இயற்கை எனது நண்பன், வாழ்க்கை எனது தத்துவ ஆசிரியன், வரலாறு எனது வழிகாட்டி - தமிழீழ தேசிய தலைவர் யோசிப்பதானால் நிதானமாக யோசியுங்கள், செயல்படுவதானால் உறுதியுடன் செயல்படுங்கள், விட்டுக் கொடுப்பதனால் பெருந்தன்மையுடன் விட்டுக் கொடுங்கள். எதிர்ப்பதனால் துணிந்து எதிர்த்து நில்லுங்கள்

என்னுடைய நான்,

உலகம் பிறந்தது எனக்காக, ஓடும் நதிகளும் எனக்காக, இன்னும் உலகின் அனைத்து ஏற்பாடுகளும் எனக்காக, ஆனால் நான் யாருக்காக ?

சிறுவர்களுக்கான பாடல்களின் தொகுப்பு பிடிஃப்

ஹாய் குட்டிஸ் ,



கடவுள் வாழ்த்து.


முன்னறி ரானி யவரன்பு ஆதிமூலம்
நன்னெறி கூறிய தெய்வமே - நன்வளர்
பெற்றோர் எனமகிழ் மக்கள் கடவுளர்
நற்றாள் தொழுதெழு வாம்.


இங்கு சிறுவர்களுக்கான பாடல்களை தொகுத்து பீடிஃப் வடிவத்தில் வழங்கியுள்ளேன் ,



இதனை தறவிறக்கம் செய்ய

1.சிறுவர்கள் பாடல்கள் ,




இணையத்திற்க்கு நன்றி

சிறுவர்களுக்காக கதைகள் பீடிஃப் வடிவில்

சிறுவர் பூங்கா - அறிமுகம்


வணக்கம் குட்டீஸ் ,





குழந்தைகளுக்கு என்று ஒரு இந்த தொகுப்பை வழங்குகிறேன்.

சிறுவர் சிறுமியர்களுக்கு நல்ல நல்ல கதைகள், கட்டுரைகள், அறிவுத்திறன் வளர்க்கும் பகுதியில், மற்றும் பல தகவல்கள் இங்கே கிடைக்கும்.உங்கள் குழந்தைகள் மேன்மையடைய நீங்க பாடுபடுங்கள்.


பெரியவர்களான நீங்க, இப்பகுதியில் இருப்பதை படித்து, உங்கள் குழந்தைகளுக்கு சொல்லுங்கள். குழந்தைகளோடு சிறிது நேரமாவது சந்தோசமாக செலவிடுங்கள்.


உங்களின் வெற்றி என்பது உங்கள் குழந்தைகளின் வளர்ப்பிலேயே அடங்கியிருக்கிறது.




குழந்தைகளுக்காக இந்த கதைகளையெல்லாம் தேடி தேடி பிடிச்சி அத பீடிஃப் ஆ ஆக்கி இங்க தந்திருக்கிறேன் ,



அதை தரவிறக்கம் செய்ய சிறுவர் பூங்கா, கிளிக்கவும்

தென்கச்சி கோ.சுவாமிநாதன் அவர்களின் கதைகள்

நெஞ்சம் மறந்தாலும் , நினைவுகள் மறக்க விட வில்லை !!!



ஆல் இண்டியோ ரேடியோ , காலை ஏழு மணி இருபத்தைந்து நிமிடம் , இன்று ஒரு தகவல் வழங்குபவர் தென்கச்சி கோ சுவாமிநாதன் அவர்கள், அப்படின்னு ஆரம்பிப்பாங்களே வானொலில இப்போலாம் எங்க கேட்க முடியுரது ,

“இன்று ஒரு தகவலை இழந்து விட்டோம். அவரது பேச்சாற்றல் மற்றும் நகைச்சுவை திறன் அளப்பரியது. அவரின் சீரிய பணி மதிப்பற்றது. அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனிடம் பிரார்த்திப்போம் “


எனக்கு கிடைத்த வரை அவரின் கதைகளை சேகரித்து இருக்கிறேன் , இது மிக மிக குறைவு தான் ,

இன்னும் சேகரிப்பு நடைப்பெற்றுக்கொண்டே இருக்கிறது என்று எங்களின் சங்கத்தின் சார்பாக தெரிவித்துக்கொள்கிறோம்

தென்கச்சி கதைகள்,

தோப்புகளுடன் (ஆப்புகளுடன்) ஆ’ரம்ப வருசம்

தோப்புகளுடன் (ஆப்புகளுடன்) ஆ’ரம்ப வருசம் :


புது வருடம் பிறந்து முழுதாக பதினைந்து நாட்கள் ஆக வில்லை , புது புது விதமாக ஆப்புகள் மாற்றம் தோப்புகள் வந்து கொண்டே இருக்கிறது




1. ஜனவரி ஒன்னாம் தேதி நண்பர்கள் எல்லோருக்கும் அழைத்து புத்தாண்டு வாழ்த்து சொல்ல ஆசைப்பட்ட்து ஒரு குத்தமா ? வந்த்து ஆப்பு ஒரு ஈராக்கியின் ரூபத்தில் அவனை எஸ்கார்டு பண்ணிக்கொண்டு வெளிக்கேட்டில் கொண்டு போய் விட்டு விட்டு திரும்பி வரும் போது மணி ஆரை (6) தாண்டி இருந்த்து  அப்புறம் வழக்கம் போல என்னோட ரிப்போர்டை முடிக்க மணி 10 த்தை தாண்டியது  பின்பு யாருக்கு கால் பண்ண , முடியவில்லை ?

2. இரண்டாம் தேதி கம்பெனியில் இருந்து வந்தது ஆப்பு விடுமுறை நாட்களை எடுத்தே ஆக வேண்டுமென்று , பணமாக தரப்பட மாட்டாது என்று அறிவித்தது (ஃபைனான்ஸ் மேனேஜேர்’ஸ்), இதனால் பைனான்ஸ் மேனேஜேரை ஒழிப்போர் சங்கம்’னு ஒன்னு ஆரம்பிக்க போறேன்

3. மூனாம் தேதி எனது கம்பெனியுடன் சண்டை ஆரம்பித்தது , காருக்காக அப்புறம் இதே நாளில் எங்க கம்பெனி ஐ’டீ யுடன் ஏழ’ரை ம்ம் எந்த கம்பெனி ஐ’டீ தான் ஏழரை இழுக்காம இருந்தார்கள் , எல்லா ஐ டீயும் இப்படி தானே (ஒரு வேளை இவங்க ஹார்ட்வேர்ல ந்ங்கிறதை தவறாக

4. வீட்டில் சில பல புது ரூல்ஸ்கள்

5. நான் இருக்கும் இடத்தில் சில பிரச்சனைகள் , வந்தது பாம் விழுந்தது ராக்கெட்


6. எனது ஜெனேரேட்டரின் பேட்டரி பிரச்சனை செய்தது, அதனை சரி செய்ய ஆரம்பித்து இன்னும் முடியல ......... அட வேலை முடியல

7. – இன்னைக்கு ரெண்டாவது ஜெனெரெட்டரின் ஃபில்டர் அடைச்சி அதில் ஓட்டை விழுந்தது , நான் என்ன பீட்டரா அதுல கை வச்சிக்கிட்டே இருக்க உடனே ஜெனெரெட்டர ஆஃப் பண்ணிட்டு பக்கத்து கம்பெனில போய் ஓசிக்கு ஒரு ஃபில்டர் வாங்கி வந்து போட்டேன் ,இதுலையே அன்னைக்கு நாள் ஓடிப்போச்சி ,


8. – பாக்தாத் ஈராக்கி ஒருத்தர் என் மேல ரொம்ப கண்ணா இருந்தான் அதனால் எப்படியெல்லாமோ முயற்சி பண்ணினான் என்னைய மாட்டி விட ஆனா அவனுக்கு தெரியாது சிறுத்த தான் சிக்கும் சில்வண்டு சிக்காதுன்னு  மாட்டலையே , நாம யாரு சில்வண்டுல

