கவுண்டருடன் நானும் , செந்தில் சாரும் !!!
புது வருசம் பிறக்க போகுதுன்னு ஒரே கலவரத்தில் இருந்தது எங்க அலுவலகத்தில் நானும் எதுனாச்சும் பண்ணனுமே அப்படின்னு எழுத ஆரம்ச்சு கவுண்டர் வீட்டுக்கு போக முடிவு எடுத்து கிளம்பியாச்சி , அங்கே போனா என்ன பேசலாம்’னு யோசனை ?? அப்போ ஒரு யோசனை தோணுச்சி புது வருசத்திற்க்கு எதாவது ஒரு கெட்ட பழக்கத்தை கை விடுவார்கள் , அப்புறம் ஒரு நல்ல பழக்கத்தை எடுத்துக்கணும் இது வழக்கமா எல்லோரும் (உருப்படனும்’னு நினைக்கிரவங்க ) செய்ற விசயம் தான் , நாம வேற எதாவது ஒரு நல்ல விசயங்களை கேள்வியாக கே க்கனுமே’னு ஒரு எண்ணம் அதே நேரம் எதாவது ஏடாகுடமா கேள்வி கேட்டு செந்தில் சார் மாதிரி அடி வாங்கிற கூடாதே என்ற எண்ணமும் & பயமும் இருந்தது , இந்த சிந்தனை முடியும் நேரம் நான் கவுண்டர் வீட்டு வாசலுக்கு இருந்தேன் ,
வாங்க வாங்க’னு ஒரு புன்னகையுடன் வாசலில் வரவேற்றுக்கொண்டு இருந்தார் கவுண்டர்
வணக்கம் சார் ,...இது நான்
வணக்கம் , என்ன சாப்பிடுதிங்க ? (தமிழனுக்கே உரித்தான விருந்தோம்பல் முறையில் ) காபி , டீ , இது கவுண்டர் ...
காபி டீ எதும் நான் சாப்பிடுறது இல்லை சார் , அது மட்டுமில்லாமல் மதியம் உணவு சாப்பிடும் நேரமிது .,
கவுண்டர் மனதுக்குள் (தீவட்டி தலையா சாப்பாடு தான் வேணுமின்னு நேரடியா கேக்காம எப்படியெல்லாம் பிட்டு போடுது பாரு )
அதுக்கென்ன மத்தியானம் நம்ம வீட்டுளையே சாப்பிட்டுங்க .ஹெ ஹெ (அவருக்கே உரித்தான நக்கல் சிரிப்புடன் )
சரிங்க சார் ..(நாம விட்டுடுவோமா என்ன ?இன்னைக்கு ஒரு வெட்டு வெட்டிர வேண்டியதுதான் )
சரிங்க சார் விசயத்துக்கு வரலாமா ? இது நான்
கவுண்டர் : வாங்க அதுக்கு தானே வந்திருக்கிங்க , நீங்க கேளுங்க ஆபிசர்
நான் : நீங்க என்ன தொழில் பண்ணுரிங்க ?
கவுண்டர் : நான் ஒரு முழு நேர அரட்டை அடிப்போர் சங்கத்தில தலைவரா இருக்கேன் ,
நான் : அது என்ன சார் முழு நேர அரட்டை அடிப்போர் சங்கம் ? இது வரை நான் கேள்வி பட்ட்தே இல்ல ?
கவுண்டர் : சத்திய சோதனை ..!
நான் : நீங்க ஏன் செந்தில் சார அடிச்சிக்கிட்டே இருக்கிங்க ?
கவுண்டர் : மிதிக்கனும்’னா கால தூக்க வேண்டியதா இருக்குது அது தான் அடிக்கிறென் , வேணும்னா உங்கள மிதிச்சிக்காட்டவா ?
நான் : உங்களுக்கு பிடித்தமான உணவு எது ?
கவுண்டர்: டேய் மொள்ள மாரி எதுனா கேள்வி கேக்கனும்னு கேக்குரியா ?
