

இப்படியா இருக்கையில இவற்றின் சராசரி தூரம் : 14,88,00,000 கி.மீ (93,000,000 மைல்)ஆகும்.

சூரிய ஒளி பூமியை வந்தடையும் நேரம் சராசரியாக 8.33 நிமிடங்கள் ஆகிறதுங்க .

ஒளியின் வேகம் 2,97,600 கி.மி (1,86,000 மைல்)பெர் செகெண்ட்

தூரம்/(வகுத்தல்)வேகம் = வந்தடையும் நேரம் :)

14,88,00,000 /2,97,600 = 500 செகெண்ட் 8.33 நிமிடம்


கோள்களின் பெயர்கள் , தமிழிலும்,ஆங்கிலத்திலும்,தமிங்கலத்திலும் :

ஞாயிற்றுத்தொகுதி(அ)சூரிய மண்டலம் * Solar System




பால்வழி * Milky Way - மில்கி வே
பிரபஞ்சம் * Universe - யூனிவர்ஸ்
சூரியன் * Sun - சன்
புதன் * Mercury -மெர்குரி
வெள்ளி * Venus -வீனஸ்
பூமி * Earth -எர்த்
செவ்வாய் * Mars - மார்ஸ்
வியாழன் * Jupiter -ஜீபிட்டர்
சனி * Saturn - சேடன் ,சேட்ரன்
யுரேனஸ் * Uranus- யூரேனஸ்
நெப்ரியூன் * Neptune- நெப்ரியூன்
புளூட்டோ * Pluto - புளூட்டோ

ஆச்சரியத்தகவல் :

வின்வெளினாலே ஆச்சரியம் தானே அதிலென்ன ஆச்சரியம் என்று கேட்பது கேக்கிறது.



5 சூரிய மண்டலங்களையும், நமது பூமியைப்போல 140 பூமிகளை கண்டுபிடித்ததாக நாசா தகவல்களை வெளியிட்டு இருக்கிறது . அங்கே நமது பூமியைப்போலவே நிலமும் ,தண்ணீரும் இருப்பது புலனாகிறதென்றும் , அங்கே மனிதர்கள் வாழுவதற்க்கான சூழ்நிலை இருக்கிறது என்றும் ,அங்கே மனிதர்கள் வாழ்ந்து கொண்டும் இருக்கலாமென்றும் அறிவிக்கிறார். நாசாவின் அறிஞர் கெப்லர் .

மேலும் தகவலுக்கு :

http://techbuzzy.com/2010/07/140-earths-found-by-nasa/





இதில் ஏதாவது தவறு இருந்தால் சுட்டிக்காட்டவும் : நன்றி

சிறுத்தை-வெமர்சனம்

சிறுத்தை – எட்டுக்கால் பாய்ச்சல் :


சிங்கம் - சிறுத்தை, அண்ணன் – தம்பி,
சூர்யா - கார்த்தி




ரொம்ப நாளுக்கு அப்புறமா ஒரு காமடியான அதிரடியான திரைப்படம் , கார்த்திக்கு இந்த வேடம் சரியா ஒத்துப்போயிருக்கு’னு தான் சொல்லனும்.அவுக அண்ணன் சூரியா மாதிரி இரட்டை வேடத்தில அவ்வளவு மாறுபாடு காட்டலனாலும் மிரட்டிருக்கார் நம்ம கார்த்தி. போலீஸ் உடை இவருக்கு அவ்வளவு எடுப்பாக இல்லாட்டியும் ,மப்டியில் வரும் உடை செமையா இருக்கிறது கார்த்திக்கு , காமடியாக ஒட்டிக்கொண்டு வரும் காட்டுப்பூச்சி சந்தானமும் ராக்கெட் ராஜா கார்த்திக்கு ஒத்துப்போகிறார், கவுண்டரை அடிக்கடி நினைவு படுத்துக்கிறார் சந்தானம். சந்தானத்துக்கு பெண் வேடமும் ஒத்து வருகிறது என்றே கூற வேண்டும்.



