இயற்கை எனது நண்பன், வாழ்க்கை எனது தத்துவ ஆசிரியன், வரலாறு எனது வழிகாட்டி - தமிழீழ தேசிய தலைவர் யோசிப்பதானால் நிதானமாக யோசியுங்கள், செயல்படுவதானால் உறுதியுடன் செயல்படுங்கள், விட்டுக் கொடுப்பதனால் பெருந்தன்மையுடன் விட்டுக் கொடுங்கள். எதிர்ப்பதனால் துணிந்து எதிர்த்து நில்லுங்கள்

என்னுடைய நான்,

உலகம் பிறந்தது எனக்காக, ஓடும் நதிகளும் எனக்காக, இன்னும் உலகின் அனைத்து ஏற்பாடுகளும் எனக்காக, ஆனால் நான் யாருக்காக ?

நந்தலாலா – விமர்சனம்

நந்தலாலா - நொந்தலாலா



நந்தலாலா ஒரு முழு நேர அம்மா செண்டி’மெண்டல் படமாக,இயற்கை அழகுல படமெடுத்திருக்கின்றார்கள், மெண்டலாக நடித்திருக்கும் பெரிய பைத்தியமும் , சின்ன மெண்டலாக நடித்திருக்கும் சின்ன பைத்தியமும் சேர்ந்து தனது அம்மாக்களை பார்க்க கெளம்பி செல்லும் வழியில் என்ன என்ன கஷ்டங்களை சிரித்துக்கொண்டே அனுபவிக்கிறார்கள் என்பதே படம் , (அவ்வளவு தானே’னு கெளம்பிறாதிங்க மக்கா )

ஒரு மெண்டல் மெண்டல் ஆஸ்பத்திரியில் இருந்தும் ,இன்னொன்னு வீட்டில் சுற்றுலா செல்வதாக பொய் சொல்லிவிட்டும், கிளம்பும் மெண்டல்கள் ஓரிடத்தில் சந்திக்கிறார்கள் ,தனது கையில் இருக்கும் பணத்தை ஒருவன் பறிக்கும் போது மெண்டல் ஹீரோ வந்து காப்பாற்ற நினைத்து அடி வாங்கி தனது சூ’வை தூக்கிக்கொண்டு ஓடுவதும் , மாமா மாமா என்று பின்னாடியே திரிகிறார் சின்ன மெண்டல் இது தான் ஆ’ரம்பம் .

அடுத்த சீன் பஸ் ஸாண்டில் பணப்பற்றாக்குறையால் சிறுவன் பிஸ் அடிக்க போவதாக ஏமாற்றி தான் மட்டும் தனியே அம்மாவை பாக்க செல்லவேண்டுமென்று திட்டமிட்டு கெளம்பி அங்கு சில அங்கிள்’கள் இவரை ஆட்டைய போட திட்டமிட்டு பஸ்ஸீல் ஏறுவதும் ,தன்னுடைய மாமா கூடத்தான் வந்திருக்கிறேன் என்று கீழே இறங்கி மீண்டும் வந்து பார்த்தால் மாமாவை காணோம் , மெண்டல் மாமா சிறுவனின் உண்டியலை சுட்டு தான் தனியாக போய்விடலாமென்று திட்டமிட்டு பஸ்ஸீல் ஏறி கண்டெக்டரிடம் அடிவாங்குவது இயல்பான விசயமே ,

பின்னர் இருவரும் தனது நடை’ராஜா பயணத்தில் பயனிக்கின்றனர் , பின்னர் ஆட்டோகாரர் ஒருவரிடம் நூறு ரூபாய்க்கி பேரம் பேசி ஏற்கொண்டு வழியில் ஆட்டோகாரர் பேச்சுவாக்கில் மெண்டல் மாமாவை மெண்டலா’னு
ஒரு கேள்வி கேக்க அடிதடியில் இறங்குகிறார் மெண்டல் மாமா (ஆட்டோவும் போச்சி )ரோட்டில் வரும் போலீஸ் வேனில் இங்கிலிபீசீல் பேசி சமாளித்துக்கொண்டிருக்கும் போது மெண்டல் மாமா வழக்கம்போல தனது பேச்சில் போலீஸ் மாமாவை கடுப்பேத்துவதை தெரிந்த சின்னவர் எஸ் ஆக ”இரட்டை இலை’யை” (அரசியல் இல்லீங்க, முக்கியமான விசயம் : இதுக்கும் ஆளும் கட்சிக்கும் எந்தவித தொடர்பும் இல்ல) காண்பித்து வெளியேருகிறார், போலீஸ் மாமா மிரட்டி கேட்டதும் மெண்டல் மாமா தானும் காட்டி வெளி’யேருவதும் ,பின்னர் போலீஸ் பின் தொடர்ந்து அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று பாத்துவிட்டு ”சனியன் பிடித்தவனே வாயா”என்று வழக்கமான முறையில் பேசி கெளம்புகிறார்கள் ,