நான் : இதெல்லாம் நாளைக்கு சரித்திரத்தில வரும்
கவுண்டர் : டேய் நார வாயா ஓட்ட சுவத்துல கூட வராது , உன்னோட வீட்டுலையோ இல்ல உன்னோட இத்துபோன இந்த ப்ளாக்’லையோ நீயா எழுதிக்கிட்டாதான் உண்டு , சரி நான் அப்பத்துல இருந்து பாத்துக்கிட்டே இருக்கேன், அங்கேயே என்ன பாக்கிர ? ஒ பசிக்கிதா ! நாயே சொல்லி தொலைக்க வேண்டியதுதானே , வா சாப்பிட்டுக்கிட்டே பேசலாம்..
நான் : சரிங்க சார் ,(கடேசி பல்லு தெரியும் வரையில் ஒரு சிரிப்பு சிரிச்சிக்கிட்டே சாப்பிட சென்றேன் ,
(சாப்பாடு முடிந்த பின்னர் )
கவுண்டர் : இப்ப நாச்சும் ஒழுங்கா உருப்படியா கேள்வி கேளு ! இல்லைனா குருக்குலையே மிதிப்பேன் ,
நான் : ஒகே சார் , நாம இப்ப சிரியஸா ஆரம்பிக்கலாம் ,
கவுண்டர் : ஆமா , இவரு மருத்துவமனையில ரொம்ப முடியாம கிடக்கார், நாங்க ஹார்லிக்ஸ் , ஆரஞ்சு ,ஆப்பிள் எல்லாம் வாங்கிட்டு போய் கொடுத்துக்கிட்டே ஆரம்பிக்கணும் , கேள்விய கேளுங்க சார் ?
நான் : சூஊஊஊஊஊ , இப்பவே கண்ண கெட்டுதே ,
கவுண்டர் : இன்னும் கொஞ்ச நேரத்தில காதும் அடைக்கும் , அப்புறம் மூக்குல காத்து வரும் ,இது கண்டிப்பா அந்த நோய் தான் , எதுக்கும் நீ கொஞ்சம் தள்ளி இருந்தே கேள்விய கேளு ,
நான் : சரிங்க சார் , நீங்க ஏன் எந்த ஒரு நிகழ்ச்சிலையும் இது வரை பங்கேர்க்கவில்லை ?
கவுண்டர் : நாட்டுக்கு ரொம்ப முக்கியமான கேள்வி இது ?
நான் : சார் சொல்லுங்க சார் , இது நாட்டுக்கு முக்கியமோ இல்ல, இல்லையோ ,என்னைய மாதிரி உங்க ரசிகர்களுக்கு இது ரொம்ப ரொம்ப முக்கியம்
கவுண்டர் : டேய் அர மண்டையா , நிப்பாட்டு , இதெல்லாம் கொஞ்சம் ஓவரா இல்ல ? சாப்பிட்ட சாப்பாட்டுக்கு மேல பேசுறியே சாமி .. சரி சொல்லுறேன் கேட்டுக்கோ , எனக்குன்னு சில கட்டுப்பாடு வச்சி இருக்கேன் அதுல இருந்து என்னால வெளியேர முடியாது ,அவ்ளோ தான் இதுக்கு மேல அத குடைஞ்சன்னு’வை ,அப்புறம் உன் சங்க கடிச்சி காக்காய்க்கு போட்டுருவேன் ,
(வெளியில காகம் கரையும் சத்தம் கேட்க ஒரு பயத்துடன் அடுத்த கேள்விக்கு )
நான் : இப்பலாம் உங்க படம் ஏன் வருவது கிடையாது ?
கவுண்ட்ர் : டேய் இதெல்லாம் ரொம்ப ஒவரு தான்’டா இந்த முகத்தையே ஜன்ங்கள் எத்தன காலத்துக்குத்தான் பாப்பாங்க ,இங்க பாருடி அவங்க ரொம்ப உசாரானவங்க , அவோளோ சீக்கிரம் ஏமாத்த முடியாதுடி ,
நான் : ஹி ஹி ஏன் சார் இது தான் உண்மையா ?
கவுண்டர் : அட ட்ப்பா தலையா , இது தான் உண்ம நம்புனா நம்பு இல்லாங்காட்டி அப்படியே எகிரி குதிச்சி ஒடிப்போயிரு எட்டி மிதிச்சிருவேன்
நான் : விடுங்க சார் இதெல்லாம் அரசியல சகசம்தானே !
என்னோட அடுத்த கேள்வி இந்த 2010 ம் ஆண்டு உங்க படங்கள் எதுவும் வெளி வருமா ?
