பாடம் – 11
Past Perfect Continuous Tense
பாஸ்ட் பெர்ஃபெக்ட் கண்டினியூவஸ் டென்ஸ், பாஸ்ட் பெர்ஃபெக்ட் டென்ஸ் மாதிரி தான். கடந்த காலத்தில் நடந்த ஒரு ஆக்ஷனுக்கு முன்னாடி நடந்த நீளமான ஆக்ஷனைச் சொல்றதுக்கு இந்த டென்ஸைப் பயன் படுத்தலாம்.
ஒரே கன்ஃப்யூஷனா இருக்கா…. அப்போ இந்த உதாரணத்தைப் பாருங்க:
Ram started waiting at 9am. I arrived at 11am. When I arrived, Ram had been waiting for two hours.
இப்படி 3 வாக்கியமா சொல்ற கருமாந்திரத்தை கீழே சொல்றது மாதிரி ஒரே வாக்கியத்தில் சொல்லலாம்.
Ram had been waiting for two hours when I arrived.
9 மணியிலிருந்து 11 மணி வரை காத்திக்கிட்டுருந்தான் –ங்கிறது நீளமான நிகழ்ச்சி. Arrived – க்கு முன்னாடி நடந்த நிகழ்ச்சி.
இன்னும் ஒரு சில உதாரணங்களைப் பார்க்கலாம்:
John was very tired. He had been running.
I could smell cigarettes. Somebody had been smoking.
Suddenly, my car broke down. I was not surprised. It had not been running well for a long time.
Had the pilot been drinking before the crash?
சில சமயங்களில் இதை ப்ரெசெண்ட் பெர்ஃபெக்ட் கண்டினியூவஸ் டென்ஸ் மாதிரி நினைச்சுக்கலாம். என்ன ஆக்ஷன் நடக்கிற நேரம் இப்போ இல்லை. கடந்த காலத்தில். அவ்வளவு தான்.
இதுக்கு கீழே உள்ள உதாரணத்தைப் பாருங்க:
ராமை 11 மணிக்கு சந்திக்கிறீங்க. ராம் உங்க கிட்டே சொல்றாரு:
"I am angry. I have been waiting for two hours.
இதே விஷயத்தை அப்புறமா உங்க நண்பர்கள் கிட்டே நீங்க இப்படி சொல்வீங்க:
"Ram was angry. He had been waiting for two hour
இப்போ இந்த டென்சுக்கான ஃபார்மட்டைப் பார்க்கலாம்:
====================================================================
Person Singular Verb Formation Plural Verb Formation
====================================================================
First I had been going We had been going
Second You had been going You had been going
Third He had been going They had been going
She (or)
It Two or
Ram (Or) more names
Seetha (or) combined
====================================================================
====================================================================
Person Singular Verb Formation Plural Verb Formation
====================================================================
First I had not been going We had not been going
Second You had not been going You had not been going
Third He had not been going They had not been going
She (or)
It Two or
Ram (Or) more names
Seetha (or) combined
====================================================================
பாடம் - 12
Simple Futre Tense
ஒரு செயலைச் செய்யுறதுக்கு உங்க கிட்டே எந்த ஒரு திட்டமும், முடிவும் இல்லை. பேசிக்கிட்டிருக்கும்போது உடனடியா முடிவு எடுக்கிறீங்க. அப்போ சிம்ப்பிள் ஃப்யூச்சர் டென்ஸை உபயோகிக்கணும்.
உதாரணத்துக்கு:
Hold on. I'll get a pen.
We will see what we can do to help you.
Maybe we'll stay in and watch television tonight.
இதிலே, பேசுறதுக்கு முன்னாடி எந்த ஒரு ப்ளானும் உங்க கிட்டே கிடையாது. எப்போ பேசுறீங்களோ அப்போ தான் அந்த முடிவை எடுக்கிறீங்க. இந்த மாதிரி தருணத்தில் இந்த டென்ஸை உபயோகிக்கணும்.
To think – இந்த வார்த்தைகளை நாம இந்த டென்சோட அடிக்கடி உபயோகிக்க வேண்டி வரும்.
உதாரணம் பாருங்க:
I think I'll go to the gym tomorrow.
I think I will have a holiday next year.
I don't think I'll buy that car.
எதிர்காலத்தில் நடக்கப் போறதை ஒரு ஜோசியம் சொல்றது மாதிரி சொல்லணும்னா, இந்த டென்சை உபயோகப்படுத்தணும். மறுபடியும் இதிலே குறிப்பிட்ட திட்டம் எதுவும் கிடையாது. என்ன நடக்கும் நு நீங்க நினைக்கிறீங்களோ அதைத்தான் சொல்றீங்க.