படத்தில் பிடித்த காட்சி :


இந்த பள்ளி மாணவியாக வரும் கிராமத்து கருவாச்சி , மெண்டல் மாமாவை பாத்துக்கொண்டே ரோட்டை விட்டு கீழே விழுந்து காலில் அடிபட நம்ம மெண்டல் மாமா அதுக்கு கிராமத்து வைத்தியமான எச்சிலை தொட்டு வைக்கவும் , கருவாச்சிக்கி பிடித்து போவ இவர்களின் சோக கதையை கேட்டு வருத்தப்பட்டு டக்கரில் (எங்கைய்யாட்ட காசு கேட்டேனா தரமாட்டேனுட்டாரு ,இப்ப என்ன செய்வாரூஊஉவா வா’னு கிராமத்து தமிழில் அழகாக பேசிருக்காங்க நம்ம கருவாச்சி ) டக்கராக ஒரு குறிப்பிட்ட தூரத்துக்கு (நல்ல வேலை மத்த படங்கள் மாதிரி ஹீரோ கூடவே கடேசிவரைக்கும் போவல அதுவரைக்கு சந்தோசம் தான் ) கொண்டு போய் இறக்கி விட்டு “ பத்திரமா போயிடுவியா’னு அப்பாவி தனமா கேக்கும் கேள்வி மனதுக்கு நெகிழ்வு , அதற்கு நியாபகத்தமா கொடுக்க ஒன்னுமில்லாத மெண்டல் மாமா பக்கத்தில ஓடும் வாய்க்காலுக்குள் கைய விட்டு கல்லை (என்ன கொடுக்கிறாங்க’னு முக்கியமில்ல யார் கொடுக்கிறானுதான் முக்கியம் ) எடுத்து தருகிறார் , பிரியாவிடை பெற்று செல்கிறார் நமது கருவாச்சி , மெண்டல் மாமா இலவச யோசனை ”புண்ணுல இரத்தம் வந்தா எச்சி தொட்டு தடவிக்கோ “

மாட்டு வண்டிக்கார் :

தான் செவிடு என்பதை வெளிக்காட்டாமல் அவர் செவிடு என்பதை புரிந்து கொள்ள வைத்திருக்கிறார்கள் (ஹா ஹா’னு சிரிக்காதீர்கள்) , அப்புறம் ஒரு நொண்டி ஒருத்தர் வழிக்காட்டுதேன்’னு சொல்லி ஐந்து ரூபாய் வாங்கிக்கிட்டு போறார், கொஞ்ச தூரத்தில கீழே விழுந்துவிட்டு (நான் வயித்தில இருக்கும்பொதே செத்து போயிருக்கவேண்டியதுதானே’னு தனது அம்மாவை நொந்து கொள்கிறார்)

அப்புறம் இரவு தூங்குவதுக்காக பெரிய ட்ரைலர் வண்டிய ஏற்பாடு பண்ணிருக்கிறார் டைரக்டர் , விடிந்ததும் லாரி ட்ரைவரை இம்சை பண்ணுகிறார் நம்ம மெண்டல் மாமா , அப்புறம் ஒரு ஹனிமூன் ஜோடியை டிஸ்ரப் பண்ணுகிறார்கள் , அவர்களை கிண்டல் செய்யும் இளைஞர்களின் பீர் பாட்டிலை உடைக்க அவர்களின் மண்டையை தேர்ந்தெடுக்கிறார் நமது மெண்டல் மாமா , தண்ணீர் தீர்ந்து விட இளநீர் திருடி அவருக்கே வெட்டி தந்து தானும் தாகத்தை தீர்த்து விட்டு கிளம்புகிறார்கள்,


லாரி ட்ரைவர் :