பெண் வேடத்தில் சந்தானம் சூப்பராக நடித்திருக்கிறார் , நடித்திருக்கிறார் ( சிலர் கேட்டுக்கொண்டத்துக்கிணங்க )



ஆரம்பத்தில் ஆண்டிக்கு மொட்டையடிக்க ஆரம்பித்து கடேசியில் வில்லர்களை மொட்டையடிக்கும் வரை அமர்க்களம்(தல படமில்ல) இன்பார்மர் சொன்ன சேட்டு கல்யாணத்தில் களவாங்கப்போகும் ராக்கெட்டும் ,காட்டுப்பூச்சியும் தனித்தனியே களவாங்க அக்கிரிமெண்ட் போட்டு போவதும் ,அங்கே கண்ணா லட்டு திங்க ஆசையாவும் , வீட்டம்மா(வீட்டின் சொந்தக்காரரின் மனைவி) சாவியை கொடுத்திட்டு பக்கத்து ரூமில் நகையிருப்பதாக சொன்னவுடன் ”கண்ணா ரெண்டு லட்டு திங்க ஆசையா’னு” சொல்லுவதும் காமடி. தமன்னாவுக்கு வெட்கத்துடன் தனது முகத்தை காட்டவும்(இதுக்கு முன்னாடி ஹீரோயின் தான் இப்படி காட்டுவாங்க , அதுவும் இந்தளவுக்கு வெட்கம் கலந்த புன்னகையுடன் காட்டியதில்லை என்று சொன்னால் அது மிகையாகாது) திருடிச்செல்லும் காட்டுப்பூச்சியை பிடித்துக்கொடுத்து நல்ல பெயர் வாங்கிக்கொள்ளும் ராக்கெட்டை காட்டுப்பூச்சி பார்க்கும் போது ரேடியோவில் “நன்றி சொல்ல உனக்கு வார்த்தையில்ல எனக்கு”மறுமலர்ச்சிப்படப்பாடலை ஒளிப்பரப்புவது டைமிங் காமடியே. என்ன வேலை செய்றீங்க’னு தமன்னா கேக்கும் போது மழுப்புவது கார்த்தியின் நேர்த்தி . இடை இடையில் மிமிக்கிரி செய்யவும் தவறவில்லை.


ஆரம்பத்தில் சிரித்த முகத்துடன் வரும் கார்த்தியா சிறிது நேரத்தில் IPS ரத்தினவேல் பாண்டியனா விஸ்வரூபமெடுத்து தாண்டவம் ஆடுகிறாரென்று திகைக்க வைக்கிறார் கார்த்தியுடன் சேர்ந்த இயக்குனர். வேகமாக அடிதடியில் இறங்கும் ரத்தினவேல் பாண்டியன் வேகமாகவே வில்லனின் தம்பியால் குத்துப்பட்டு சாகும் நிலைக்கு போகவும் அவரின் ஏற்கனவே தாயை இழந்த குழந்தையை என்ன செய்வதென்று தெரியாமல்,ராக்கெட் ராஜாவாக வரும் கார்த்தியை சிக்க வைக்கிறார்கள் இவர்களின் வலைக்குள். பின்னர் அவரும் இடை இடையில் வந்து ஒரு சண்டையை ராக்கெட்டின் முன்னால் நிகழ்த்தி அடிப்பட்டு இறந்தும் போகிறார் IPS ரத்தினவேல் பாண்டியன். இவரைப்போலவே உள்ள கார்த்தி தனக்கே உரித்தான ஸ்டைல்லில் வில்லனை காலி பண்ணுகிறார் ,மிகவும் நகைச்சுவையோடு , சில இடங்களில் ஜாக்கிஜானையும் மனதில் நிறுத்துகிறார்.

படத்தில் தமன்னாவின் இடுப்பை காட்டுவதை குறைத்திருக்கலாம்.



தற்போது நடக்கும் உண்மை விசயத்தை , ஒருவர் போனை சுட்டது கூட தெரியாமல் பேசிக்கொண்டிருப்பது ,அவரின் ஆர்வக்கோளறு என்பதை எடுத்துக்காட்டிருக்கிறார்கள். (அந்த ஒருவர் காதல் படத்தில் (எப்படி ? ஸேட்டா ஹீரோவா’னு கேப்பாரே அவரு தான்)


IPS கார்த்திக்கு நல்ல வசனங்கள்,அதனை அவர் உச்சரிக்கும் விதமும் அழகு. உதட்டில் சிரிப்பும் ,கண்ணில் கனலையும் காட்டிருப்பார் கார்த்தி.முறுக்கு மீசையழகு.IPS க்கு உண்டான திமிரை இன்னும் காட்டிருக்கலாம்.

அந்த குட்டிப்பாப்பாவின் மழலைப்பேச்சழகு.



ஜாலியா காமடி , ஜாலியான ரூயட்ஸ் , ஜாலியான கதை,ஜாலியான சண்டை ,கொடுமையா வில்லர்களை(மரியாதைங்க) ஜாலியா ஒழிக்கிற ,அழிக்கிற ஜாலியான சிறுத்தை .