கவுண்டர் : இல்லிங் சார் , அது தான் இப்ப பச்ச புள்ளைய வச்சி கூட தான் படமெடுக்கிராங்க , அப்புறம் அவங்க அப்பா சினிமா துறைல இருக்குறார்’னு மகனும் வந்திருறாங்க , பத்து படிச்சி முடிக்க்குள்ள இங்க வந்து காது ஜவ்வு ஜாம் ஆகுற மாதிரி ஒரு சோக பாட்டுக்கும் குத்தாட்டம் போட்டு காமடி பண்ணிட்டு போயிராங்க பின்ன நாங்க எதுக்கு சார் ?
நான் : சார் எனக்கு ரொம்ப நாளா ஒரு சந்தேகம் ?
கவுண்டர் : என்ன , இந்த வேட்டி பட்டா இல்ல பாலிஸ்டரா’ன்னா ?
நான் : அதில்லை சார் , நீங்க ஒரு மெகா காமடி நடிகன் ,நீங்களும் சத்யராஜ் சாரும் சேர்ந்து ஒரு கலக்கு கலக்கிட்டு இருந்திங்க , அப்புறம் கார்த்திக் ,ராமராஜன்,அர்ஜின் இன்னும் பல நாயகர்களுடன் அடிச்சி தூள் கிளப்புனிங்க , இப்ப சமிபத்தில பாபா நம்ம சூப்பர் ஸ்டாரோட , பின்ன ஏன் சார் இனிமே நடிக்க மாட்டேன்’னு சொல்லுரிங்க ?
கவுண்டர் : டேய் அர மண்டையா , போதும் ராசா இதுக்கு மேல நடைய கெட்டுரதுதான் நமக்கு அழகு ,
நான் : உஸ்ஸ்ஸ்ஸ்.... முடியல சார்
கவுண்டர் : ஏன் ரப்பர் பாயிண்ட் கிடைக்கலையாக்கும் ?
நான் : அப்புறம் சார் , காதல பத்தி என்ன நினைக்கிரிங்க சார் ?
கவுண்டர் : காதல் நல்ல படம் தான் ,குடும்பத்தோட பாக்கலாம் ..
நான் : சார் நான் கேட்ட்து நடைமுறைல இருக்கும் காதலை ,
கவுண்டர் : ஓ அதுவும் நல்ல விசயம் தான் அது விசம் ஆகாத வரை ..
நான் : காதல்ருக்கிடைய சண்டை வராமல் இருக்க என்ன சார் செய்யனும் ?
கவுண்டர் : காதல் பண்ணாமல் இருக்கலாம் , நாயே இதென்ன கேள்வி ? மாம்பழம் பழுத்தாதான் சாப்பிட நல்லா இருக்கும் , அதே மாதிரி காதல சண்டை வந்தே ஆகனும் , ஆனா அத ரொம்ப நாள் அப்படியே விட்டுட கூடாது , அப்புறம் அழுகிரும் ரெண்டுமே ,
நான் : காதல் கல்யாணத்துலையும் ஏன் சார் சண்டை வருது ?
கவுண்டர் : கொண வாயா , இதெல்லாம் என்கிட்ட கேக்குற கேள்வி தானா ?
நான் : சொல்லுங்க சார்
கவுண்டர் : விட்டு கொடுங்க சார் எல்லாமே சரியாகிடும்
நான் : இப்ப உள்ள தலை முறையினர பத்தி என்ன நினைக்கிரிங்க சார் ?
கவுண்டர் : அடடா இந்த தலை முறையினர பத்தியா என்னத்த சொல்ல , வெளுத்து வாங்குராங்கல
நான் : இந்த தலை முறையினர் கம்பியுட்டருலையே மூழ்கி இருக்கிறார்களே அது பற்றி ?
கவுண்டர் : இத விடுங்க சார், இன்னும் வரும் காலத்தில என்ன என்ன எப்படி எப்படி செய்ய போறாங்களோ அத நினைத்தாலே பயமா இருக்குது ,
நான் : இப்படியே கணிணி மையமாக வருதே , நம்மக்கு சாதகமா இல்ல பாதகமா சார் ?
கவுண்டர் : சாதகமான பாதகம் தான் கொக்கு மண்டையா ?