படத்திலையே ரொம்ப தேவையான விசயம் , கோவமிருக்கும் இருத்தில் தான் குணம் இருக்கு என்பதை டைரக்டர் காட்டிருப்பார் தனது ஹார்னை திருடிட்டு வந்த மெண்டல் மாமாவை அடியோ அடியோ’னு அடித்துவிட்டு பின்னர் அவர் இன்னசெண்ட்’னு (மெண்டல்’னு) தெரிஞ்சவுடனே மெண்டல் மாமவையும் சிறுவனையும் ஏற்றிக்கொண்டு சாப்பாடு வாங்கித்தருகிறார்,(இந்த படத்தில் இவர்கள் சாப்பிடும் இரண்டாவது காட்சி )
இந்த சிறுவனின் அம்மாவை பார்க்கும் மெண்டல் மாமாவிடம் காலில் விழுந்து ஏதோ சொல்லுகிறார் அந்த அம்மா (அது என்னனு என்கிட்ட சொல்லலயே எனபது வருத்தமே !)
பின்னர் இரண்டு குண்டர்கள் பைக்கில் வர அவர்களையும் நண்பர்களாக ஆக்கிவிட்டு நடந்து செல்லும் வழியில்,
ஒரு 50 ரூபாய்க்காக (50 ரூபாய் கொஞ்சம் ஓவரா தெரியல’னு பருத்திவீரன் ஸ்டைல லுக் விடக்கூடாது) சண்டை போடும் விலைமகளின் வாழ்க்கையை தெளிவாக புரிய வைத்திருக்கிறார் டைரக்டர் , மூனாவதா அவரும் இவர்களுடன் தொத்திக்கொள்கிறார்,

கடேசியாக என் அம்மாவ எங்கே , என் அம்மாவை எங்கே’னு நச்சரிக்கும் பொடியனுக்கு தனது அம்மாவை காண்பிக்க கூட்டி செல்கிறார், அங்கு தன் அம்மா பைத்தியமா இருப்பதை பாத்தவுடன் என்ன செய்வதறியாது திக்கிறார், அதைவிட்டு வெளில் வந்து மறுபடியும் சிறுவனின் நொச்சரிப்பை தாங்க முடியாமல் “உன் அம்மா செத்துவிட்டாள்’னு சொல்லுவதும் அதுக்கு அந்த பையன் போடா மெண்டல்’னு சொல்லுவதும் பின்னர் பொய் சொல்லிருக்கலாமில்ல’னு பாசத்தை பொழிவதும் கண்ணீர் , தனது தாய் எதிர்த்த திசையில் மற்றொரு சிறுமியை தூக்கிக்கொண்டு சென்றபின்(பாத்துட்டாங்களாம் )அந்த போட்டோவை பறக்க விட்டுவிட்டு அந்த விலைமகளை அம்மாவாக எண்ணி முத்த மழையை பொழிகிறார் அந்த சிறுவன் , அந்த சிறுவனை பள்ளிக்கி அழைத்து செல்லும் வழியில் பலூன்க்காரராக வரும் மெண்டல் மாமா என்கிற பாஸ்கர் மணி ஒரு பீலீங்கோட அந்த அகி அம்மாவுக்கு ஹாய் சொல்லும் விதம் :)அழகுனு சொல்ல முடியாவிட்டாலும் ஓகேனு சொல்லலாம் ,பின்னர் இனிய இசையுடன் எழுத்தை போட்டு படத்தை முடிக்கின்றார் டைரக்டர்

படத்தின் இசையுடன் வரும் இரு சோகப்பாடல்கள் கண்ணீர்க்கு கண்ணீர் , இசை இனிமை.
படத்தின் மெண்டலான போக்கை கொஞ்சம் கண்டித்திருக்கலாம் டைரக்டர், தான் என்னதான் சொல்ல வருகிறோமென்று தெளிவாக சொல்லிருந்திருக்கலாம் நந்தலாலா என்னை பொறுத்த மட்டிலும் நொந்தலாலாதான் :)

படத்தின் டிப்ஸ் :

(நாளைக்கி அரையாண்டுத்தேர்வில் கேள்வி கேட்டா எழுதவேண்டாம்)

1.மெண்டல் மாமாவின் வேலை காலைலைல பெல் அடிச்சா எழுந்திருக்கனும் ,எவ்ளோ குளிர் அடிச்சாலும் குளிக்கனும்,அப்புறம் பெல்லு ,
அப்புறம் உப்பூமா, உப்பூமா’ல பச்ச புல்லு இருந்தா நல்லா இருக்கும், அப்புறம் உலாத்தனும், யாராவது யாருக்காவது கேக் கொண்டுவருவாங்க ,காசு கிடைகும், அப்புறம் பெல்லு ,அப்புறம் தூக்கம் ,அப்புறம் பெல்லு ,

2.மெண்டல் மாமாவின் அம்மா எங்கே ? சொரம் அடிக்கும் முன்னாடி இருந்திச்சி , அப்புறம் இல்ல

3.படத்தின் காமடி :

அப்பாக்களெல்லாம் ஓட்டப்பந்தையத்தில ஓடி போயிட்டாங்களா ?

