இயற்கை எனது நண்பன், வாழ்க்கை எனது தத்துவ ஆசிரியன், வரலாறு எனது வழிகாட்டி - தமிழீழ தேசிய தலைவர் யோசிப்பதானால் நிதானமாக யோசியுங்கள், செயல்படுவதானால் உறுதியுடன் செயல்படுங்கள், விட்டுக் கொடுப்பதனால் பெருந்தன்மையுடன் விட்டுக் கொடுங்கள். எதிர்ப்பதனால் துணிந்து எதிர்த்து நில்லுங்கள்

என்னுடைய நான்,

உலகம் பிறந்தது எனக்காக, ஓடும் நதிகளும் எனக்காக, இன்னும் உலகின் அனைத்து ஏற்பாடுகளும் எனக்காக, ஆனால் நான் யாருக்காக ?

வாங்க.... ஆங்கிலம் கத்துக்கலாம்! சுட்டது நம்ம கோகுல் அவர்களிடம் இருந்து பகுதி 1



நாம இங்கே பாக்கப்போறது verb - இதை எப்படி சரியா உபயோக்கிப்பது?

தமிழில் மூன்று காலங்கள் இருக்கு. நிகழ்காலம், இறந்த காலம், எதிர் காலம் - இப்படி.

ஆனா, இந்த வீணாப்போன ஆங்கிலத்தில் நிகழ்காலத்துக்குள்ள 4 காலம், இறந்தகாலத்துக்குள்ள 4 காலம், எதிர் காலத்துக்குள்ள 4 காலம் - இப்படி 12 காலம் இருக்கு.

ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு எழுவாய் (Subject) கூட இந்த வினைச்சொல் (verb) எப்படி டிரெஸ் மாத்திக்கிட்டு வரப் போறதுங்கிறதைப் பத்திப் பாக்கப் போறோம்.

இதைப் படிச்சிட்டாலே, 80% சரியா எழுதீடலாம்-ங்கிற ஒரு தெனாவட்டு வந்துரும்.

அதுக்கப்புறம் இந்த 12 காலத்தையும், எதிர்மறையா சொன்னா எப்படி சொல்றது - இதைப்பாக்கப் போறோம் (உ-ம் நான் நாளைக்கு ஸ்கூலுக்கு போவேன், நான் நாளைக்குஸ்கூலுக்குப் போக மாட்டேன் - I will go to school, I will not go to school)

அப்புறம் இந்த 12 காலமும் கேள்வியாக் கேட்டா எப்படிக் கேக்கிறது நு பார்க்கப்போறோம் (உ-ம், I will go to school - When will you go to school?)

அதுக்கப்புறம் இந்த 12 காலங்களும் voice (செய்வினை-லிருந்து செயப்பாட்டு வினைக்கு) மாறினா அதோட சேர்ந்துக்கிட்டு இந்த வெர்ப் மண்ணாங்கட்டி எப்படி மாறப் போகுதுன்னுபாக்கப் போறோம்.

அப்புறம், கசாமுசான்னு ஒரு சில வார்த்தைகள் இருக்கு.

could have completed
would have completed
must have completed
might have completed

இதெல்லாம் பாப்போம். இதுக்கே ஒரு மாசம் ஓடீறாது...?


பாடம் - 1

இந்த இங்கிலீஷை நாம தமிழோட சேர்த்துக்கிட்டே படிக்கிறதுக்கு முயற்சிபண்ணுவோம்.

அதுக்கு முதலில் தன்மை, முன்னிலை மற்றும் படர்க்கை பற்றித் தெரியணும்.

தன்னைப் பற்றிப் பேசினா அது தன்மை. அதுக்குப் பேர் இங்கிலீஷில் First Person. நான், நாங்கள் - தமிழில். I, We - ஆங்கிலத்தில்.

முன்னாடி இருக்கிற ஆளைப் பற்றிப் பேசினா அது முன்னிலை. அதுக்குப் பேர்தாங்கஇங்கிலீஷில் Second Person. தமிழில் நீ, நீங்கள். ஆங்கிலத்தில் You, மறுபடியும் You. சிங்குலரும் (ஒருமை) அதான். ப்ளூரலும் (பன்மை) அதான். இப்போதெரியுதுங்களாஇங்கிலீஷ எதுக்குத் திட்டுறோம்னு.

