"டாக்டர்;ஒரு சின்ன சந்தேகம் கேட்டா தப்பா நினைக்கக் கூடாது;
நோயாளி;கேளுங்கள் டாக்டர் ஐயா
டாக்டர்; ஆப்ரேசனுக்கு அப்பறம் நான் பீசை யார்கிட்ட போய் வங்கறது?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
"டாக்டர்;ஐயா எனக்கு வயிறு எரியுது ...
நான் பீஸே சொல்லலை அதுக்குள்ள எப்படி?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~
"ஏன் சிஸ்டர் திடிர்னு எனக்கு ஆப்ரேஷன் வேண்டாம்னு டாக்டர் சொல்லிட்டார்?
"டாக்டருக்கு திடிர்னு வேற இடத்தில் இருந்து பணம் வந்துட்டதாம்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
''ஊசிபோட்ட பிறகு எதுக்கு டாக்டர் ஸ்கேன் பண்ணனும்னு சொல்றீங்க?
இல்ல' உள்ள போன ஊசி இப்ப எங்க இருக்குன்னுபாக்க ஆசையா இருக்கு...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
"நீங்க தான் டிஸ்சார்ஜ் ஆயாச்சே, இன்னும்ஏன் வீட்டுக்குப் போகாம இங்கேயே இருக்கீங்க"
பஸ் சார்ஜ் இல்ல டாக்டர் ''!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
"டெம்பரேச்சர் தாறுமாறா இருக்கே....!''
நேத்து வெச்ச தெர்மாமீட்டர் டாக்டர் நர்ஸ் எடுக்க மறந்துட்டாங்க.....!''
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
''உங்க மனைவிக்கு தொண்டைல மைனர் ஆபரேஷன்தான் ரெண்டு நாள் அவங்களால பேச முடியாது!''
அப்ப மேஜர் ஆபரேஷன் பண்ணா எவ்வளவு நாள் பேசமுடியாது டாக்டர்?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நோயாளி: டாக்டர் நீங்க எழுதிதந்த சீட்டுக்கு மருந்து தரமாட்டேங்கிறாங்க
டாக்டர்: அடா, இது நான் கிறிக்கி பார்த்த சீட்டு
(mindvoice: மத்த சீட்டுனா மட்டும் எழுதிதள்ளிருவீங்க பாரு)
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நோயாளி : டாக்டர், வயித்து வலி என்னால பொறுக்க முடியல...
டாக்டர் : வயிறு வலிக்கும்போது, நீங்க ஏன் பொறுக்கப் போறீங்க?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நோயாளி : காதுல ரயில் ஓடற மாதிரி சத்தம் கேட்குது டாக்டர்.
டாக்டர் : (செக் பண்ணிவிட்டு) எனக்கு ஒன்னும் கேட்கலையே?
நோயாளி : அப்படியா! அப்போ ஏதாவது ஜங்ஷன்ல நின்னிருக்குமோ
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ஹைக்கிரவுண்ட் ஆஸ்பத்திரியின் அறுவை சிகிச்சை வார்டில் நடந்த உண்மைச் சம்பவம் இது!
சிரிக்க மறந்த சிந்தனைவாதிகளும்
உண்மைச் சம்பவம் பிடிக்காத யதார்த்தவாதிகளும் இதனை வாசித்து வயிற்றுவலி வாங்கிக்கொள்ள வேண்டாம்.......
விபத்து ஒன்றில் மார்பெலும்புக்கூடு சேதமடைந்து அறுவை சிகிச்சைக்காக வந்திருந்தார் ஒரு அன்பர். மருத்துவரின் கைவண்ணத்தால் திறம்பட செப்பனிடப்பட்டு பின்கவனிப்பு பகுதி(post operative ward)யில் தீவிர கவனிப்பில் இருந்தார். நுரையீரலின் சுவாச சக்தியை அதிகரிக்கும் பொருட்டு பலூன்
ஊதி ஊதி உடைக்கும்படி தலைமை மருத்துவர் அறிவுரை கூறியிருந்தார். ஊதும்போது நுரையீரல் சுருங்கி விரியும்.
மறுநாள் காலை உதவிமருத்துவர்கள், ஹவுஸ்சர்ஜன்ஸ், செவிலியர்கள் புடைசூழ தலைமை மருத்துவர் ரவுண்ட்ஸ்
வந்துகொண்டிருந்தார். வார்டில் நுழைந்ததும் படார் படார் என்றொரு சத்தம். எல்லோர் முகத்திலும் பேயறைந்தது போன்ற
அதிர்ச்சி. திட்டுவதற்கு வாயைத்திறந்த மருத்துவர் அடக்க
முடியாமல் சிரித்துவிட்டார். நம் மார்புக்கூடு நண்பர், மனைவி
பலூன் ஊதி ஊதி தர இருகையாலும் குழந்தைபோல் உடைத்துக் கொண்டிருந்தார், மருத்துவர் பார்த்துப் பாராட்டவேண்டுமென்று!!!!!
பிரிந்து சென்ற காதலரை இகழ்வது தனக்கே இழிவாகும் என்பதால், அவருடைய பெருமையைப் பற்றியே என்னுயிர்க் காதல் நெஞ்சம் எண்ணிக் கொண்டிருக்கும்.
0 comments:
Post a Comment