வென்றொம் நாமென்று நன்றே ஆடிடலாம்!
– இரா.கோபாலகிருஷ்ண்ன்
தமிழா வாராய் !
வென்றோம் நாமென்று நன்றே ஆடிடலாம் !
ஆங்கிலன் அகன்றபின் அதகாரம் மாறியதால்
சோதனை ஏற்பட்டு சுதந்திரம் இழந்துநின்றோம்
சாதிக்க முயற்சித்தோம் சாலைகளில் முழக்கமிட்டு
முழங்காலை முறித்தார்கள் முரட்டுச் சிங்களர்கள்
மழுங்கர்களின் எண்ணிக்கை அதிகமே ஆனாலும்
கலங்காமல் முயற்சித்தோம் கனலாகி ஆயுத்த்தால்
மோதலில் சிதைத்தார்கள் மொட்டுகளையும் சிட்டுகளையும்
ஆதனிலால் புலியானோம் அதிரடியாய்ப் பாய்ந்தோம்
வலியாய் மாறியது வன்மையின் முடிவினிலே .
இன்றோ கண்ணகியாய் கரிக்கின்றோம் கவிதைகளில்
“ என்றோ மண்ணாவாய்,சிங்களனே சிதறுவாய்,
கொன்றே தீரும் என்சாபம்:” என்றெல்லாம் கொதிக்கின்றோம்
நன்றே சிந்திப்பீர்! நாம்வாழ வழிகாண்பீர் !
வென்றோம் நாமென்று நன்றே ஆடிடலாம்!
அமிழ்து தமிழென்றால் அதைக்கொணர்வோம் மத்தாலே
எமது இனமெல்லாம் எடுப்போம் ஒருசபதம்
“நமதுசாதி தமிழ்ச்சாதி இது ஒன்றே” என்றே
நம்புலவன் பாரதியின் பாலம் அமைப்போம் !
எங்கழீழ இனம்சேர்ந்து எழுந்து புதுமாநிலமாய்
அங்கமாய் அலங்கரிப்போம் அன்னை பாரத்த்தை-
சங்கதியாய் எத்துறையும் எம்கையில் வரும்வண்ணம்
படிப்படியாய் சாதிப்போம் பாரத்த்தில் பலம்பெருவோம்
கொடிய சிங்களனைக் குனிந்து நோக்கும்நிலை
கொடியினிற் காய்போல விளையும் வருங்காலம்-அப்போது
வென்றோம் நாமென்று நன்றே ஆடிடலாம் !
வழிதெரிந்த பின்னாலும் விழிபிதுங்கி நில்லாமல்
தெளியுறுவோம் !தேம்பாமல் தமிழீழ் மாநிலத்தைப்
பயிரிடுவோம் வாரீர் பாரத்க் கொடியேந்தி!
வென்றோம் நாமென்று நன்றே ஆடிடலாம்!
தமிழா வாராயின் ப்டிஃப் வடிவத்தை தரவிறக்கம் செய்ய ,
நேர்மை தோற்கலாம்
நிர்கதியாய்ப் போகலாம்
என் இன மாந்தர்கள்
எத்தனையோ இழந்தாலும்
இன்னும் கிடைக்காத ஈழம்
கானலாய்ப் போகாது
2010ல் ஈழம் கிடைக்க
என் இதயம் கசியும் ப்ரார்த்தனைகள்,
வாழ்க தமிழினம்...உருவாகும் தமிழீழம்,
பிரிந்து சென்ற காதலரை இகழ்வது தனக்கே இழிவாகும் என்பதால், அவருடைய பெருமையைப் பற்றியே என்னுயிர்க் காதல் நெஞ்சம் எண்ணிக் கொண்டிருக்கும்.
0 comments:
Post a Comment