9. – தூபாய் ஆபிஸில் இருந்து ஒரு வகையான ஆப்பு (சில வியத்தை சொல்ல்லாம் இது வேறவகையான ஆப்பு , (ஒரு வேளை இவன நல்லவன்னு சொல்லிட்டாங்களோனு நினைக்கிறிங்களா ? அவ்வ்வ்வ்வ்)

10. – எங்க கான்டீராக்ட் சைன் பண்ண சொல்லி நான் அனுப்பி கிட்ட தட்ட ஒரு மாசத்துக்கு மேல ஆச்சி இன்னும் எங்க ஜிம் சைன் பண்ணல . இங்க நான் யாருக்கிட்ட கொடுக்கனுமோ அந்த பய குடையா குடையுதான் அவ்வ்வ்வ்வ்வ் (கொய்யால ஒரு தடவ ஆப்பு வச்சாத்தான் தெரியும் போல )

11. – இரவு ஒரு ஒன்பது மணி இருக்கும் அந்த நேரத்தில் எனக்கு ஹெட்ஸ் அப் கொடுத்தாங்க இந்த மாதிரி நேரடியா ஒரு டிரக் அனுப்புறோம்’நு , அதனுடைய டீடெயிலு வாங்கிக்கிட்டு பத்து மணிக்கு மெமோ வாங்க போணேன் அவங்க நாளைக்கு காலைல வாங்கன்னு சொன்னது ,


12. – காலை 6.55க்கு ஒரு பாம் ,7 மணிக்கு ரெண்டாவது பாம் விழுந்தது ,அதனால் எங்களோட ஹெட் கவுண்ட் கொடுத்திட்டு மெமோவ வாங்கிட்டு வந்த்து , குவைத்தில் இருந்து நேரடியாக ஒரு ட்ரக் வந்த்து , அவனுக்காக வெளியில் காத்திருந்த்து அவன் உள்ள அதாவது பேஸ்சுக்கு உள்ள எனக்காக காத்திருந்த்து ,

13. பதிமூனாம் தேதி என்னோட காருக்கு பேட்டரி செத்து போச்சி  அதனை என்ன பண்ணலாம்னு ஒரே யோசனைல இருந்தேன் , கார் இல்லாட்டி எங்க போக ஒரு திக்கம் போக முடியாது , அப்புறம் என்னோட கார் டிரைவும் (HARD DRIVE 250GB) செத்து போச்சி (அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்) இது தானுங்க பெரிய துக்கம் எனக்கு இதுல என்னோட படங்கள் மட்டுமே கிட்ட தட்ட ஒரு 40GB வச்சி இருந்தேன் , அப்புறம் சில நல்ல புத்தக்ங்கள், நல்ல படங்கள், என்னோட நண்பர்களின் கவிதை தொகுப்பு, நான் எழுதிக்கொண்டிருந்த காமடிகள் , மிக அரிதான சாப்ட்வேர்கள் (எல்லாம் ஒரிஜினல் கீயெல்லாம் இருந்திச்சி ) இப்படிக்கா ஒரு 180Gb வச்சி இருந்தேன் ,அதுல மிச்சம் இடம் இருந்ததே ஒரு 20GB மட்டும் தான் , போச்சி போச்சி இதுவும் போச்சி

14. பொங்கல் நேத்து ஐய்யையோ என்ன கொடும சார் ஊருக்கு போன் போட்டேன் என்னா ஆப்பு வைக்காங்கப்பா, பேசாமா இந்த அண்ணன்மார்கள் எல்லாத்தையும் ABC ல சேர்த்துவிட்டுடலாம் , சே, சி பி ஐ ல சேத்துவிட்டிடலாம் , நான் பண்ணினதயெல்லாம் எனக்கே எடுத்து சொல்லுறார் , அப்புறம் ரொம்ப என்ஜாய் பண்ணிக்கிட்டு இருக்காங்க (நான் இல்லைல ,அது தான் இந்த என்ஜாய், வருவேன்டீ )அப்புறம் கம்பெனில இருந்து வந்த ஆப்பு என்னனா நான் தான் சொன்னேனே எனக்கும் பாக்தாத்தில் இருக்குறவங்களுக்கும் வாய்க்கா தகறாருன்னு , அதனால் என்னோட மத்த ரிப்போர்ஸ் எல்லாம் நானே (அவ்வ்வ்வ்வ்வ்வ்) கொடுக்கனும் அதுவும் டீட்டெயிலா , இதுக்கு கிட்ட தட்ட ஒரு மணி நேரம் ஒதுக்கனுமே , போச்சி போச்சி ஆப்புகளின் சங்கம்ம்

15. அப்புறம் இன்னைக்கு இங்க சீஓர் (COR) க்கிட்ட இருந்து வந்த மடல் பெரிய ஆப்பு , உங்களுக்கு எவ்ளோ ஃபீயுல்(FUEL) உபயோகிக்கிறீர்கள் ? என்ன ஃபுயூல் யூஸ்(FUEL USE) பண்ணுறிங்க ? ஏன் (காரணம்) ? எத்தன ஜெனெரெட்டர்கள் இருக்கு அதன் மாடல் என்ன ? எவ்ளோ கேப்பாக்குட்டி சே கேப்பாச்சிட்டி , எத்தன வண்டி இருக்கு அதன் மாடல் அதனுடைய கேப்பாசிட்டி எவ்ளோ , என்ன ஃபீயுல்(FUEL) யூஸ் பண்ணுறிங்க இதெல்லாம் ஒரு எக்ஸெல் சீட்டில் போட்டு கொடுங்க ஒவ்வொரு மாதமும் எனக்கு வேணும் , இது தானுங்க அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்




பாருங்க மக்கா இது தான் நான் சொல்லி வந்த ஆப்பு ஒரு தடவ வாங்கினாத்தான் ஆப்பு அதே பல தடவ வாங்கினா தோப்பு தானே அப்படினா தோப்புகள்’னு தான் சொல்லனும் , ம்ம் வருசம் முன்னூற்று அறுபத்தைந்துல வெறும் பதினைந்து நாள் போயிருக்கு , இதுக்கே இவளோ தோப்பு வாங்கிருக்கேனே , இன்னும் முன்னுற்று ஐம்பது நாள் எப்படி ஓடப்போகுதோ அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

இதுக்கு போன வருசமே எவ்வளவோ பெட்டரு , ம்ம் போன வருச பொங்கலுக்கெல்லாம் ஊருல இருந்தேன் எம்முட்டு சந்தோசமா,


இந்த வருசம் ஓப்பனிங்கே சரியில்லையே ,ஃபினிஸிங் எப்படி இருக்குமோ ?


இப்படிக்கு ,


ஆப்பு வாங்குவோர் சங்கம்

சௌரவின் ஆட்டம்

ரொம்ப நாள் ஆச்சி கல்கத்தா மகாராஜா, முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி அவரிகளின் ஆட்டத்தை பார்த்து , அது தான் பார்க்கனும் போல இருந்திச்சி ,பாத்தேன் ப்ளோக்ல போடனும் போல இருந்திச்சி போட்டேன் ,

நீங்களும் பாருங்க ஹி ஹி ஹி







சரி வந்தது வந்தாச்சி ஏதாச்சும் எழுதிட்டு போங்க சார் :)

நண்பரின் கிறுக்கல்கள்

எனது நண்பர் பிரசாத்தின் கிறுக்கல்களின் பிடிஃப் வடிவத்தை பொங்கலன்று வெளியிட முயர்சி எவ்வளவோ செய்யப்பட்டது ,ஆனா சில பல காரணத்தினால் அதன் வேலை பாடு முடிய வில்லை (எப்படியெல்லாம் கிறுக்கிருக்கான் ) ஆதலால் அவரின் பிளோக் இங்கே இணைக்கப்பட்டுள்ளது , பாருங்கள்

படியுங்கள்










இனிய பொங்கல் வாழ்த்துகள்

இந்தியக் கோடீஸ்வரராக மாறிய கருணாநிதி !!!