நான் : எப்படி சார் ?
கவுண்டர் : என்ன நொப்பிடி ? சங்க கடிச்சிருவேன் ,,,
நான் : சரிங்க சார் , நீங்க ஏன் அரசியல் பக்கமே வர்ரதில்ல ?
கவுண்டர் : அது தான் சொன்னேனே , அதுக்கெல்லாம் பொய் ரொம்ப பேசனுமே ,நமக்கு அதெல்லாம் அவளோவா தெரியாதுமா ,
நான் : சார் நாட்டுக்காக இல்லாட்டியும் எங்கள மாதிரி உங்க ரசிகர்களுக்காகவாச்சும் வரலாமில்லையா ?
கவுண்டர் : அட்ராசக்கனானா , எப்படியாச்சும் இவன நிம்மதி இல்லாம, தெருவுல அலையவிட்டுடனும் , அதுதானே உன்னோட பிளான் ? நடக்காதுடி
நான் : அப்படியேல்லாம் ஒன்னுமில்லங்க சார் ,
என்னோட அடுத்த கேள்வி வெளி நாடுகளில் வேலை பார்க்கும் நண்பர்களுக்கு எதாவது விசயம் சொல்ல போரிங்கள ?
கவுண்டர் : வெளி நாட்டுக்கு போய் வேலை பார்க்குரவங்களுக்கு ஒன்னு சொல்லுறேன் நல்லா கேட்டுக்கோங்க , நாம வந்திருப்பது பொழைக்க பொழைக்க வந்த இடத்தில குழைக்கனுமே தவிர கடிச்சிர பிடாது , அது மட்டுமில்லாமல் அடிக்கடி உங்க முகத்த பெத்தவங்களுக்கும் , நீங்க பெத்தவங்களுக்கும் காட்டிட்டு போயிடுங்க, இல்லாங்க்காட்டி நீங்க மறந்திட்ட மாதிரி இவங்களும் மறந்திட போறாங்க ..
நான் : சார் அவங்களுக்கு உள்ளூர்லையே இருக்க எதாவது ஒரு யோசனை சொல்லுங்க சார்
கவுண்டர் : ஆமா நான் சொன்னவுடனே அவங்க பெட்டி படுக்கை எல்லாம் கெட்டிக்கிட்டு ஊருக்கு வந்திர போறாங்க ,போங்க சார்...
நான் : சார் எதாவது ஒரு யோசனை சொல்லி இருந்தா அவங்க வெளிநாடு போயிருக்க மாட்டாங்களே !?
கவுண்டர் : டேய் குரங்கு மண்டையா , இங்கயே இருந்தா ஒன்னும் தெரியாமத்தான் இருப்பாங்க , இவங்க வெளிநாடு போயிட்டு வந்தா எதாவது ஒரு மாற்றம் கண்டிப்பா ஏற்ப்படும் அது நல்லது தானே வரும் சந்த்தியினருக்கு
நான் : அட ஆமா சார் , ஆனா என்ன தான் வெளி நாட்டுல இருந்தாலும் அவங்க கிட்ட பணம் இருந்தது இல்ல ,கல்யாணம் ஆகுறதுக்கு முன்ன்ர் பெத்தவங்க , கல்யாணம் ஆன பின்பு தன் மனைவி தன் பிள்ளைகள் இப்படி போய்க்கிட்டே இருக்கே ?
கவுண்டர் : டேய் மண்டையா , ஒரு பக்கம் வந்தா ஒரு பக்கம் போகத்தான் செய்யும் அதுக்கு நாம என்ன செய்ய முடியும் ? பணம் செலவாகாம இருக்கனும்னா , அத சம்பாதிக்காம இருந்தாலே போதும்
நான் : அதுவும் சரிதான் சார் , அப்புறம் நம்ம நாட்டுல ஏன் பிச்சை எடுக்குறாங்க ?
கவுண்டர் : அவங்களால பிச்சை போட முடியாதே அதனால தான் ,
நான் : அவங்க திருந்துரதுக்கு ஒரு நல்ல யோசனை சொல்லுங்க சார் ,
கவுண்டர் : நான் இத பத்தி அடுத்த மீட்டிங்ல பேசுறேன் ,
நான் : ஏன் சார் நம்ம நாட்டுல விவசாயம் குறைந்து கொண்டே போகுது ?