வாங்க பார்க்கலாம் ...................

பசி

பசி :


திடீரென்று இடித்த இடியில் மிரெண்டெழுந்தான் மாரி , கோயிலுக்கு போனவள இன்னும் காணுமே’னு அவனுக்குள் இருந்த பதட்டமே இதற்கு காரணம். ஈஸ்வரியும் மீனாக்காவும் கோயிலுக்கு போவதா சொல்லிட்டு போனாங்க’னு மீனாக்காவோட மக கார்த்திகா சொல்லித்தான் தெரிஞ்சிக்கிட்டான் மாரி. இன்னைக்கு மாதாந்திர வெள்ளி , வழக்கமா மாரி தான் அவள கூட்டிட்டு போவான் ,வெள்ளன வீடு வர முடியல , நாலு நாள நல்ல மழையா பெய்வதினால் நெல்லு வயலுக்குள் இருந்த தண்ணீரை விலகி விட்டுட்டு எல்லா வாய்க்காலையும் அடைச்சிட்டு தண்ணி தங்கவிடாம வெளியேறுதானு பாத்திட்டு வர தாமதம் ஆயிருச்சி , எட்டு மணிக்கெல்லாம் நடை சாத்திருவாங்க’னு இவனுடைய பொண்ணாட்டி கோயிலுக்கு போரேன்’னு பக்கத்து வீட்டு கார்த்திகாட்ட சொல்லிட்டு அவுக அம்மா மீனா கூட கோயிலுக்கு போயிருக்கா’னு தொப்பளா நனைஞ்சி வந்த மாரிக்கு கிடைத்த தகவலையும் நெனச்சிக்கிட்டே, மணியும் ஏழேமுக்கால் ஆச்சி இன்னும் ஆளக்காணுமே’னு இவன் துணியக்கூட மாத்தாம ஈரத்தோட சுவத்துல சாய்ந்திருந்தவன் அப்படியே அசந்து தூங்கியும் போனான். வயக்காட்டில் அங்கும் மிங்கும் அலைந்து மதியம் சாப்பிடக்கூட நேரமில்லாமல் பசி தான் அவனை தூங்க வைத்திருக்க வேண்டும்.


மாமா ....மாமா...என்று புன்னைகையுடன் எழுப்பியவள் ஈஸ்வரி

இன்னைக்கு என்ன இவ்ளோ லேட் ஈஸ் ?தூக்க கலக்கத்துடன் கேட்டான் மாரி

குடையை எடுத்திட்டுப்போக மறந்திட்டேன் மாமா ,அதுதான் மழை நிக்கும் வரைக்கு கோயில உக்காந்து இருந்தோம் ,

நீ ஏ மாமா மத்தியானம் சாப்பிடக்கூட வராம சாய்ந்திரமும் இவ்ளோ நேரமாயிருச்சி ? உனக்காக எவ்ளோ நேரம் காத்திருந்தேன் தெரியுமா ?


அடிபோடி இவளே , பக்கத்துக்காட்டுக்காரன் தண்ணிய வெளகி இந்தப்பக்க வாய்க்காலுல விட்டுட்டான், நம்ம வயலுல மூணு குண்டு பள்ளத்துல கெடக்கா தண்ணிக்காடு வாமடைய உடைச்சிட்டு நம்ம வயலுக்குள்ள போயிருச்சி , அத நம்ம கருவாயன் காட்டுவழியா வெளகி விட்டு அந்த வாய்க்காலுக்கு கொண்டுபோக போனா வாய்க்காவரப்பெல்லாம் கொடியும் ,முள்ளும் படந்து அடர்ந்து இருந்துச்சி பின்ன வாய்க்கால செதுக்கி கொண்டுபோய் விட்டுட்டு திரும்பிப்பார்த்தா கருவாயன் வந்திட்டான்.அவன்க்கிட்ட கதைய சொல்லி சமாளிக்க போதும் போது’னு ஆயிடுச்சி ஈஸ்’னு சொன்னவன் காலப்பார்த்தவளுக்கு தூக்கிவாரியது என்னது மாமா இரத்தம் ?

அதுதான் சொன்னேனே ,வாய்க்கா செதுக்குனோம்’னு எங்கையாவது இடிச்சிருக்கும் , சரி

குளிச்சிட்டு வாரேன் , என்ன குழம்பு இன்னைக்கு ?