இந்தியக் கோடீஸ்வரராக மாறிய கருணாநிதி

நன்றி : எழுதுகிறேன் திலிப் ,

தா.பாண்டியன் என்னவோ… தமிழ்நாட்டில் மூன்றில் ஒரு பங்கை வாங்கி சொத்து குவித்ததாக மீடியாவில் காட்டி என்னவோ பெரிதாக சாதித்து விட்டதாக ….காட்டும் ஐயா கலைஞர் அவர்களே…
இதோ உங்கள் சொத்து..பட்டியல்..எங்களுக்கு தெரிந்த வரை தனக்கு தானே எழுதிக் கொண்ட நெஞ்சுக்கு நீதி புத்தகத்தில் பக்கம் 80 ல் கூறியிருப்பதை பார்க்கலாம்.

*1944 ம் ஆண்டு எனக்கும், பத்மாவதிக்கும் திருமணம் நடைபெற்றது. ஓராண்டு காலம் வரையில் வாழ்க்கையின் சுவைபடலம் பேரானந்தமாகத்தான் போய்க் கொண்டிருந்தது. எனக்கு நிரந்தர வேலை எதுவும் இல்லை. இதனால், மனஅமைதி குறைய தலைப்பட்டது. இப்படியே வேலை இல்லாமல் திரிந்து கொண்டிருந்தால், வாழும் காலம் எப்படி போய் முடிவது? என்ற கேள்விகள் எல்லா பக்கங்களிலிருந்தும் கிளம்பின. ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் வேலை தேடி அலைந்தேன். வாழ்வதற்கு என்ன வழி என்று தீவிரமாக யோசிக்க தொடங்கினேன். அதன் விளைவு நாடக நடிகனாக ஆனேன்.
இவ்வாறு தனது புத்தகத்தில் எழுதியிருக்கிறார் கருணாநிதி.
கருணாநிதியின்

பக்கம் 81,82 ல்…………..

*விழுப்புரத்தில் ஒரு வாடகை வீட்டில் தங்கியிருந்தோம். அங்கு அறைகுறையாக உணவு கிடைக்கும். குளிப்பது என்பது அங்கு மிகவும் பெரிய பிரச்சனை. நாங்கள் குடியிருந்த இடத்திலிருந்து குளிக்க வேண்டுமென்றால், 1 கிமீட்டர் தூரமாவது செல்ல வேண்டும். வயலுக்கு தண்ணீர் பாய்ச்சப்படும் இடங்களில் தான் எங்களது குளியல். அந்த குழாய் தான் எங்களுக்கு குற்றால அருவி. குடிநீர் எல்லாம். குளித்து விட்டு வீட்டுக்கு கிளம்புவோம். கடுமையான வெயில் கொளுத்தும். சிறிய துண்டை இடையில் கட்டிக் கொண்டு, துவைத்த சட்டையை தோளில் உலரப் போட்டுக் கொண்டு சவுக்கார சோப்பினால் வெண்மையாக மாற்றப்பட்ட வேட்டியை, இரு கைகளாலும் தலைக்கு மேலே குடை போல பிடித்துக் கொண்டு அதனை உலர வைத்தவாறு வீட்டிற்கு வந்து உலர்ந்த பின் அவற்றை அணிந்து கொண்டு பிற்பகல் உணவிற்கு தவமிருப்போம்.

இதற்கடுத்து, 92,93 ம் பக்கங்களில்…………….

* பெரியாரின் ஈரோட்டு குடியரசு பத்திரிகை அலுவலகத்தில் துணை ஆசிரியராக பணியாற்றும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. மாதம் சம்பளம் 40 ரூபாய். அதிலும் பிற்பகலும், இரவும் பெரியார் வீட்டில் சாப்பிடுவதற்காக இருபது ரூபாய் பிடித்துக் கொள்வார்கள். காலை, மாலை சிற்றுண்டிக்காக மாதம் 10 ரூபாய் போய் விடும். எனது இதர செலவுகள் ஐந்து ரூபாய். மீதம் 5 ரூபாயை தான் என்னை நம்பி அண்டி வந்த அருமை மனைவி பதமாவதிக்கு மாதந்தோறும் திருவாரூக்கு மணியார்டர் செய்வேன்.

பக்கம் 92,93 ல்…………………………

* பெரிய அளவில் வைத்திய உதவிகளை எனது தந்தையாருக்கு செய்ய வசதியான நிலையில் குடும்பம் இல்லை. என் தந்தை இறந்து விட்டார்.

இப்படி கருணாநிதி எழுதிவைத்துள்ளார்.
இன்றைக்கு கருணாநிதி குடும்பத்தின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

1.கருணாநிதியின் கோபாலபுரம் வீடு
2. முரசொலி மாறனின் வீடு-கோபாலபுரம்
3. கிருஷ்ணன் கோவில் அருகில்-உறவினர்களின் வீடு
4. முரசொலி செல்வம், செல்வி வீடு- கோபாலபுரம் ( கருணாநிதியால் கொடுக்கப்பட்டது)
5. மு.க.முத்து வீடு-கோபாலபுரம்
6. ஸ்வர்ணம் வீடு- கோபாலபுரம்
7. அமிர்தம் வீடு- கோபாலபுரம்
8. எழிலரசி வீடு ( முரசொலி செல்வத்தின் மகள்) -கோபாலபுரம்
9.ஆலிவர் சாலையில் ராஜாத்தி அம்மாள் வீடு
10. மு.க.ஸ்டாலின் வீடு- வேளச்சேரி
11. உதயாநிதி பொழுது போக்கு வீடு- ஸ்னோபவுலிங்- நுங்கம்பாக்கம்
12. உதயநிதி தீம்பார்க்- (மாமல்லபுரம் அருகில்)
13. பில்லியர்ட்ஸ் மையம் ( வேளச்சேரி)
14. கலாநிதி மாறன் வீடு (அடையாறு போட்கிளப் ரோடு)
15. தயாநிதி மாறன் வீடு
16. டிஸ்கோ- குவாலிட்டி இன் அருணா, அமைந்தகரை
17. கொட்டி வாக்கத்தில் மாறனின் பண்ணை வீடு
18. டிஸ்கோ- எத்திராஜ் காலேஜ் எதிரில்
19. டெலிபோன் எக்சேஞ்ச் கட்டிடம் -நீலாங்கரை
20. எம்.எஸ் இன்டஸ்ட்ரீஸ்- ராமச்சந்திரா மருத்துவக்கல்லூரி போரூர் அருகில்
21. முரசொலி கட்டிடம்- அண்ணாசாலை
22. சுமங்கலி கேபிள் கட்டிடம்- கோடம்பாக்கம் மேம்பாலம்
23. ராஜா அண்ணாமலை புரம் எம். ஆர்.சி நகரில் சன் தொலைக்காட்சிக்காக 32 கிரவுண்ட் நிலம்
25. சன்டிவியின் புதிய அப்-லிங்க் ஸ்டேசன்( கோடம்பாக்கம்)- மாதவன் நாயர் காலணி
26. இந்தியா சிமெண்ட்ஸ் பங்கு, சிமிண்ட் விலையை உயர்த்துவதற்காக
27. கோரமண்டல் சிமிண்ட் ஏற்படுத்தப்பட்டது
28. கூன் ஹுண்டாய்- அம்பத்தூர்- அண்ணாநகர்-அண்ணாசாலை
29. அந்தமான் தீவின் நிலங்கள்
30.அஸ்ஸாம் மாநிலத்தில் டீ, காபி தோட்டங்கள்
31. அம்பானியின் உரத்தொழிற்சாலையில் பங்கு
32. மேற்குவங்காளத்தில் தோல் தொழிற்சாலை
33. ஸ்டெர்லிங் சிவசங்கரனுடன் கூட்டு தொழில்
34. ஆந்திரா பார்டர் சிமெண்ட் ஏற்படுத்தப்பட்டது
35. பெண்டோபர் நிறுவனத்துடன் கூட்டு
36. கேரளாவில் மாமன், மாப்பிள்ளை நிறுவனத்துடன் காப்பி, மற்றும் ரப்பர் தோட்டங்கள்
37. செல்வம் வீடு
38. முக.ஸ்டாலின் சொத்துக்கள்
39. கருணாநிதி சொத்துக்கள்- திருவாரூர், காட்டூர், திருகுவளை.
40.முக.அழகிரி- மதுரை, திண்டுக்கல், கொடைக்கானல், மேலூர் சொத்துக்கள், மதுரை நகரின் வீடியே பார்லர்கள், கடைகள், ஸ்கேன் சென்டர்கள் உள்ளிட்ட பண்ணை வீடுகள்
41. செல்வம் வீடு-பெங்களுர்
42. உதயா டிவி இணைப்பு- பெங்களூர்
43. பூங்சி டிரஸ்ஸஸ்- பீட்டர்ஸ் சாலை
44.முக.தமிழரசன்- ரெயின்போ பிரிண்டர்ஸ், இந்திரா கார்டன்- சென்னை பீட்டர்ஸ் சாலை.
45. முக.தமிழரசன்- அந்தியூரில் உள்ள சொத்துக்கள்
46. தலைப்பாக்கடடு பிரியாணி சென்டர்- தி.நகர், ஜி.என்.செட்டி சாலை, சென்னை.
47. கோவையில் உள்ள டிபார்ட்மெண்டல் ஸ்டோர்
48. மல்லிகா மாறனின் உறவினர்களின் பெயரில் கும்பகோணம், மயிலாடுதுறை, திருவாரூர் மற்றும் சென்னையில் சொத்துக்கள்.
இங்கு அழகிரி, கனிமொழியின் சொத்துக்கள் சேர்க்கப்படவில்லை.
திருவாரூரில் இருந்து கட்டிய வேட்டியும், தோளில் போட்ட துண்டுடன் , சென்னை நகருக்கு கள்ள ரயில் ஏறிவந்த கருணாநிதி குடும்பம் இன்று இந்திய பணக்காரர்கள் பட்டியலில்


