கவுண்டர் : கட்டிடங்கள் பெருகிக்கொண்டே இருக்கே ,
நான் : சார் அந்த காலத்துல போஸ்ட் ஆபிஸ் ரொம்ப உபயோகித்தனர் ஆனா இப்பலாம் ஏகப்பட்ட கொரியர்ஸ் வந்திருச்சி அதனால போஸ்ட் ஆபிஸ் பக்கம் யாரும் தலை வைக்க மாட்டுக்காங்களே இத பத்தின உங்க கருத்து என்ன ?
கவுண்டர் : தலை வைக்கலைனா , கால வைக்க சொல்லுங்க சார் இதெல்லாம் ஒரு கேள்வி அத நீ என்க்கிட்ட கேக்குற , வீனா அடிப்பட்டே செத்திடுவ மவனே , வேணாம் அடுத்த கேள்விக்கு போயிடு ..
நான் : அப்புறம் நம்ம நாட்டுல இப்பலாம் நல்லவங்களே பாக்க முடியலையே அது ஏன் சார் ?
கவுண்டர் : அப்படின்னா வெளி நாட்டுக்கு போ , ஆமா இந்த கேள்வி என்ன பாத்து ஏன் கேட்ட ?
நான் : சார் நான் நீங்க நினைக்குற மாதிரி நினைச்சி கேக்கலிங்க சார் , நான் தற்ச்செயலாத்தான் கேட்டேன் ,
கவுண்டர் : பேரிக்கா தலையா , கேள்வி கேக்கும் முன் நீ என்னோட வீட்டுல இருக்குறனு ஞாபகம் இருக்கட்டும் ,
(அப்பாவியா முகத்தை மாற்றவும்)
டேய் நீ எந்த நேரத்தில எந்த மாதிரி முகத்த வச்சிப்பன்னு தெரியும்டே ,அது என்கிட்ட வேண்டாம் ,
நான் : நம்ம நாடு எப்ப சார் துபாய் மாதிரி ஆகும் ?
கவுண்டர் : தெரியலையேப்பாஆஆஆஆ ..........
நான் : சார் நம்ம நாடு முன்னேற எந்த மாதிரி அரசியல் வேண்டும்னு நினைக்கிரிங்க ?
கவுண்டர் : நான் நினைச்சத சொன்னா மக்கள் சிந்திச்சி ஓட்டு போட்டுர மாதிரி பேசுர ?? ஒரு அப்பு அப்பனும் போல இருக்கே
நான் : சார் நண்பர்களுக்கு இடையில் ஏன் சண்டை வருது ?
கவுண்டர் : அவங்களுக்கு இடையில் பெரிய ஓட்டை இருந்திருக்கும் , அதாவது கருத்து வேறுபாடு , மற்றும் புரிந்து கொள்ளாமை , விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை இல்லாமலும் தான் , கொய்யா தலையா !
நான் : சார் அந்த காலத்து நடிகைகள் எல்லாம் என்ன ஆனார்கள் ?
கேள்வி கேட்ட மறு நிமிடம் பொலேர்னு கன்னத்தில விழுத்த்து ஒர் இடி ஐ மீன் அடி
கவுண்டர் : இதே மாதிரி ஒருத்தன் என்னிடம் கேட்ட கேள்விக்கு தான் அவன அந்த வண்டிய தள்ளி முடிக்கும் முன் ஒரு நாலு வாட்டி அரைஞ்சிருக்கேன் அது உனக்கும் தெரியும்,நம்ம மக்களுக்கும் தெரியும், பின்ன எப்படி அதே கேள்விய என்னிடம் திரும்ப கேக்கலாம் ?
நான் : சாரிங்க சார்
கவுண்டர் : அடுத்த கேள்வி (மணிய பாத்துக்கிட்டே இந்த முட்டை வாயன் வாரேன்னு சொன்னான் இன்னும் ஆள காணுமே அப்படின்னு முனுமுனுத்தார் )
நான் : சார் நீங்க யாருக்கோ காத்திருக்கிர மாதிரி தெரியுதே !