வெள்ளிக்கிழம என்ன வைப்பாங்களாம் ? சாம்பார் தான் மாமா சிரிச்சிக்கிட்டே சொன்னவ , வாளி’ல தண்ணி வைச்சாள்.மாமா சுடு தண்ணில குளிக்க மாட்டார்’னு அவளுக்கு நல்லாவே தெரியும்.

குளிச்சி வந்தவனுக்கு பாசத்தோட சோறு போட்டாள்.

குனிஞ்சி சாப்பிட போனவன் காதுல ஐயா.........’னு குரல்க்கேட்டு நிமிர்ந்தான்.

நீ சாப்பிடு மாமா ,நான் போய் யார்’னு பார்க்கிறேன்’னு எழுந்தவளை நிறுத்தி அது கருவாயன் தான் ஈஸ் , நீ சாப்பிடு,

வெளியே.

ஐயா கம்மாயி’ல மடைய திறந்து விட்டாங்களாம் இது கருவாயன்

கெரகம் புடிச்சவனுங்க இப்ப எதுக்கு திறந்தாங்களாம் , ஒரு வாரத்துக்கு முன்னாடி வயக்காடு காஞ்சி கருவாடா கெடக்கும் போது கேட்டதுக்கு தொறக்காதவனுவ’னு முணங்கிக்கிட்டே திரும்பவம் ஈஸே ஈஸே இந்தா காட்டுக்கு போனதும் வாரோம்’னு சொன்னத கேட்ட ஈஸ் , மாமா மாமா’னு கூப்பிட்டுக்கிட்டே வெளியே வரும்முன் சைக்கிளை எடுத்திட்டு கருவாயனும் மாரியும் தெருக்கோடியை கடந்திருந்தார்கள். மாமா வரும்’னு மத்தியானமும்
சாப்பிடாமா காத்துக்கிடந்த ஈஸ்க்கும் வயிறு பசித்து தான் இருந்தது.


மழையும் லேசா வெறித்திருந்தது .....


ஏதோ போஸ்ட் பண்ணனும்னு தோணுச்சி , பாத்து படிச்சி சொல்லிட்டு போங்க :) இந்த வருச ஆ’ரம்பம்.

நானுங்கோ !!!

My photo
நான் அன்பாக, பாசமாக, கோபமாக,நட்பாக, அதிகாரமாக, அலட்சியமாக,பணிவாக, குறும்பாக பேசியிருக்கிறேன்.ஆனால் இந்த 24 ஆண்டுகளில் நான் நானாகவே இருக்கிறேன்...!

வாங்க பழகலாம்

திருக்குறள்

காமத்துப்பால்;கற்பியல்;நெஞ்சோடுபுலத்தல்:

1298-எள்ளின் இளிவாமென் றெண்ணி அவர்திறம்
உள்ளும் உயிர்க்காதல் நெஞ்சு.

பிரிந்து சென்ற காதலரை இகழ்வது தனக்கே இழிவாகும் என்பதால், அவருடைய பெருமையைப் பற்றியே என்னுயிர்க் காதல் நெஞ்சம் எண்ணிக் கொண்டிருக்கும்.

அமராவதி ஆத்தங்கரையின் விளக்கம் :

நீ பிரிந்தபிறகும் கூட
உன்னை வெறுக்கத் தோன்றவில்லை என் இதயத்துக்கு…
என் இதயம் நேசித்தவளென்பதால் மட்டுமல்ல
என் இதயத்தை நேசித்தவளென்பதாலும்!


பிரிந்து சென்ற காதலரை இகழ்வது தனக்கே இழிவாகும் என்பதால், அவருடைய பெருமையைப் பற்றியே என்னுயிர்க் காதல் நெஞ்சம் எண்ணிக் கொண்டிருக்கும் .

எனக்குப்பிடித்தவையை இணையத்தில் பிடித்தவை !

வருந்துகிறேன் !!


என் வாழ்நாள் குறைகிறது
என்பதற்காக வருந்தவில்லை...
உன் நினைவில்
வாழும் நாள் குறைகிறது
என்பதற்காக வருந்துகிறேன்... !!!


நன்றி: வாணி நாதன்

நினைவுகள்

குருதிக் குழாய்களுக்குள்
குறுக்கு நெடுக்குமாய்
பாய்ந்துக் கொண்டிருக்கிறது
இதயத்திற்குள் நிரம்பி வழிந்த
உன் நினைவுகள்...!