அப்புறம் இன்னொரு காமடியான காணொளி , இதனை யூடியுப்’ல இருந்து தரவிறக்கம் பண்ணினேன் , திரு. கருணாநிதி அவர்கள் நடத்திய உண்ணாவிரத்தையும் , தூள் படத்தில் ஒரு அரசியல் வாதி நடத்திய உண்ணாவிரத்தையும் சேர்த்து ஜெயா டிவியினர் நடத்திய அருமையான தொகுப்பு காட்சியை இங்கே காணுங்கள்,


வாழ்க ஜனநாயகம்

தேசிய தலைவரின் தந்தையார் திரு வேலுப்பிள்ளை மரணம் !

தலைவரின் தந்தை திரு :வேலுப்பிள்ளை மரணம் :(



நல்லதொரு தேசிய தலைவரை பெற்றெடுத்த அன்னாருக்கு வீர வணக்கங்களை

தெரிவித்துக்கொள்கிறோம் ,






கொழும்பு, வியாழன், 7 ஜனவரி 2010( 13:44 IST )


FILE
கொழும்பில் தனி இடமொன்றில் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் தடுத்துவைக்கப்பட்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் தந்தை ‌திருவேங்க‌டம் வேலுப்பிள்ளை (86), இன்று காலை மரணமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் சிறிது காலம் நோய்வாய்ப்பட்டிருந்ததாகவும், அதன் காரணமாகவே இறந்ததாகவும் இலங்கை இராணுவச் செய்திகள் தெரிவிக்கின்றன.

சமீபகாலமாக நோய்வாய்பட்டிருந்த வேலுப்பிள்ளைக்கு, எந்த வகையான மருத்துவ உதவிககள் அளிக்கப்பட்டது என்றோ, அல்லது எந்த நோயின் தாக்கம் காரணமாக அவர் இறந்தார் என்பது பற்றியோ இராணுவத் தரப்பு கூற மறுத்துள்ளது.

அவரது உடலை என்ன செய்யப் போகிறார்கள் என்பது குறித்தும் தெளிவாக எதுவும் கூறப்படவில்லை.

வேலுப்பிள்ளை தடுத்து வைக்கப்பட்ட அதே இடத்திலேயே பிரபாகரனின் தாயாரும் தடுத்துவைக்கப்பட்டுள்ள நிலையில், அவரது நிலையும் பெரும் சந்தேகத்திற்கிடமாகவே உள்ளதாக கூறப்படுகிறது.



நன்றி : http://tamil.webdunia.com/newsworld/news/international/1001/07/1100107039_1.htm

2010காலண்டர் தரவிறக்கம் செய்ய !

ஜனவரி மாசம் வந்திருச்சி , வருச காலண்டரும் முடிஞ்சிருச்சி ஆதலால் இங்க புது

காலண்டரை தரவிறக்கம் பண்ண என்னால முடிஞ்ச உதவி


எது இருக்கிறதோ இல்லையோ! நம் அறையில் காலண்டர் ஒன்று வேண்டும். எங்கு தேடியும்
இலவசமாகக் கிடைக்கவில்லையா? இன்டர்நெட்டில் ஒரு தளம் நாடு வாரியாக, விடுமுறை நாட்களுடன் காலண்டரைத் தருகிறது. மாதவாரியாகவும், ஆண்டு முழுமைக்கும் ஒன்றாகவும் இதனைப் பெறலாம். இவை பி.டி.எப். பைலாகவும், டாகுமெண்ட் பைலாகவும் கிடைக்கின்றன. தரும் காலண்டரில் மாற்றங்கள் செய்திட வேண்டும் என எண்ணினால், டாகுமெண்ட் பைலாக இறக்கிக் கொள்ளுங்கள். இதனை அச்செடுக்கலாம்; அல்லது கம்ப்யூட்டரிலேயே பைலாக வைத்தும் பயன்படுத்தலாம். இதற்கு நீங்கள் செல்ல வேண்டிய பகுதி 2010 இங்கு சென்றவுடன் நாடு தேர்ந்தெடுத்து அமைத்து ஓகே தந்துவிட்டால், உடன் காலண்டர் கிடைக்கும்

வாழ்க வளமுடன்

அப்படியே வருகைய பதிவு செய்யவும் :)

கவுண்டரும் நானும் !!!

கவுண்டருடன் நானும் , செந்தில் சாரும் !!!





புது வருசம் பிறக்க போகுதுன்னு ஒரே கலவரத்தில் இருந்தது எங்க அலுவலகத்தில் நானும் எதுனாச்சும் பண்ணனுமே அப்படின்னு எழுத ஆரம்ச்சு கவுண்டர் வீட்டுக்கு போக முடிவு எடுத்து கிளம்பியாச்சி , அங்கே போனா என்ன பேசலாம்’னு யோசனை ?? அப்போ ஒரு யோசனை தோணுச்சி புது வருசத்திற்க்கு எதாவது ஒரு கெட்ட பழக்கத்தை கை விடுவார்கள் , அப்புறம் ஒரு நல்ல பழக்கத்தை எடுத்துக்கணும் இது வழக்கமா எல்லோரும் (உருப்படனும்’னு நினைக்கிரவங்க ) செய்ற விசயம் தான் , நாம வேற எதாவது ஒரு நல்ல விசயங்களை கேள்வியாக கே க்கனுமே’னு ஒரு எண்ணம் அதே நேரம் எதாவது ஏடாகுடமா கேள்வி கேட்டு செந்தில் சார் மாதிரி அடி வாங்கிற கூடாதே என்ற எண்ணமும் & பயமும் இருந்தது , இந்த சிந்தனை முடியும் நேரம் நான் கவுண்டர் வீட்டு வாசலுக்கு இருந்தேன் ,

வாங்க வாங்க’னு ஒரு புன்னகையுடன் வாசலில் வரவேற்றுக்கொண்டு இருந்தார் கவுண்டர்




வணக்கம் சார் ,...இது நான்

வணக்கம் , என்ன சாப்பிடுதிங்க ? (தமிழனுக்கே உரித்தான விருந்தோம்பல் முறையில் ) காபி , டீ , இது கவுண்டர் ...

