செய்தி : அகல இரயில்பாதை அமைத்ததில் ஆளும்கட்சி ஊழல்.
தொண்டர்: தலைவரே அகலப்பாதை அமைக்கிறதுல ஊழல் செஞ்சதா எதிர்கட்சிக்காரங்க வழக்கு போட்டிருக்காங்க!
தலைவர்: வழக்குலருந்து தப்பிக்க ஏதாவது ‘குறுக்குப் பாதை’ இருக்கான்னு கண்டுபிடிங்கப்பா!
---------------
போலிஸ்: எதுக்குடா பிள்ளையார் சிலைய திருடினே?
திருடன்: தொழில முதல்முறையா ஆரம்பிக்கும்போது பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பிக்கணும் இல்லையா? அதான் சார்!
****
போலிஸ்: உங்க இருசக்கர வண்டிய காணோம்ன்னு புகார் குடுத்திருந்தீங்க.. இல்லையா? அதோ நிக்குதே.. அதுவா பாருங்க.
நம்மவர்: இல்லைங்க, இது இல்ல.
போலிஸ்: பரவாயில்ல.. அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க. அப்புறம் உங்க மனைவிய காணோம்ன்னு இன்னொரு கம்ப்ளெய்ண்ட் கொடுத்திருந்தீங்க இல்லையா? அதோ அவங்களா பாருங்க?
நம்மவர்: இல்லை! பரவாயில்ல.. நான் அட்ஜஸ்ட் பண்ணிக்கிறேன்!
புதிதாய் பிறந்த குழந்தை நர்ஸிடம் பேசுகிறது...)
"நர்ஸ், ஒரு மொபைல் இருந்தா கொடுங்க."
"எதுக்குடா செல்லம்?"
"நான் சேஃப்டியா லேண்ட் ஆயிட்டேனு சொல்றதுக்கு கடவுள்கிட்ட மிஸ்டு கால் கொடுக்கணும்!!"
ஏண்டா.. உங்க அப்பா எந்நேரமும் உன்னைத் திட்டிக்கிட்டே இருக்காரு."
"ஹ..ஹ்ஹ.ஹா.... சிங்கத்தைக் கொஞ்ச முடியாதுல்ல.. அதான்!!"
"டாக்டர் எனக்கு தற்கொலை பண்ணிக்கணும் போல இருக்கு."
"அதெல்லாம் கூடாது.. ரொம்ப தப்பு. அப்புறம் நாங்கெல்லாம் எதுக்கு இருக்கோம்?"
(ஐ.டி.தொழிலாளி, கார்ப்பொரேஷன் குப்பைத் தொழிலாளியிடம்..)
"என் கையில டிகிரி இருக்கு; நெறய நாலெட்ஜ் இருக்கு; சொசைட்டில பெரிய அந்தஸ்து இருக்கு. உனக்கு??"
"நிரந்தரமான வேலை இருக்கு!!"
நான் சீசனுக்கு சீசன் வியாபாரத்தை மாத்திடுவேன்"
"இப்போ என்ன வியாபாரம் பண்றே?"
"செருப்பு வியாபாரம். நல்லா சேல்ஸ் ஆகுது. முக்கியமா பிரஸ் மீட் நடக்குற இடங்கள்ல..!!"
'உனக்காக நான் நரகத்திற்கும் செல்லத் தயார்' என்று சொன்னான் அந்தக் காதலன். இப்போது அவன் நிஜமாகவே நரகத்தில்தான் வாழ்கிறான். அவனுக்குத் திருமணமாகிவிட்டது
எங்க வீட்டுல கேபிள் கனெக்ஷன் இருந்தும் என்னால படம் பார்க்க முடியல"
"ஏன்.. என்ன பிராப்ளம்?"
"அதுக்கு ஏதோ 'டிவி'ன்னு ஒண்ணு வேணுமாம்ல..."
"சினிமா போலாமா.. பீச்சுக்குப் போலாமா.."
"இல்ல.. பேசாம இன்னிக்கு படிக்கலாம்"
"சரி உனக்கும் வேணாம், எனக்கும் வேணாம். டாஸ் போடலாம். தலை விழுந்தா சினிமா. பூ விழுந்தா பீச். ரெண்டுக்கும் நடுவில நின்னா படிப்பு. சரியா..?!"
நேத்து ஒரு பொண்ணு என்கிட்ட வந்து ஆட்டோகிராப் கேட்டா. கையெழுத்துப் போட்டுக் கொடுத்தேன்."
"ம்ம்..அப்புறம்!"
"கையெழுத்தப் பார்த்துட்டு கேட்டா.. 'அப்போ நீங்க சூரியா இல்லையா!'. நான் அப்படியே ஷா..க்க்...காயிட்டேன்.
"என்ன கொடுமை சார் இது?"
"விவசாயம் பண்ணறது தப்பா சார்?"
"தப்பில்லை. ஏன் கேட்கிறே?"
"நாங்க கடலை போட்டா மட்டும் திட்டுறீங்களே!"
மாணவர்கள் ஜாக்கிரதை!
“மாணவர்களே.. கடவுளிடம் வேண்டிக்கொண்டால் நீங்கள் விரும்பியது கிடைக்கும்..”
“போங்க சார்.. இது உண்மைன்னா நீங்க உயிரோடவே இருந்திருக்க மாட்டீங்களே!!”
கடி
“யோவ் கண்டக்டர்.. பஸ்ஸுல ஏன் பிச்சைக்காரங்களா இருக்காங்க?”
“கையில சில்லறை வச்சிருக்கறவங்க மட்டும் ஏறுங்கன்னு சொன்னேன்.. அதான்..”
காட்சி வேறு - வசனம் ஒன்று
“டாக்டர்ஸ் ஆபரேஷன் முடிஞ்சு வெளியே வரும்போதும், பசங்க பரீட்சை எழுதிட்டு வெளியே வரும்போதும் சொல்ற ஒரே வரி...?”
“எவ்வளவோ ட்ரை பண்ணோம்.. ஆனாலும் முடியல..”
சுள்ளான்கள் ஜாக்கிரதை!
“நான் இனிமே படிக்கலை.. வேலை செய்யப் போறேன்..”
“டேய்.. யூகேஜி படிக்கிற உனக்கு என்ன வேலை கிடைக்கும்?”
“எல்கேஜி படிக்கிற பொண்ணுங்களுக்கு ட்யூசன் எடுக்கப் போறேன்”
------------
மருந்துக் கடைக்கு அவசர அவசரமாய் வந்த ஒருவர் கேட்கிறார்: “விக்கலுக்கு ஏதாவது மாத்திரை குடுங்க”
அதிர்ச்சி வைத்தியம்தான் சரிப்படும் என்றெண்ணிய கடைக்காரர் பளார் என்று அறைகிறார்.
அடுத்த நொடி வந்தவர் திருப்பி விட்ட அறையில் கடைக்காரருக்கு பொறி பறக்கிறது.
”யோவ்.... விக்கல் எனக்கில்ல.. எம் பொண்டாட்டிக்கு!”
பிரிந்து சென்ற காதலரை இகழ்வது தனக்கே இழிவாகும் என்பதால், அவருடைய பெருமையைப் பற்றியே என்னுயிர்க் காதல் நெஞ்சம் எண்ணிக் கொண்டிருக்கும்.
0 comments:
Post a Comment