உதாரணம் பருங்க:
It will rain tomorrow.
People won't go to Jupiter before the 22nd century.
Who do you think will get the job?
இதுக்கு ஒரே ஒரு விதி விலக்கு இருக்கு. வெறும் Be வெர்பை வச்சு மட்டும் சொல்லணும்னா, அங்கே உறுதியான புரோகிராமா இருந்தாக் கூட உபயோகிக்கலாம்:
பாருங்க:
I'll be in London tomorrow.
I'm going shopping. I won't be very long.
Will you be at work tomorrow?
அப்போ, உறுதியான புரோகிராமா இருந்து அதை எதிர்காலத்தில் சொல்லணும்னா எப்படிச் சொல்றது. அங்கே ப்ரெசெண்ட் கண்டினியூவஸ் டென்சை உபயோகிக்கணும்.
பாருங்க எதிர்காலத்தை, நிகழ்காலத்தில் எப்படி சொல்றதுன்னு – பின்னே எதுக்கு நாங்க திட்டுறோம் இந்த மொழி ஒரு வீணாப்போன மொழின்னு. உதாரணத்தைப் பாருங்க:
We're eating in a restaurant tonight. We've already booked the table.
டேபிளை புக் பண்ணீட்டாரம். இன்னிக்கு நைட் சாப்பிடப் போறார். (எதிர்காலம் – ஆனா சொல்றது Present Continuous Tense)
They can play tennis with you tomorrow. They're not working.
அவங்களுக்கு வேலை ஒன்னும் இல்லை. நாளைக்கு உங்கூட டென்னிஸ் விளையாடுவாங்க.
When are you starting your new job?
உன்னோட புது வேலையை எப்போ ஆரம்பிக்கப் போற?
சரிங்க. ஓரளவுக்குப் புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன். இனிமே, ஃபார்மட்டைப் பார்க்கலாம்.
====================================================================
Person Singular Verb Formation Plural Verb Formation
====================================================================
First I will go We will go
Second You will go You will go
Third He will go They will go
She (or)
It Two or
Ram (Or) more names
Seetha (or) combined
====================================================================
====================================================================
Person Singular Verb Formation Plural Verb Formation
====================================================================
First I will not go We will not go
Second You will not go You will not go
Third He will not go They will not go
She (or)
It Two or
Ram (Or) more names
Seetha (or) combined
====================================================================
பாடம் – 13
Future Continuous Tense
எதிர்காலத்தில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் நடக்கப் போகிற செயலைச் சொல்றதுக்கு நாம ஃப்யூச்சர் கண்டினியூவஸ் டென்சை உபயோகிக்கிறோம்.
உதாரணம் பாருங்க:
I will be playing tennis at 10am tomorrow.
They won't be watching TV at 9pm tonight.
What will you be doing at 10pm tonight?
What will you be doing when I arrive?
She will not be sleeping when you telephone her.
We 'll be having dinner when the film starts.
Take your umbrella. It will be raining when you return.
அவ்வளவு தாங்க. ரொம்ப சிம்ப்பிள். வேற உபயோகம் இல்லை. இப்போ ஃபார்மட்டைப் பார்க்கலாம்.
PersonSingularVerb FormationPluralVerb Formation
FirstIwill be goingWewill be going
SecondYouwill be goingYouwill be going
ThirdHe (or) She (or) It (or) Ram (or) (Seetha)Will be goingThey (or) Two or more names combinedwill be going
PersonSingularVerb FormationPluralVerb Formation
FirstIwill not be goingWewill not be going
SecondYouwill not be goingYouwill not be going
ThirdHe (or) She (or) It (or) Ram (or) (Seetha)will not be goingThey (or) Two or more names combinedwill not be going
சில நேரங்களில் will – க்குப் பதில் shall வரும். அதுவும் I, We க்கு மட்டும்.
நாங்க படிக்கும்போதெல்லாம், I, We –க்கு shall தான் போடணும் நு சொன்னாங்க. இப்போ யாரும் shall போடுறதில்லை. எல்லா இடத்திலும் will தான் உபயோகிக்கிறாங்க.
பாடம் – 14
Future Perfect Tense
இந்த் டென்ஸை புரிஞ்சிக்கிறது ரொம்ப ஈஸி. எதிர்காலத்தில் நடந்து முடிஞ்சிருக்கிற செயலைச் சொல்றதுக்கு இந்த டென்ஸைப் பயன்படுத்துறோம். அவ்வளவு தான். இப்போ உதாரணத்தைப் பார்க்கலாம்:
The train will leave the station at 9am. You will arrive at the station at 9.15am. When you arrive, the train will have left.