காபி டீ எதும் நான் சாப்பிடுறது இல்லை சார் , அது மட்டுமில்லாமல் மதியம் உணவு சாப்பிடும் நேரமிது .,

கவுண்டர் மனதுக்குள் (தீவட்டி தலையா சாப்பாடு தான் வேணுமின்னு நேரடியா கேக்காம எப்படியெல்லாம் பிட்டு போடுது பாரு )

அதுக்கென்ன மத்தியானம் நம்ம வீட்டுளையே சாப்பிட்டுங்க .ஹெ ஹெ  (அவருக்கே உரித்தான நக்கல் சிரிப்புடன் )

சரிங்க சார் ..(நாம விட்டுடுவோமா என்ன ?இன்னைக்கு ஒரு வெட்டு வெட்டிர வேண்டியதுதான் )

சரிங்க சார் விசயத்துக்கு வரலாமா ? இது நான்

கவுண்டர் : வாங்க அதுக்கு தானே வந்திருக்கிங்க , நீங்க கேளுங்க ஆபிசர் 

நான் : நீங்க என்ன தொழில் பண்ணுரிங்க ?

கவுண்டர் : நான் ஒரு முழு நேர அரட்டை அடிப்போர் சங்கத்தில தலைவரா இருக்கேன் ,

நான் : அது என்ன சார் முழு நேர அரட்டை அடிப்போர் சங்கம் ? இது வரை நான் கேள்வி பட்ட்தே இல்ல ?

கவுண்டர் : சத்திய சோதனை ..!

நான் : நீங்க ஏன் செந்தில் சார அடிச்சிக்கிட்டே இருக்கிங்க ?

கவுண்டர் : மிதிக்கனும்’னா கால தூக்க வேண்டியதா இருக்குது அது தான் அடிக்கிறென் , வேணும்னா உங்கள மிதிச்சிக்காட்டவா ?

நான் : உங்களுக்கு பிடித்தமான உணவு எது ?

கவுண்டர்: டேய் மொள்ள மாரி எதுனா கேள்வி கேக்கனும்னு கேக்குரியா ?

நான் : இதெல்லாம் நாளைக்கு சரித்திரத்தில வரும்

கவுண்டர் : டேய் நார வாயா ஓட்ட சுவத்துல கூட வராது , உன்னோட வீட்டுலையோ இல்ல உன்னோட இத்துபோன இந்த ப்ளாக்’லையோ நீயா எழுதிக்கிட்டாதான் உண்டு , சரி நான் அப்பத்துல இருந்து பாத்துக்கிட்டே இருக்கேன், அங்கேயே என்ன பாக்கிர ? ஒ பசிக்கிதா ! நாயே சொல்லி தொலைக்க வேண்டியதுதானே , வா சாப்பிட்டுக்கிட்டே பேசலாம்..

நான் :   சரிங்க சார் ,(கடேசி பல்லு தெரியும் வரையில் ஒரு சிரிப்பு சிரிச்சிக்கிட்டே சாப்பிட சென்றேன் ,

(சாப்பாடு முடிந்த பின்னர் )


கவுண்டர் :
இப்ப நாச்சும் ஒழுங்கா உருப்படியா கேள்வி கேளு ! இல்லைனா குருக்குலையே மிதிப்பேன் ,

நான் : ஒகே சார் , நாம இப்ப சிரியஸா ஆரம்பிக்கலாம் ,

கவுண்டர் : ஆமா , இவரு மருத்துவமனையில ரொம்ப முடியாம கிடக்கார், நாங்க ஹார்லிக்ஸ் , ஆரஞ்சு ,ஆப்பிள் எல்லாம் வாங்கிட்டு போய் கொடுத்துக்கிட்டே ஆரம்பிக்கணும் , கேள்விய கேளுங்க சார் ?

நான் : சூஊஊஊஊஊ , இப்பவே கண்ண கெட்டுதே ,

கவுண்டர் : இன்னும் கொஞ்ச நேரத்தில காதும் அடைக்கும் , அப்புறம் மூக்குல காத்து வரும் ,இது கண்டிப்பா அந்த நோய் தான் , எதுக்கும் நீ கொஞ்சம் தள்ளி இருந்தே கேள்விய கேளு ,

நான் : சரிங்க சார் , நீங்க ஏன் எந்த ஒரு நிகழ்ச்சிலையும் இது வரை பங்கேர்க்கவில்லை ?

கவுண்டர் : நாட்டுக்கு ரொம்ப முக்கியமான கேள்வி இது ?

நான் : சார் சொல்லுங்க சார் , இது நாட்டுக்கு முக்கியமோ இல்ல, இல்லையோ ,என்னைய மாதிரி உங்க ரசிகர்களுக்கு இது ரொம்ப ரொம்ப முக்கியம்

கவுண்டர் : டேய் அர மண்டையா , நிப்பாட்டு , இதெல்லாம் கொஞ்சம் ஓவரா இல்ல ? சாப்பிட்ட சாப்பாட்டுக்கு மேல பேசுறியே சாமி .. சரி சொல்லுறேன் கேட்டுக்கோ , எனக்குன்னு சில கட்டுப்பாடு வச்சி இருக்கேன் அதுல இருந்து என்னால வெளியேர முடியாது ,அவ்ளோ தான் இதுக்கு மேல அத குடைஞ்சன்னு’வை ,அப்புறம் உன் சங்க கடிச்சி காக்காய்க்கு போட்டுருவேன் ,

(வெளியில காகம் கரையும் சத்தம் கேட்க ஒரு பயத்துடன் அடுத்த கேள்விக்கு )

நான் : இப்பலாம் உங்க படம் ஏன் வருவது கிடையாது ?

கவுண்ட்ர் : டேய் இதெல்லாம் ரொம்ப ஒவரு தான்’டா இந்த முகத்தையே ஜன்ங்கள் எத்தன காலத்துக்குத்தான் பாப்பாங்க ,இங்க பாருடி அவங்க ரொம்ப உசாரானவங்க , அவோளோ சீக்கிரம் ஏமாத்த முடியாதுடி ,

நான் : ஹி ஹி ஏன் சார் இது தான் உண்மையா ?

கவுண்டர் : அட ட்ப்பா தலையா , இது தான் உண்ம நம்புனா நம்பு இல்லாங்காட்டி அப்படியே எகிரி குதிச்சி ஒடிப்போயிரு எட்டி மிதிச்சிருவேன்

நான் : விடுங்க சார் இதெல்லாம் அரசியல சகசம்தானே ! 
என்னோட அடுத்த கேள்வி இந்த 2010 ம் ஆண்டு உங்க படங்கள் எதுவும் வெளி வருமா ?

கவுண்டர் : இல்லிங் சார் , அது தான் இப்ப பச்ச புள்ளைய வச்சி கூட தான் படமெடுக்கிராங்க , அப்புறம் அவங்க அப்பா சினிமா துறைல இருக்குறார்’னு மகனும் வந்திருறாங்க , பத்து படிச்சி முடிக்க்குள்ள இங்க வந்து காது ஜவ்வு ஜாம் ஆகுற மாதிரி ஒரு சோக பாட்டுக்கும் குத்தாட்டம் போட்டு காமடி பண்ணிட்டு போயிராங்க பின்ன நாங்க எதுக்கு சார் ?

நான் : சார் எனக்கு ரொம்ப நாளா ஒரு சந்தேகம் ?

கவுண்டர் : என்ன , இந்த வேட்டி பட்டா இல்ல பாலிஸ்டரா’ன்னா ?

நான் : அதில்லை சார் , நீங்க ஒரு மெகா காமடி நடிகன் ,நீங்களும் சத்யராஜ் சாரும் சேர்ந்து ஒரு கலக்கு கலக்கிட்டு இருந்திங்க , அப்புறம் கார்த்திக் ,ராமராஜன்,அர்ஜின் இன்னும் பல நாயகர்களுடன் அடிச்சி தூள் கிளப்புனிங்க , இப்ப சமிபத்தில பாபா நம்ம சூப்பர் ஸ்டாரோட , பின்ன ஏன் சார் இனிமே நடிக்க மாட்டேன்’னு சொல்லுரிங்க ?

கவுண்டர் : டேய் அர மண்டையா , போதும் ராசா இதுக்கு மேல நடைய கெட்டுரதுதான் நமக்கு அழகு ,

நான் : உஸ்ஸ்ஸ்ஸ்.... முடியல சார் 

கவுண்டர் : ஏன் ரப்பர் பாயிண்ட் கிடைக்கலையாக்கும் ?