நன்றி : இமலாதித்தன்


நீ

சுற்றி ஒருமுறை
பார்த்துவிட்டு
உதடு குவித்து
நீ தரும் முத்தத்தில்
பாதியை அப்படியே
அள்ளிக்கொண்டு
போகிறது காற்று....

நன்றி : மழைக்காதலன்

நெஞ்சோடு புலத்தல்

உனக்குத் துணையாக உன்மனம்…
உன்மனதுக்குத் துணையாக என்மனம்…
எனக்குத் துணையாக…
நான் மட்டும் !


நன்றி : ஆத்தங்கரை


Search This Blog

தெரிஞ்சிக்க ! பூமியிலிருந்து சூரியன் சராசரியாக 14,88,00,000 கி.மீ (93,000,000 மைல்) தூரத்திலிருக்கிறது. சூரியனின் ஒளியானது நமது பூமியை வந்தடைய சராசரியாக 8.33 நிமிடம் எடுத்துக்கொள்கிறது. எப்படி கணக்கிட்டார்கள் : 93,000,000 மைல் தூரம் வகுத்தல் 2,97,600 ஓளியின் வேகம் சூரியனுக்கும் பூமிக்கும் இடையேயான இடைவெளி / ஓளியின் வேகம் = 148800000 / 2,97,600 = 500 500 செகெண்ட்ஸ் வகுத்தல் ஒரு நிமிடற்க்கு 60 செகெண்ட்ஸ் 500/60 = 8.33 சூரிய ஒளி பூமியை வந்தடைய எடுத்துக்கொள்ளும் நேரம்

சிந்தனைக்கு

அன்பை விதைப்பவர்கள் நிம்மதியை அறுவடை செய்பவர் .

ஒவ்வொரு முடிவும் மற்ற ஒன்றுக்கான தொடக்கம் .

கல்வி, அனுபவம் , ஜாபக சக்தி இம்மூன்றையும் உன்னிடமிருந்து யாரும் பிரிக்கமுடியாது .

விரும்பியது கிடைக்கவில்லை என்று வருந்தாதே . கிடைத்துள்ளதை விரும்பு .

அருமை அறியாதவன் வீட்டுக்கு போனால் பெருமை குறைந்து போகும் .

எனக்கு பிடிச்ச பாடல் வரிகள் !

மிக மிக கூர்மையாய் என்னை ரசித்தது உன் கண்கள்தான்..
மிருதுவாய் பேசி என்னுள் வாசித்தது உன் வார்த்தை தான்...
கண்களை காணவே இமைகளே மறுப்பதா..

(தாம் தூம் )


"நான்கு கண்ணாடி சுவர்களுக்குள்ளே நானும்மெழுகு வர்த்தியும்


தனிமை தனிமையோ கொடுமை கொடுமையோ "

(சில்லுனு ஒரு காதல்)



"உன் சின்ன இதழ் முத்தம் தின்னாமல்

இந்த ஜன்மம் வீணென்று போவேனோ ??"

(பூவெல்லாம் உன் வாசம்)



"படுத்தும் பொசுக்குனு தூங்கும் பய

பித்துக்குளி போல இப்ப முழிக்குரானே

வெள்ளன எந்திருச்சு ஓடும் பய

சுள்ளுன்னு சூரியன பாக்குறேனே



அவன் பார்த்ததுமே நான் பூத்துவிட்டேன்

அந்த ஒரு நொடியை நெஞ்சில்ஒளித்துக்கொண்டேன்

நான் குழந்தை என்றே நேற்று நினைத்திருந்தேன்

அவன் கண்களிலே என் வயதறிந்தேன்"



(காதல்)



"பேச எண்ணி சில நாள் அருகே வருவேன்

பின்பு பார்வை போதும் என நான் நினைத்தேநகர்வேன் ஏமாற்றி..



இரவும் அல்லாத

பகலும் அல்லாத

பொழுதுகள்

உன்னோடு கரையுமா??!!



கரைகள் அண்டாத

காற்றும் தீண்டாத

மனதுக்குள் எப்போது நுழைந்த்திட்டாய்??!

தடையில்லை சாவிலும் உன்னோடு வர ..."


(சுப்பிரமணியபுரம்)

Elvis Presley's Graceland

நீயில்லாத நாட்களில் வர்ணங்களும் வர்ணமற்றவையாக !!!

நீயில்லாத நாட்களில் வர்ணங்களும் வர்ணமற்றவையாக !!!

வாங்க, வாங்க, ஏன் இவ்ளோ லேட்டா வாரிங்க ?