கவுண்டர் : ஆமா , ஒரு பன்னி தலையன் நாலு மணிக்கு வாரேன்னு சொன்னான் , ஆனா பாருங்க சார் , மணி நாலு மணிக்கு மேல ஆச்சி இன்னும் வரல அந்த சொறி நாய் வரட்டும் இன்னைக்கு வச்சிக்கிரேன்
சரி உங்க கேள்விய கேளுங்க ,
நான் : வேர கேள்வி என்ன சார் கேக்க போறேன் ,நீங்களே தெளிவா சொல்லிடுங்க (கன்னத்த தடவிக்கிட்டே )
கவுண்டர் : இந்த புது வருசத்திற்க்கு எல்லோரும் உங்களால எவ்லோ முடியுமோ அவ்லோ தூரத்திற்க்கு அடுத்தவங்களுக்கு உதவி செய்யுங்கள் , அப்புறம் ஒரு முடிவு எடுக்கும் முன் யோசிச்சி எடுங்கள்,அப்பறம் முடிந்த அளவிற்க்கு சிரிங்க சார், எதோ நாமளும் பிறந்துட்டோம் சிரிச்சாத்தான் நம்மள மனிதனாவே நம்புவாங்க....
(இவர் பேசி முடிக்கும் முன்னர் , வாசலில் ஒரு சத்தம் )
வாசல் : அண்ணே , அண்ணே ...
கவுண்டர் : இப்பலாம் பிச்சக்காரங்க உறவு முறை வச்சி கூப்பிட ஆரம்பிச்சிட்டாங்க போல ..
(சொல்லிக்கிட்டே வாசலுக்கு வருகிரார், நானும் பின் தொடர்ந்து வந்து பார்த்தா..............)
கவுண்டர் : டேய் சொறி நாய் வாயா நீயாடா, நான் என்னமோ பிச்சக்காரங்க தான் கூட்டமா வந்திட்டாங்களோன்னு நினைச்சேன் , என்னடா இப்படி வந்திருக்க ?
நான் : வணக்கம் சார்
கவுண்டர் : டேய் என்ன நொணக்கம் , என்ன கடுப்பேத்துரியா ?
செந்தில் : அண்ணே வரும் வழில ஒரு சின்ன பஞ்சாயத்துனே அது தான் லேட்ணே ,
கவுண்டர் : ஆமா ,இவரு பெரிய சின்னக்கவுண்டர் விஜயகாந்த் ,பஞ்சாயத்துல தீர்ப்பு சொல்லிட்டு வந்திருக்க போகுது , நாய் எதாவது ஒரு கடையில வடைய கவ்வி இருந்திருக்கும் அதுக்கு தான் புடிச்சி அப்பு அப்புன்னு அப்பி அனுப்பி இருப்பாங்க ..
நான் : சார் நான் உங்க கிட்ட கேள்வி கேக்கலாமா ?
(கவுண்டர் என்ன பார்த்து முறைக்க.. செந்தில் தொடர்கிறார்)
செந்தில் : அதெல்லாம் இல்லணே ஒரு உதவி செய்யட்டுமான்னு கேட்டேன் அதுக்கு தான் அடிச்சிட்டாங்கணே
கவுண்டர் : அடபாவமே இந்த காலத்துல உதவுனா கூட அடிக்கிறாங்க்ளா ? ஒ காட் .......! அப்படி என்னடா உதவி அது ?
செந்தில் : பஸ்ஸுக்கு காத்திருக்கும் போது ஒரு பொண்ணு என்னோட பக்கத்துல வந்து நின்னுக்கிட்டு ரோட்டுக்கு அந்த பக்கம் மூனு குழந்தைகளுடன் போயிக்கிட்டு இருந்த ஒரு அம்மாவ பாத்து ரொம்ப கொடுத்து வச்சவங்க அப்படின்னு ஒரு பெரும் மூச்சு விட்டு சொன்னாங்கலா ?அதுக்கு தான் நான் சொன்னேன், வேணும்னா நான் உங்களுக்கு உதவட்டுமா’னு கேட்டேன் அவ்ளோ தாணே அடிச்சி இந்த நிலைக்கு கொண்டு வந்திட்டாங்க
கவுண்டர் : டேய் முட்டகோஸ் தலையா , இதுக்கு போய் உன்ன அடிச்சி இருக்காங்க , அறிவில்லாதவங்க , அது பொறாமயா இருக்கும் இங்க வா ராஜா எவ்ளோ பெரிய காரியத்த செஞ்சிட்டு வந்திருக்க.