நான் : அப்புறம் சார் , காதல பத்தி என்ன நினைக்கிரிங்க சார் ?

கவுண்டர் : காதல் நல்ல படம் தான் ,குடும்பத்தோட பாக்கலாம் ..

நான் : சார் நான் கேட்ட்து நடைமுறைல இருக்கும் காதலை ,

கவுண்டர் : ஓ அதுவும் நல்ல விசயம் தான் அது விசம் ஆகாத வரை ..

நான் : காதல்ருக்கிடைய சண்டை வராமல் இருக்க என்ன சார் செய்யனும் ?

கவுண்டர் : காதல் பண்ணாமல் இருக்கலாம் , நாயே இதென்ன கேள்வி ? மாம்பழம் பழுத்தாதான் சாப்பிட நல்லா இருக்கும் , அதே மாதிரி காதல சண்டை வந்தே ஆகனும் , ஆனா அத ரொம்ப நாள் அப்படியே விட்டுட கூடாது , அப்புறம் அழுகிரும் ரெண்டுமே ,

நான் : காதல் கல்யாணத்துலையும் ஏன் சார் சண்டை வருது ?

கவுண்டர் : கொண வாயா , இதெல்லாம் என்கிட்ட கேக்குற கேள்வி தானா ?

நான் : சொல்லுங்க சார்

கவுண்டர் : விட்டு கொடுங்க சார் எல்லாமே சரியாகிடும்

நான் : இப்ப உள்ள தலை முறையினர பத்தி என்ன நினைக்கிரிங்க சார் ?

கவுண்டர் : அடடா இந்த தலை முறையினர பத்தியா என்னத்த சொல்ல , வெளுத்து வாங்குராங்கல

நான் : இந்த தலை முறையினர் கம்பியுட்டருலையே மூழ்கி இருக்கிறார்களே அது பற்றி ?

கவுண்டர் : இத விடுங்க சார், இன்னும் வரும் காலத்தில என்ன என்ன எப்படி எப்படி செய்ய போறாங்களோ அத நினைத்தாலே பயமா இருக்குது ,

நான் : இப்படியே கணிணி மையமாக வருதே , நம்மக்கு சாதகமா இல்ல பாதகமா சார் ?

கவுண்டர் : சாதகமான பாதகம் தான் கொக்கு மண்டையா ?

நான் : எப்படி சார் ?

கவுண்டர் : என்ன நொப்பிடி ? சங்க கடிச்சிருவேன் ,,,

நான் : சரிங்க சார் , நீங்க ஏன் அரசியல் பக்கமே வர்ரதில்ல ?

கவுண்டர் : அது தான் சொன்னேனே , அதுக்கெல்லாம் பொய் ரொம்ப பேசனுமே ,நமக்கு அதெல்லாம் அவளோவா தெரியாதுமா ,

நான் : சார் நாட்டுக்காக இல்லாட்டியும் எங்கள மாதிரி உங்க ரசிகர்களுக்காகவாச்சும் வரலாமில்லையா ?

கவுண்டர் : அட்ராசக்கனானா , எப்படியாச்சும் இவன நிம்மதி இல்லாம, தெருவுல அலையவிட்டுடனும் , அதுதானே உன்னோட பிளான் ? நடக்காதுடி

நான் : அப்படியேல்லாம் ஒன்னுமில்லங்க சார் ,
என்னோட அடுத்த கேள்வி வெளி நாடுகளில் வேலை பார்க்கும் நண்பர்களுக்கு எதாவது விசயம் சொல்ல போரிங்கள ?


கவுண்டர் : வெளி நாட்டுக்கு போய் வேலை பார்க்குரவங்களுக்கு ஒன்னு சொல்லுறேன் நல்லா கேட்டுக்கோங்க , நாம வந்திருப்பது பொழைக்க பொழைக்க வந்த இடத்தில குழைக்கனுமே தவிர கடிச்சிர பிடாது , அது மட்டுமில்லாமல் அடிக்கடி உங்க முகத்த பெத்தவங்களுக்கும் , நீங்க பெத்தவங்களுக்கும் காட்டிட்டு போயிடுங்க, இல்லாங்க்காட்டி நீங்க மறந்திட்ட மாதிரி இவங்களும் மறந்திட போறாங்க ..

நான் : சார் அவங்களுக்கு உள்ளூர்லையே இருக்க எதாவது ஒரு யோசனை சொல்லுங்க சார்

கவுண்டர் : ஆமா நான் சொன்னவுடனே அவங்க பெட்டி படுக்கை எல்லாம் கெட்டிக்கிட்டு ஊருக்கு வந்திர போறாங்க ,போங்க சார்...

நான் : சார் எதாவது ஒரு யோசனை சொல்லி இருந்தா அவங்க வெளிநாடு போயிருக்க மாட்டாங்களே !?

கவுண்டர் : டேய் குரங்கு மண்டையா , இங்கயே இருந்தா ஒன்னும் தெரியாமத்தான் இருப்பாங்க , இவங்க வெளிநாடு போயிட்டு வந்தா எதாவது ஒரு மாற்றம் கண்டிப்பா ஏற்ப்படும் அது நல்லது தானே வரும் சந்த்தியினருக்கு

நான் : அட ஆமா சார் , ஆனா என்ன தான் வெளி நாட்டுல இருந்தாலும் அவங்க கிட்ட பணம் இருந்தது இல்ல ,கல்யாணம் ஆகுறதுக்கு முன்ன்ர் பெத்தவங்க , கல்யாணம் ஆன பின்பு தன் மனைவி தன் பிள்ளைகள் இப்படி போய்க்கிட்டே இருக்கே ?

கவுண்டர் : டேய் மண்டையா , ஒரு பக்கம் வந்தா ஒரு பக்கம் போகத்தான் செய்யும் அதுக்கு நாம என்ன செய்ய முடியும் ? பணம் செலவாகாம இருக்கனும்னா , அத சம்பாதிக்காம இருந்தாலே போதும்

நான் :  அதுவும் சரிதான் சார் , அப்புறம் நம்ம நாட்டுல ஏன் பிச்சை எடுக்குறாங்க ?

கவுண்டர் : அவங்களால பிச்சை போட முடியாதே அதனால தான் ,

நான் : அவங்க திருந்துரதுக்கு ஒரு நல்ல யோசனை சொல்லுங்க சார் ,

கவுண்டர் : நான் இத பத்தி அடுத்த மீட்டிங்ல பேசுறேன் ,

நான் : ஏன் சார் நம்ம நாட்டுல விவசாயம் குறைந்து கொண்டே போகுது ?

கவுண்டர் : கட்டிடங்கள் பெருகிக்கொண்டே இருக்கே ,

நான் : சார் அந்த காலத்துல போஸ்ட் ஆபிஸ் ரொம்ப உபயோகித்தனர் ஆனா இப்பலாம் ஏகப்பட்ட கொரியர்ஸ் வந்திருச்சி அதனால போஸ்ட் ஆபிஸ் பக்கம் யாரும் தலை வைக்க மாட்டுக்காங்களே இத பத்தின உங்க கருத்து என்ன ?

கவுண்டர் : தலை வைக்கலைனா , கால வைக்க சொல்லுங்க சார் இதெல்லாம் ஒரு கேள்வி அத நீ என்க்கிட்ட கேக்குற , வீனா அடிப்பட்டே செத்திடுவ மவனே , வேணாம் அடுத்த கேள்விக்கு போயிடு ..


நான் : அப்புறம் நம்ம நாட்டுல இப்பலாம் நல்லவங்களே பாக்க முடியலையே அது ஏன் சார் ?

கவுண்டர் : அப்படின்னா வெளி நாட்டுக்கு போ , ஆமா இந்த கேள்வி என்ன பாத்து ஏன் கேட்ட ?

நான் : சார் நான் நீங்க நினைக்குற மாதிரி நினைச்சி கேக்கலிங்க சார் , நான் தற்ச்செயலாத்தான் கேட்டேன் ,

கவுண்டர் : பேரிக்கா தலையா , கேள்வி கேக்கும் முன் நீ என்னோட வீட்டுல இருக்குறனு ஞாபகம் இருக்கட்டும் ,

(அப்பாவியா முகத்தை மாற்றவும்)

டேய் நீ எந்த நேரத்தில எந்த மாதிரி முகத்த வச்சிப்பன்னு தெரியும்டே ,அது என்கிட்ட வேண்டாம் ,

நான் : நம்ம நாடு எப்ப சார் துபாய் மாதிரி ஆகும் ?