4.இந்த கேள்வியை வேற யார்கிட்டவும் கேக்கவேண்டாம் மக்கா :

அகி அவுங்க அம்மாவ கட்டிபுடிச்சி முத்தம் கொடுக்காம உனக்கு முத்தம் கொடுத்தா என்னோடயே இருப்பீயா ? (மீறி கேட்டு அடிவாங்கினா கம்பெனி பொறுப்பல்ல )

5.படத்தின் கரு என்ன ?

அம்மாங்களில் பசக்கார அம்மாவும் இருக்காங்க , வேசக்கார அம்மாவும் இருக்காங்க !? (இதுவா )

6. ஒரு மார்க் கேள்விகளில் தமிழ்’னு வந்த ஷேர் ஆட்டோவ ஓட்டி வந்த ட்ரைவர் யார்’னு கேட்டா நாசர்’னு தெளிவா சொல்லிடுங்க மக்காஸ்

7. மெண்டல் மாமாவின் கால்சட்டையை மாட்டி விட்டது அந்த விலைமகள் தான் அதுவும் பாதிப்படம் முடிந்த பிறகுதான் (ஆரம்பத்திலையே கெட்டி விட்டுருக்கலாம் )

படங்களை தந்த இணையத்துக்கு நன்றி

(இதுக்குமேலையும் மொக்கையா விமர்சனம் எழுதினா என்ன அடிக்காம விடமாட்டீங்கங்கிற ஒரே காரணத்துக்காக எழுதாம விடுறேன் )

1 comments:

Anonymous December 15, 2010 at 11:53 AM  

நந்தலாலா பற்றிய உங்கள் விமர்சனம் படித்தேன். தஙகளின் ரசனைக்கு என் அனுதாபங்க‌ள்

Post a Comment

நானுங்கோ !!!

My photo
நான் அன்பாக, பாசமாக, கோபமாக,நட்பாக, அதிகாரமாக, அலட்சியமாக,பணிவாக, குறும்பாக பேசியிருக்கிறேன்.ஆனால் இந்த 24 ஆண்டுகளில் நான் நானாகவே இருக்கிறேன்...!

வாங்க பழகலாம்

திருக்குறள்

காமத்துப்பால்;கற்பியல்;நெஞ்சோடுபுலத்தல்:

1298-எள்ளின் இளிவாமென் றெண்ணி அவர்திறம்
உள்ளும் உயிர்க்காதல் நெஞ்சு.

பிரிந்து சென்ற காதலரை இகழ்வது தனக்கே இழிவாகும் என்பதால், அவருடைய பெருமையைப் பற்றியே என்னுயிர்க் காதல் நெஞ்சம் எண்ணிக் கொண்டிருக்கும்.

அமராவதி ஆத்தங்கரையின் விளக்கம் :

நீ பிரிந்தபிறகும் கூட
உன்னை வெறுக்கத் தோன்றவில்லை என் இதயத்துக்கு…
என் இதயம் நேசித்தவளென்பதால் மட்டுமல்ல
என் இதயத்தை நேசித்தவளென்பதாலும்!


பிரிந்து சென்ற காதலரை இகழ்வது தனக்கே இழிவாகும் என்பதால், அவருடைய பெருமையைப் பற்றியே என்னுயிர்க் காதல் நெஞ்சம் எண்ணிக் கொண்டிருக்கும் .

எனக்குப்பிடித்தவையை இணையத்தில் பிடித்தவை !

வருந்துகிறேன் !!


என் வாழ்நாள் குறைகிறது
என்பதற்காக வருந்தவில்லை...
உன் நினைவில்
வாழும் நாள் குறைகிறது
என்பதற்காக வருந்துகிறேன்... !!!


