தோப்புகளுடன் (ஆப்புகளுடன்) ஆ’ரம்ப வருசம் :
புது வருடம் பிறந்து முழுதாக பதினைந்து நாட்கள் ஆக வில்லை , புது புது விதமாக ஆப்புகள் மாற்றம் தோப்புகள் வந்து கொண்டே இருக்கிறது
1. ஜனவரி ஒன்னாம் தேதி நண்பர்கள் எல்லோருக்கும் அழைத்து புத்தாண்டு வாழ்த்து சொல்ல ஆசைப்பட்ட்து ஒரு குத்தமா ? வந்த்து ஆப்பு ஒரு ஈராக்கியின் ரூபத்தில் அவனை எஸ்கார்டு பண்ணிக்கொண்டு வெளிக்கேட்டில் கொண்டு போய் விட்டு விட்டு திரும்பி வரும் போது மணி ஆரை (6) தாண்டி இருந்த்து அப்புறம் வழக்கம் போல என்னோட ரிப்போர்டை முடிக்க மணி 10 த்தை தாண்டியது பின்பு யாருக்கு கால் பண்ண , முடியவில்லை ?
2. இரண்டாம் தேதி கம்பெனியில் இருந்து வந்தது ஆப்பு விடுமுறை நாட்களை எடுத்தே ஆக வேண்டுமென்று , பணமாக தரப்பட மாட்டாது என்று அறிவித்தது (ஃபைனான்ஸ் மேனேஜேர்’ஸ்), இதனால் பைனான்ஸ் மேனேஜேரை ஒழிப்போர் சங்கம்’னு ஒன்னு ஆரம்பிக்க போறேன்
3. மூனாம் தேதி எனது கம்பெனியுடன் சண்டை ஆரம்பித்தது , காருக்காக அப்புறம் இதே நாளில் எங்க கம்பெனி ஐ’டீ யுடன் ஏழ’ரை ம்ம் எந்த கம்பெனி ஐ’டீ தான் ஏழரை இழுக்காம இருந்தார்கள் , எல்லா ஐ டீயும் இப்படி தானே (ஒரு வேளை இவங்க ஹார்ட்வேர்ல ந்ங்கிறதை தவறாக
4. வீட்டில் சில பல புது ரூல்ஸ்கள்
5. நான் இருக்கும் இடத்தில் சில பிரச்சனைகள் , வந்தது பாம் விழுந்தது ராக்கெட்
6. எனது ஜெனேரேட்டரின் பேட்டரி பிரச்சனை செய்தது, அதனை சரி செய்ய ஆரம்பித்து இன்னும் முடியல ......... அட வேலை முடியல
7. – இன்னைக்கு ரெண்டாவது ஜெனெரெட்டரின் ஃபில்டர் அடைச்சி அதில் ஓட்டை விழுந்தது , நான் என்ன பீட்டரா அதுல கை வச்சிக்கிட்டே இருக்க உடனே ஜெனெரெட்டர ஆஃப் பண்ணிட்டு பக்கத்து கம்பெனில போய் ஓசிக்கு ஒரு ஃபில்டர் வாங்கி வந்து போட்டேன் ,இதுலையே அன்னைக்கு நாள் ஓடிப்போச்சி ,
8. – பாக்தாத் ஈராக்கி ஒருத்தர் என் மேல ரொம்ப கண்ணா இருந்தான் அதனால் எப்படியெல்லாமோ முயற்சி பண்ணினான் என்னைய மாட்டி விட ஆனா அவனுக்கு தெரியாது சிறுத்த தான் சிக்கும் சில்வண்டு சிக்காதுன்னு மாட்டலையே , நாம யாரு சில்வண்டுல
9. – தூபாய் ஆபிஸில் இருந்து ஒரு வகையான ஆப்பு (சில வியத்தை சொல்ல்லாம் இது வேறவகையான ஆப்பு , (ஒரு வேளை இவன நல்லவன்னு சொல்லிட்டாங்களோனு நினைக்கிறிங்களா ? அவ்வ்வ்வ்வ்)
10. – எங்க கான்டீராக்ட் சைன் பண்ண சொல்லி நான் அனுப்பி கிட்ட தட்ட ஒரு மாசத்துக்கு மேல ஆச்சி இன்னும் எங்க ஜிம் சைன் பண்ணல . இங்க நான் யாருக்கிட்ட கொடுக்கனுமோ அந்த பய குடையா குடையுதான் அவ்வ்வ்வ்வ்வ் (கொய்யால ஒரு தடவ ஆப்பு வச்சாத்தான் தெரியும் போல )
11. – இரவு ஒரு ஒன்பது மணி இருக்கும் அந்த நேரத்தில் எனக்கு ஹெட்ஸ் அப் கொடுத்தாங்க இந்த மாதிரி நேரடியா ஒரு டிரக் அனுப்புறோம்’நு , அதனுடைய டீடெயிலு வாங்கிக்கிட்டு பத்து மணிக்கு மெமோ வாங்க போணேன் அவங்க நாளைக்கு காலைல வாங்கன்னு சொன்னது ,
12. – காலை 6.55க்கு ஒரு பாம் ,7 மணிக்கு ரெண்டாவது பாம் விழுந்தது ,அதனால் எங்களோட ஹெட் கவுண்ட் கொடுத்திட்டு மெமோவ வாங்கிட்டு வந்த்து , குவைத்தில் இருந்து நேரடியாக ஒரு ட்ரக் வந்த்து , அவனுக்காக வெளியில் காத்திருந்த்து அவன் உள்ள அதாவது பேஸ்சுக்கு உள்ள எனக்காக காத்திருந்த்து ,