கவுண்டர் : தெரியலையேப்பாஆஆஆஆ ..........

நான் : சார் நம்ம நாடு முன்னேற எந்த மாதிரி அரசியல் வேண்டும்னு நினைக்கிரிங்க ?

கவுண்டர் : நான் நினைச்சத சொன்னா மக்கள் சிந்திச்சி ஓட்டு போட்டுர மாதிரி பேசுர ?? ஒரு அப்பு அப்பனும் போல இருக்கே
நான் : சார் நண்பர்களுக்கு இடையில் ஏன் சண்டை வருது ?

கவுண்டர் : அவங்களுக்கு இடையில் பெரிய ஓட்டை இருந்திருக்கும் , அதாவது கருத்து வேறுபாடு , மற்றும் புரிந்து கொள்ளாமை , விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை இல்லாமலும் தான் , கொய்யா தலையா !

நான் : சார் அந்த காலத்து நடிகைகள் எல்லாம் என்ன ஆனார்கள் ?
கேள்வி கேட்ட மறு நிமிடம் பொலேர்னு கன்னத்தில விழுத்த்து ஒர் இடி ஐ மீன் அடி 

கவுண்டர் : இதே மாதிரி ஒருத்தன் என்னிடம் கேட்ட கேள்விக்கு தான் அவன அந்த வண்டிய தள்ளி முடிக்கும் முன் ஒரு நாலு வாட்டி அரைஞ்சிருக்கேன் அது உனக்கும் தெரியும்,நம்ம மக்களுக்கும் தெரியும், பின்ன எப்படி அதே கேள்விய என்னிடம் திரும்ப கேக்கலாம் ?

நான் : சாரிங்க சார்

கவுண்டர் : அடுத்த கேள்வி (மணிய பாத்துக்கிட்டே இந்த முட்டை வாயன் வாரேன்னு சொன்னான் இன்னும் ஆள காணுமே அப்படின்னு முனுமுனுத்தார் )

நான் : சார் நீங்க யாருக்கோ காத்திருக்கிர மாதிரி தெரியுதே !

கவுண்டர் : ஆமா , ஒரு பன்னி தலையன் நாலு மணிக்கு வாரேன்னு சொன்னான் , ஆனா பாருங்க சார் , மணி நாலு மணிக்கு மேல ஆச்சி இன்னும் வரல அந்த சொறி நாய் வரட்டும் இன்னைக்கு வச்சிக்கிரேன்
சரி உங்க கேள்விய கேளுங்க ,

நான் : வேர கேள்வி என்ன சார் கேக்க போறேன் ,நீங்களே தெளிவா சொல்லிடுங்க (கன்னத்த தடவிக்கிட்டே )

கவுண்டர் : இந்த புது வருசத்திற்க்கு எல்லோரும் உங்களால எவ்லோ முடியுமோ அவ்லோ தூரத்திற்க்கு அடுத்தவங்களுக்கு உதவி செய்யுங்கள் , அப்புறம் ஒரு முடிவு எடுக்கும் முன் யோசிச்சி எடுங்கள்,அப்பறம் முடிந்த அளவிற்க்கு சிரிங்க சார், எதோ நாமளும் பிறந்துட்டோம் சிரிச்சாத்தான் நம்மள மனிதனாவே நம்புவாங்க....

(இவர் பேசி முடிக்கும் முன்னர் , வாசலில் ஒரு சத்தம் )

வாசல் : அண்ணே , அண்ணே ...


கவுண்டர் : இப்பலாம் பிச்சக்காரங்க உறவு முறை வச்சி கூப்பிட ஆரம்பிச்சிட்டாங்க போல ..

(சொல்லிக்கிட்டே வாசலுக்கு வருகிரார், நானும் பின் தொடர்ந்து வந்து பார்த்தா..............)

கவுண்டர் : டேய் சொறி நாய் வாயா நீயாடா, நான் என்னமோ பிச்சக்காரங்க தான் கூட்டமா வந்திட்டாங்களோன்னு நினைச்சேன் , என்னடா இப்படி வந்திருக்க ?

நான் : வணக்கம் சார்

கவுண்டர் : டேய் என்ன நொணக்கம் , என்ன கடுப்பேத்துரியா ?

செந்தில் : அண்ணே வரும் வழில ஒரு சின்ன பஞ்சாயத்துனே அது தான் லேட்ணே ,

கவுண்டர் : ஆமா ,இவரு பெரிய சின்னக்கவுண்டர் விஜயகாந்த் ,பஞ்சாயத்துல தீர்ப்பு சொல்லிட்டு வந்திருக்க போகுது , நாய் எதாவது ஒரு கடையில வடைய கவ்வி இருந்திருக்கும் அதுக்கு தான் புடிச்சி அப்பு அப்புன்னு அப்பி அனுப்பி இருப்பாங்க ..

நான் : சார் நான் உங்க கிட்ட கேள்வி கேக்கலாமா ?

(கவுண்டர் என்ன பார்த்து முறைக்க.. செந்தில் தொடர்கிறார்)

செந்தில் : அதெல்லாம் இல்லணே ஒரு உதவி செய்யட்டுமான்னு கேட்டேன் அதுக்கு தான் அடிச்சிட்டாங்கணே

கவுண்டர் : அடபாவமே இந்த காலத்துல உதவுனா கூட அடிக்கிறாங்க்ளா ? ஒ காட் .......! அப்படி என்னடா உதவி அது ?

செந்தில் : பஸ்ஸுக்கு காத்திருக்கும் போது ஒரு பொண்ணு என்னோட பக்கத்துல வந்து நின்னுக்கிட்டு ரோட்டுக்கு அந்த பக்கம் மூனு குழந்தைகளுடன் போயிக்கிட்டு இருந்த ஒரு அம்மாவ பாத்து ரொம்ப கொடுத்து வச்சவங்க அப்படின்னு ஒரு பெரும் மூச்சு விட்டு சொன்னாங்கலா ?அதுக்கு தான் நான் சொன்னேன், வேணும்னா நான் உங்களுக்கு உதவட்டுமா’னு கேட்டேன் அவ்ளோ தாணே அடிச்சி இந்த நிலைக்கு கொண்டு வந்திட்டாங்க 

கவுண்டர் : டேய் முட்டகோஸ் தலையா , இதுக்கு போய் உன்ன அடிச்சி இருக்காங்க , அறிவில்லாதவங்க , அது பொறாமயா இருக்கும் இங்க வா ராஜா எவ்ளோ பெரிய காரியத்த செஞ்சிட்டு வந்திருக்க.



(கையில அவரோட தலைய புடிச்சிக்கிட்டு ),அட கொன்னியா ,இதுக்கு உன்ன அவஙக ஊயிரோட எரிச்சில இருக்கனும் , அவங்க செய்யாட்டி என்ன நான் செய்யிரேன் .............

(இடையில்)

நான் : சார் நான் உங்க்கிட்ட ஒன்னு கேக்கனுமே நு கேக்க..

கவுண்டர் : அடகொக்காமக்கா ........................

(சுத்தி முத்தி பார்த்து ஒரு நல்ல கட்டைய எடுத்து திரும்வுரார் நாங்க ரெண்டு பேரும் அந்த

தெருவோட முனைக்கு போய்யிட்டோம் )


இதுப்பகுதி நகைச்சுவைக்காக மட்டுமே !