நன்றி: வாணி நாதன்

நினைவுகள்

குருதிக் குழாய்களுக்குள்
குறுக்கு நெடுக்குமாய்
பாய்ந்துக் கொண்டிருக்கிறது
இதயத்திற்குள் நிரம்பி வழிந்த
உன் நினைவுகள்...!

நன்றி : இமலாதித்தன்


நீ

சுற்றி ஒருமுறை
பார்த்துவிட்டு
உதடு குவித்து
நீ தரும் முத்தத்தில்
பாதியை அப்படியே
அள்ளிக்கொண்டு
போகிறது காற்று....

நன்றி : மழைக்காதலன்

நெஞ்சோடு புலத்தல்

உனக்குத் துணையாக உன்மனம்…
உன்மனதுக்குத் துணையாக என்மனம்…
எனக்குத் துணையாக…
நான் மட்டும் !


நன்றி : ஆத்தங்கரை


Search This Blog

தெரிஞ்சிக்க ! பூமியிலிருந்து சூரியன் சராசரியாக 14,88,00,000 கி.மீ (93,000,000 மைல்) தூரத்திலிருக்கிறது. சூரியனின் ஒளியானது நமது பூமியை வந்தடைய சராசரியாக 8.33 நிமிடம் எடுத்துக்கொள்கிறது. எப்படி கணக்கிட்டார்கள் : 93,000,000 மைல் தூரம் வகுத்தல் 2,97,600 ஓளியின் வேகம் சூரியனுக்கும் பூமிக்கும் இடையேயான இடைவெளி / ஓளியின் வேகம் = 148800000 / 2,97,600 = 500 500 செகெண்ட்ஸ் வகுத்தல் ஒரு நிமிடற்க்கு 60 செகெண்ட்ஸ் 500/60 = 8.33 சூரிய ஒளி பூமியை வந்தடைய எடுத்துக்கொள்ளும் நேரம்

சிந்தனைக்கு

அன்பை விதைப்பவர்கள் நிம்மதியை அறுவடை செய்பவர் .

ஒவ்வொரு முடிவும் மற்ற ஒன்றுக்கான தொடக்கம் .

கல்வி, அனுபவம் , ஜாபக சக்தி இம்மூன்றையும் உன்னிடமிருந்து யாரும் பிரிக்கமுடியாது .

விரும்பியது கிடைக்கவில்லை என்று வருந்தாதே . கிடைத்துள்ளதை விரும்பு .

அருமை அறியாதவன் வீட்டுக்கு போனால் பெருமை குறைந்து போகும் .

எனக்கு பிடிச்ச பாடல் வரிகள் !

மிக மிக கூர்மையாய் என்னை ரசித்தது உன் கண்கள்தான்..
மிருதுவாய் பேசி என்னுள் வாசித்தது உன் வார்த்தை தான்...
கண்களை காணவே இமைகளே மறுப்பதா..

(தாம் தூம் )


"நான்கு கண்ணாடி சுவர்களுக்குள்ளே நானும்மெழுகு வர்த்தியும்


தனிமை தனிமையோ கொடுமை கொடுமையோ "

(சில்லுனு ஒரு காதல்)



"உன் சின்ன இதழ் முத்தம் தின்னாமல்

இந்த ஜன்மம் வீணென்று போவேனோ ??"

(பூவெல்லாம் உன் வாசம்)



"படுத்தும் பொசுக்குனு தூங்கும் பய

பித்துக்குளி போல இப்ப முழிக்குரானே

வெள்ளன எந்திருச்சு ஓடும் பய

சுள்ளுன்னு சூரியன பாக்குறேனே



அவன் பார்த்ததுமே நான் பூத்துவிட்டேன்

அந்த ஒரு நொடியை நெஞ்சில்ஒளித்துக்கொண்டேன்

நான் குழந்தை என்றே நேற்று நினைத்திருந்தேன்

அவன் கண்களிலே என் வயதறிந்தேன்"



(காதல்)



"பேச எண்ணி சில நாள் அருகே வருவேன்

பின்பு பார்வை போதும் என நான் நினைத்தேநகர்வேன் ஏமாற்றி..



இரவும் அல்லாத

பகலும் அல்லாத

பொழுதுகள்

உன்னோடு கரையுமா??!!



கரைகள் அண்டாத

காற்றும் தீண்டாத

மனதுக்குள் எப்போது நுழைந்த்திட்டாய்??!

தடையில்லை சாவிலும் உன்னோடு வர ..."


(சுப்பிரமணியபுரம்)