சிந்திக்க :
நாம் வாயைத் திறக்கும் பொழுதெல்லாம் உள்ளத்தை திறக்கிறோம்.
இன்றைய நாளை இறுகப் பற்றிக் கொள், நாளை நாளைப் பற்றி அதிகம் நம்ப வேண்டாம்.
யார் யார் எதில் உயாந்தவர் என்பது இறப்பிற்கு பின்னே தெரியும்.
மனிதனின் வாழ்க்கை ஒரு குழந்தையின் கையில் உள்ள முட்டையைப் போன்றது.
துணிவுடன் எதையும் செய், அதன் தன்மையில் புது அர்த்தங்கள் மலரும்.
வாதாடப் பலருக்குத் தெரியும், உரையாடுவது சிலருக்குத் தான் தெரியும்.
சிரிப்பின் வகைகள் :
ஓடவிட்டு சிரிப்பவன் வஞ்சகக்காரன்
மோகத்தில் சிரிப்பவன் வெறியன்
ஓயாமல் சிரிப்பவன் பைத்தியக்காரன்
இடம் பார்த்துச் சிரிப்பவன் எத்தன்
கற்பனையில் சிரிப்பவன் கவிஞன்
மகிமையில் சிரிப்பவன் மன்னன்
தெரியாமல் சிரிப்பவன் பசப்பாளி
தெரியாது என்று சிரிப்பவன் நடிகன்
இருக்கும் இடம் எல்லாம் சிரிப்பவன் கோமாளி
கண் பார்த்துச் சிரிப்பவன் கஞ்சன்
துன்பத்தில் சிரிப்பவன் மனிதன்
பிரிந்து சென்ற காதலரை இகழ்வது தனக்கே இழிவாகும் என்பதால், அவருடைய பெருமையைப் பற்றியே என்னுயிர்க் காதல் நெஞ்சம் எண்ணிக் கொண்டிருக்கும்.
2 comments:
Thangamana muthucharangal Mr. Gold
*************Be Happy ***************
நன்றி ராம் ..
மகிழ்ச்சியாக இருக்க வாழ்த்துகள் !
Post a Comment