13. பதிமூனாம் தேதி என்னோட காருக்கு பேட்டரி செத்து போச்சி அதனை என்ன பண்ணலாம்னு ஒரே யோசனைல இருந்தேன் , கார் இல்லாட்டி எங்க போக ஒரு திக்கம் போக முடியாது , அப்புறம் என்னோட கார் டிரைவும் (HARD DRIVE 250GB) செத்து போச்சி (அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்) இது தானுங்க பெரிய துக்கம் எனக்கு இதுல என்னோட படங்கள் மட்டுமே கிட்ட தட்ட ஒரு 40GB வச்சி இருந்தேன் , அப்புறம் சில நல்ல புத்தக்ங்கள், நல்ல படங்கள், என்னோட நண்பர்களின் கவிதை தொகுப்பு, நான் எழுதிக்கொண்டிருந்த காமடிகள் , மிக அரிதான சாப்ட்வேர்கள் (எல்லாம் ஒரிஜினல் கீயெல்லாம் இருந்திச்சி ) இப்படிக்கா ஒரு 180Gb வச்சி இருந்தேன் ,அதுல மிச்சம் இடம் இருந்ததே ஒரு 20GB மட்டும் தான் , போச்சி போச்சி இதுவும் போச்சி
14. பொங்கல் நேத்து ஐய்யையோ என்ன கொடும சார் ஊருக்கு போன் போட்டேன் என்னா ஆப்பு வைக்காங்கப்பா, பேசாமா இந்த அண்ணன்மார்கள் எல்லாத்தையும் ABC ல சேர்த்துவிட்டுடலாம் , சே, சி பி ஐ ல சேத்துவிட்டிடலாம் , நான் பண்ணினதயெல்லாம் எனக்கே எடுத்து சொல்லுறார் , அப்புறம் ரொம்ப என்ஜாய் பண்ணிக்கிட்டு இருக்காங்க (நான் இல்லைல ,அது தான் இந்த என்ஜாய், வருவேன்டீ )அப்புறம் கம்பெனில இருந்து வந்த ஆப்பு என்னனா நான் தான் சொன்னேனே எனக்கும் பாக்தாத்தில் இருக்குறவங்களுக்கும் வாய்க்கா தகறாருன்னு , அதனால் என்னோட மத்த ரிப்போர்ஸ் எல்லாம் நானே (அவ்வ்வ்வ்வ்வ்வ்) கொடுக்கனும் அதுவும் டீட்டெயிலா , இதுக்கு கிட்ட தட்ட ஒரு மணி நேரம் ஒதுக்கனுமே , போச்சி போச்சி ஆப்புகளின் சங்கம்ம்
15. அப்புறம் இன்னைக்கு இங்க சீஓர் (COR) க்கிட்ட இருந்து வந்த மடல் பெரிய ஆப்பு , உங்களுக்கு எவ்ளோ ஃபீயுல்(FUEL) உபயோகிக்கிறீர்கள் ? என்ன ஃபுயூல் யூஸ்(FUEL USE) பண்ணுறிங்க ? ஏன் (காரணம்) ? எத்தன ஜெனெரெட்டர்கள் இருக்கு அதன் மாடல் என்ன ? எவ்ளோ கேப்பாக்குட்டி சே கேப்பாச்சிட்டி , எத்தன வண்டி இருக்கு அதன் மாடல் அதனுடைய கேப்பாசிட்டி எவ்ளோ , என்ன ஃபீயுல்(FUEL) யூஸ் பண்ணுறிங்க இதெல்லாம் ஒரு எக்ஸெல் சீட்டில் போட்டு கொடுங்க ஒவ்வொரு மாதமும் எனக்கு வேணும் , இது தானுங்க அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
பாருங்க மக்கா இது தான் நான் சொல்லி வந்த ஆப்பு ஒரு தடவ வாங்கினாத்தான் ஆப்பு அதே பல தடவ வாங்கினா தோப்பு தானே அப்படினா தோப்புகள்’னு தான் சொல்லனும் , ம்ம் வருசம் முன்னூற்று அறுபத்தைந்துல வெறும் பதினைந்து நாள் போயிருக்கு , இதுக்கே இவளோ தோப்பு வாங்கிருக்கேனே , இன்னும் முன்னுற்று ஐம்பது நாள் எப்படி ஓடப்போகுதோ அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
இதுக்கு போன வருசமே எவ்வளவோ பெட்டரு , ம்ம் போன வருச பொங்கலுக்கெல்லாம் ஊருல இருந்தேன் எம்முட்டு சந்தோசமா,
இந்த வருசம் ஓப்பனிங்கே சரியில்லையே ,ஃபினிஸிங் எப்படி இருக்குமோ ?
இப்படிக்கு ,
ஆப்பு வாங்குவோர் சங்கம்
பிரிந்து சென்ற காதலரை இகழ்வது தனக்கே இழிவாகும் என்பதால், அவருடைய பெருமையைப் பற்றியே என்னுயிர்க் காதல் நெஞ்சம் எண்ணிக் கொண்டிருக்கும்.
0 comments:
Post a Comment