மக்கா எல்லோரும் நல்ல படியா சந்தோசமா வாழுங்க , அடுத்தவங்களையும் சந்தோசமா வாழ விடுங்க ,


சிரிக்கிறது ஒன்னும் பாவச்செயல் கிடையாது , ஆதலால் தயவுசெய்து சிரிங்க , நீங்களும் சிரிங்க அடுத்தவங்களையும் சிரிக்க வையுங்க , நீங்க சிரிச்சாலே உங்கள பார்த்து எல்லோருமே சிரிப்பாங்க (லூசுன்னு நினைத்து இல்ல,அப்படின்னு நினைத்தாலும் உங்களுக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல) உங்கள லூன்னு யாராவது நினைத்தால் அவங்கள லூசுல விட்டுடுங்க ,


அப்புறம் ஒரு முடிவு எடுக்கும் முன் பலமுறை யோசிங்க , ஆனா அந்த செயலை செய்ய ஆரம்பிச்ச பின் நிப்பாட்டாதிங்க அது உங்களுக்கு தப்பு இல்லைன்னு தோணுச்சினா எந்த வித எதிர்ப்புக்கும் பயப்பட வேண்டாம் , அது நல்லதுக்கேன்னு நினைச்சிக்கோங்க,



எல்லோருடன் நல்ல நண்பர்களா பழகுங்க அவங்க கிட்ட உள்ள நல்ல பழக்க வழக்கங்களை மட்டும் எடுத்துக்கொள்ளவும், இதுக்கு யாரிடமும் அனுமதி வாங்க தேவையில்லை , அவங்க கிட்ட உள்ள கெட்ட பழக்கங்களை சொல்லி புரிய வைக்க முயர்ச்சியும் மேற்க்கொள்ளவும் ,


ஒன்னு நினைவுக்கு ”துஸ்டனை கண்டால் தூர ஒதுங்குகள் “


புத்தாண்டு நல்வாழ்த்துகள் & இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்

நானுங்கோ !!!

My photo
நான் அன்பாக, பாசமாக, கோபமாக,நட்பாக, அதிகாரமாக, அலட்சியமாக,பணிவாக, குறும்பாக பேசியிருக்கிறேன்.ஆனால் இந்த 24 ஆண்டுகளில் நான் நானாகவே இருக்கிறேன்...!

வாங்க பழகலாம்

திருக்குறள்

காமத்துப்பால்;கற்பியல்;நெஞ்சோடுபுலத்தல்:

1298-எள்ளின் இளிவாமென் றெண்ணி அவர்திறம்
உள்ளும் உயிர்க்காதல் நெஞ்சு.

பிரிந்து சென்ற காதலரை இகழ்வது தனக்கே இழிவாகும் என்பதால், அவருடைய பெருமையைப் பற்றியே என்னுயிர்க் காதல் நெஞ்சம் எண்ணிக் கொண்டிருக்கும்.

அமராவதி ஆத்தங்கரையின் விளக்கம் :

நீ பிரிந்தபிறகும் கூட
உன்னை வெறுக்கத் தோன்றவில்லை என் இதயத்துக்கு…
என் இதயம் நேசித்தவளென்பதால் மட்டுமல்ல
என் இதயத்தை நேசித்தவளென்பதாலும்!


பிரிந்து சென்ற காதலரை இகழ்வது தனக்கே இழிவாகும் என்பதால், அவருடைய பெருமையைப் பற்றியே என்னுயிர்க் காதல் நெஞ்சம் எண்ணிக் கொண்டிருக்கும் .

எனக்குப்பிடித்தவையை இணையத்தில் பிடித்தவை !

வருந்துகிறேன் !!


என் வாழ்நாள் குறைகிறது
என்பதற்காக வருந்தவில்லை...
உன் நினைவில்
வாழும் நாள் குறைகிறது
என்பதற்காக வருந்துகிறேன்... !!!


நன்றி: வாணி நாதன்

நினைவுகள்

குருதிக் குழாய்களுக்குள்
குறுக்கு நெடுக்குமாய்
பாய்ந்துக் கொண்டிருக்கிறது
இதயத்திற்குள் நிரம்பி வழிந்த
உன் நினைவுகள்...!

நன்றி : இமலாதித்தன்


நீ

சுற்றி ஒருமுறை
பார்த்துவிட்டு
உதடு குவித்து
நீ தரும் முத்தத்தில்
பாதியை அப்படியே
அள்ளிக்கொண்டு
போகிறது காற்று....

நன்றி : மழைக்காதலன்

நெஞ்சோடு புலத்தல்

உனக்குத் துணையாக உன்மனம்…
உன்மனதுக்குத் துணையாக என்மனம்…
எனக்குத் துணையாக…
நான் மட்டும் !


நன்றி : ஆத்தங்கரை


Search This Blog

தெரிஞ்சிக்க ! பூமியிலிருந்து சூரியன் சராசரியாக 14,88,00,000 கி.மீ (93,000,000 மைல்) தூரத்திலிருக்கிறது. சூரியனின் ஒளியானது நமது பூமியை வந்தடைய சராசரியாக 8.33 நிமிடம் எடுத்துக்கொள்கிறது. எப்படி கணக்கிட்டார்கள் : 93,000,000 மைல் தூரம் வகுத்தல் 2,97,600 ஓளியின் வேகம் சூரியனுக்கும் பூமிக்கும் இடையேயான இடைவெளி / ஓளியின் வேகம் = 148800000 / 2,97,600 = 500 500 செகெண்ட்ஸ் வகுத்தல் ஒரு நிமிடற்க்கு 60 செகெண்ட்ஸ் 500/60 = 8.33 சூரிய ஒளி பூமியை வந்தடைய எடுத்துக்கொள்ளும் நேரம்

சிந்தனைக்கு

அன்பை விதைப்பவர்கள் நிம்மதியை அறுவடை செய்பவர் .

ஒவ்வொரு முடிவும் மற்ற ஒன்றுக்கான தொடக்கம் .

கல்வி, அனுபவம் , ஜாபக சக்தி இம்மூன்றையும் உன்னிடமிருந்து யாரும் பிரிக்கமுடியாது .

விரும்பியது கிடைக்கவில்லை என்று வருந்தாதே . கிடைத்துள்ளதை விரும்பு .

அருமை அறியாதவன் வீட்டுக்கு போனால் பெருமை குறைந்து போகும் .

எனக்கு பிடிச்ச பாடல் வரிகள் !

மிக மிக கூர்மையாய் என்னை ரசித்தது உன் கண்கள்தான்..
மிருதுவாய் பேசி என்னுள் வாசித்தது உன் வார்த்தை தான்...
கண்களை காணவே இமைகளே மறுப்பதா..

(தாம் தூம் )


"நான்கு கண்ணாடி சுவர்களுக்குள்ளே நானும்மெழுகு வர்த்தியும்


தனிமை தனிமையோ கொடுமை கொடுமையோ "

(சில்லுனு ஒரு காதல்)



"உன் சின்ன இதழ் முத்தம் தின்னாமல்

இந்த ஜன்மம் வீணென்று போவேனோ ??"

(பூவெல்லாம் உன் வாசம்)



"படுத்தும் பொசுக்குனு தூங்கும் பய

பித்துக்குளி போல இப்ப முழிக்குரானே

வெள்ளன எந்திருச்சு ஓடும் பய

சுள்ளுன்னு சூரியன பாக்குறேனே



அவன் பார்த்ததுமே நான் பூத்துவிட்டேன்

அந்த ஒரு நொடியை நெஞ்சில்ஒளித்துக்கொண்டேன்

நான் குழந்தை என்றே நேற்று நினைத்திருந்தேன்

அவன் கண்களிலே என் வயதறிந்தேன்"



(காதல்)



"பேச எண்ணி சில நாள் அருகே வருவேன்

பின்பு பார்வை போதும் என நான் நினைத்தேநகர்வேன் ஏமாற்றி..



இரவும் அல்லாத

பகலும் அல்லாத

பொழுதுகள்

உன்னோடு கரையுமா??!!



கரைகள் அண்டாத

காற்றும் தீண்டாத

மனதுக்குள் எப்போது நுழைந்த்திட்டாய்??!

தடையில்லை சாவிலும் உன்னோடு வர ..."


(சுப்பிரமணியபுரம்)

Elvis Presley's Graceland

நீயில்லாத நாட்களில் வர்ணங்களும் வர்ணமற்றவையாக !!!

நீயில்லாத நாட்களில் வர்ணங்களும் வர்ணமற்றவையாக !!!

வாங்க, வாங்க, ஏன் இவ்ளோ லேட்டா வாரிங்க ?