(கையில அவரோட தலைய புடிச்சிக்கிட்டு ),அட கொன்னியா ,இதுக்கு உன்ன அவஙக ஊயிரோட எரிச்சில இருக்கனும் , அவங்க செய்யாட்டி என்ன நான் செய்யிரேன் .............
(இடையில்)
நான் : சார் நான் உங்க்கிட்ட ஒன்னு கேக்கனுமே நு கேக்க..
கவுண்டர் : அடகொக்காமக்கா ........................
(சுத்தி முத்தி பார்த்து ஒரு நல்ல கட்டைய எடுத்து திரும்வுரார் நாங்க ரெண்டு பேரும் அந்த
தெருவோட முனைக்கு போய்யிட்டோம் )
இதுப்பகுதி நகைச்சுவைக்காக மட்டுமே !
மக்கா எல்லோரும் நல்ல படியா சந்தோசமா வாழுங்க , அடுத்தவங்களையும் சந்தோசமா வாழ விடுங்க ,
சிரிக்கிறது ஒன்னும் பாவச்செயல் கிடையாது , ஆதலால் தயவுசெய்து சிரிங்க , நீங்களும் சிரிங்க அடுத்தவங்களையும் சிரிக்க வையுங்க , நீங்க சிரிச்சாலே உங்கள பார்த்து எல்லோருமே சிரிப்பாங்க (லூசுன்னு நினைத்து இல்ல,அப்படின்னு நினைத்தாலும் உங்களுக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல) உங்கள லூன்னு யாராவது நினைத்தால் அவங்கள லூசுல விட்டுடுங்க ,
அப்புறம் ஒரு முடிவு எடுக்கும் முன் பலமுறை யோசிங்க , ஆனா அந்த செயலை செய்ய ஆரம்பிச்ச பின் நிப்பாட்டாதிங்க அது உங்களுக்கு தப்பு இல்லைன்னு தோணுச்சினா எந்த வித எதிர்ப்புக்கும் பயப்பட வேண்டாம் , அது நல்லதுக்கேன்னு நினைச்சிக்கோங்க,
எல்லோருடன் நல்ல நண்பர்களா பழகுங்க அவங்க கிட்ட உள்ள நல்ல பழக்க வழக்கங்களை மட்டும் எடுத்துக்கொள்ளவும், இதுக்கு யாரிடமும் அனுமதி வாங்க தேவையில்லை , அவங்க கிட்ட உள்ள கெட்ட பழக்கங்களை சொல்லி புரிய வைக்க முயர்ச்சியும் மேற்க்கொள்ளவும் ,
ஒன்னு நினைவுக்கு ”துஸ்டனை கண்டால் தூர ஒதுங்குகள் “
புத்தாண்டு நல்வாழ்த்துகள் & இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்
பிரிந்து சென்ற காதலரை இகழ்வது தனக்கே இழிவாகும் என்பதால், அவருடைய பெருமையைப் பற்றியே என்னுயிர்க் காதல் நெஞ்சம் எண்ணிக் கொண்டிருக்கும்.
6 comments:
மச்சி கலக்கிட்ட… எனக்கும் இந்த தெக்னிக் சொல்லி கொடுடா…
un muyarchikku en vaazhthukkal
kalakkal comedy followup
ukkanthu yosuippingalo athuvum orey
roomlaevey......
muyarchi than meyvarutha coolie tharum
yaaru paetha pillaiyooo.....nakal nalaaiyiram...!
k.s.Pradeesh
வலைப்பூ முகப்பில் போட்டிருக்கும் பூப்படம் ரொம்ப அருமையா இருக்கு சொக்கு!
அப்புறம் கும்பிடு போட்டு போஸ் குடுக்கிற போட்டோ நல்லா இருக்கு. எந்த கேமராவில் எடுத்தே?
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் , அது சாம்சங்
இப்படி பேசுறவங்கள தான் எங்க ஊருல சம்பந்த ராஜா’னு சொல்லுவாங்க :)
ரொம்ப நல்லா எழுதியிருக்கிற சொக்கு. காமெடி கலந்த சிந்தனை.
Post a Comment