நீங்க 9 மணிக்கு ஸ்டேஷனுக்கு வருவீங்க. ஆனா, டிரைய்ன் 9.15 க்கு கிளம்பி போயிரும். அப்போ நீங்க ஸ்டேஷனுக்கு வரும்போது, டிரைய்ன் கிளம்பி போயிருக்கும்.
The train will have left when you arrive.
இப்போ புரியுதுங்களா? இல்லையா, அப்போ இந்த உதாரணத்தைப் பாருங்க. இது டக்குன்னு புரியும்:
நாளைக்கு நைட் 9 மணிக்கு தண்ணி அடிச்சு முடிச்சிருப்போம்.
We will have finished drinking by 9.00 pm tomorrow.
இன்னும் சில உதாரணங்கள்.
You can call me at work at 8am. I will have arrived at the office by 8.
They will be tired when they arrive. They will not have slept for a long time.
"Mary won't be at home when you arrive."
"Really? Where will she have gone?"
இந்த டென்சுக்கான ஃபார்மட்டைப் பார்க்கலாமா?
இன்னும் ஒரே ஒரு டென்ஸ் தான் பாக்கி இருக்கு. அதை நாளைக்கு முடிச்சிட்டோம்னா டென்ஸ் முடிஞ்சாச்சு.
பாடம் – 15
Future Perfect Continuous Tense
இந்த டென்சுக்கு நிறைய உபயோகம் இல்லை. எனக்குத் தெரிஞ்சு ஒரே ஒரு உபயோகம் தான்.
எதிர்காலத்தில் ஒரு குறிப்பிட்ட நேரத்துக்கு முன்னாடி நடந்து முடிஞ்ச ஒரு நீளமான ஆக்ஷனைச் சொல்றதுக்கு இந்த டென்சை உபயோகப் படுத்தணும்.
உதாரணம் பாருங்க:
I will have been working here for ten years next week.
அடுத்த வாரம் ஆச்சுன்னா நான் இங்கே 10 வருஷமா வேலை பார்த்துக்கிட்டிருந்துப்பேன்.
He will be tired when he arrives. He will have been travelling for 24 hours.
அவன் வரும்போது ரொம்ப களைப்பா இருப்பான். ஏன்னா அவன் 24 மணி நேரமா பிரயாணம் பண்ணிக்கிட்டிருந்திருப்பான்.
இப்போ இந்த டென்சுக்கான ஃபார்மட்டைப் பார்க்கலாம்:
அவ்வளவு தாங்க. இன்னிக்கோடு டென்சு முடிஞ்சது.
இனிமே நீங்க ஆங்கிலத்தில் எந்த வாக்கியத்தைப் பார்த்தாலும் இது எந்த டென்ஸ்-னு சொல்லத் தெரியணும்.
ஆக, இன்னிக்கு உங்களுக்கு ஒரு வெர்பை 12 வகையில் வித்தியாசமா உபயோகிக்கத் தெரியும்.
நாளைக்கு இதோட சம்மரியை ஒரு எக்ஸெல் அட்டாச்மெண்ட்டா போடுறேன்.
அப்புறம் இது வரைக்கும் வந்த இந்த டென்ஸ் பாடங்களை பி.டி.எஃப்-ஆ ஆக்கியும் போடுறேன். அதையும் ஒரு தடவை ரிவிசன் மாதிரி படிங்க.
இது வரைக்கும் நாம பார்த்தது செய்வினை மட்டும் தான். இனிமே, இந்த 12 டென்சும் செயப்பாட்டு வினையா மாறும் போது எப்படி வெர்ப் ஃபார்மட் இருக்கும். அதையும் பார்க்கணும். தமிழில் அவ்வளவு சுலபமா யாரும் செயப்பாட்டு வினையை உபயோகிக்க மாட்டோம். ஆனா, ஆங்கிலத்தில் ரொம்ப சுலபமா எல்லாரும் உபயோகிப்பாங்க.
Raja did this work – னு சொல்றதுக்குப் பதிலா This work was done by Raja னு சொல்வாங்க. ரெண்டும் அர்த்தம் ஒன்னு தான். ஆனா did –ங்கிற வெர்ப் பேஸிவ் வாய்சில was done ஆ மாறுது. இதை முறைப்படி நாளையிலிருந்து பார்ப்போம்.
சரிங்களா?
பிரிந்து சென்ற காதலரை இகழ்வது தனக்கே இழிவாகும் என்பதால், அவருடைய பெருமையைப் பற்றியே என்னுயிர்க் காதல் நெஞ்சம் எண்ணிக் கொண்டிருக்கும்.
0 comments:
Post a Comment