தன்னைப் பத்தியும் பேசாம, முன்னால இருக்கிறவனைப் பத்தியும் பேசாம வேறயாரோஒரு ஆளைப் பத்திப் பேசினா அது படர்க்கை. அது ஆங்கிலத்தில் Third Person. தமிழில்அவன், அவள், அது, அல்லது ஏதாவது ஒரு பெயர் ராமன் அல்லது சீதா. ஆங்கிலத்தில் He, She, It, Any one Name Either Rama or Seetha இது ஒருமை. பன்மையில் They அல்லது ரெண்டுஅல்லது அதுக்கு மேற்பட்ட பேர்கள் சேர்ந்து - Ram, Lakhman and S

ஏன் இதைச் சொல்றேன்னா, நாம இப்போ ஒரு அட்டவணை போடப் போறோம். அதில்இதெல்லாம் வரப் போகுது. அந்த அட்டவணையை 12 காலங்களுக்கும்நிரப்பப்போறோம்.

அதில், இந்த Subject (எழுவாய்) -க்கு அப்புறம் verb (வினைச்சொல்) அதுமட்டும்மாறிக்கிட்டே இருக்கும்.

இப்போ அந்த அட்டவணையைப் பாருங்க:







நாளையிலேருந்து ஒவ்வொரு காலமா (tense) நிரப்ப ஆரம்பிக்கலாமா?



பாடம் - 2

சரிங்க, இன்னிக்கிலேருந்து நாம இந்த Tense – ஐப் படிக்க ஆரம்பிக்கலாமா?
முதலில் இந்த 12 Tense – ம் என்னன்னு பாத்துரலாம்.

Present Tense (நிகழ்காலம்) இதை நாலாப் பிரிக்கிறாங்க:

1. Simple Present Tense
2. Present Continuous Tense
3. Present Perfect Tense
4. Present Perfect Continuous Tense

இதே மாதிரி தான் Past Tense (இறந்த காலம்):

1. Simple Past Tense
2. Past Continuous Tense
3. Past Perfect Tense
4. Past Perfect Continuous Tense

இதே மாதிரி தான் Future Tense (எதிர் காலம்)

1. Simple Future Tense
2. Future Continuous Tense
3. Future Perfect Tense
4. Future Perfect Continuous Tense

இன்னிக்கு ஞாயிற்றுக்கிழமை. அதனால இத்தோட முடிச்சுக்குவோம். நாளைக்கிலேருந்து Simple Present Tense லிருந்து ஆரம்பிச்சு Future Perfect Continuous Tense வரைக்கும் ஒரு கை பாத்துருவோம்.


பாடம் - 3

Simple Present Tense

இன்னிக்கு நாம இந்த சிம்ப்பிள் ப்ரெஸெண்ட் டென்சைப் பாக்கலாம்.

நாம வழக்கமா செய்யுற செயல்களைச் சொல்றதுக்கு இந்த டென்ஸைஉபயோகிக்கணும்.

உ-ம் :

நான் தினமும் ஸ்கூலுக்குப் போவேன்.
I go to school daily.

காலையில் காப்பியோடு செய்தித்தாள் படிப்பேன்.
I read newspaper along with morning coffee.

அப்புறமா, எல்லாத்துக்கும் தெரிஞ்ச பொதுவான உண்மையைச் சொல்றதுக்கு இந்தடென்ஸை உபயோகிக்கணும்.

உ-ம்:

சூரியன் கிழக்குத் திசையில் உதிக்கிறது.
The Sun rises in the east.

தேன் இனிப்பாக இருக்கிறது.
Honey is sweet.

இந்த டென்ஸில் பாத்தீங்கன்னா, everyday, daily, frequently, seldom, rarely, usually இந்த மாதிரிவார்த்தைகள் இணைந்து வரும்.

இப்போ இந்த டென்ஸோட வெர்ப் ஃபார்மட் பாப்போம்.




go அப்புடீங்கிற வெர்பை உதாரணமா வச்சு இந்த ஃபார்மட்டைப் போட்டிருக்கேன்.

இதுல கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் என்னன்னு, தேர்ட் பேர்சன் சிங்குலர். அந்த He, She, It. அதில் மட்டும் கூட ஒரு s சேரும். walk - walks, run - runs இந்த மாதிரி. சிலவினைச்சொற்கள் o வில் முடிந்ததுன்னா அதில் மட்டும் es சேரும். go - goes, do - does இந்தமாதிரி.

மற்ற எல்லா இடத்திலும், அந்த வெர்பின் ப்ரெசெண்ட் டென்ஸ் ஃபார்ம் உபயோகிக்கணும்.

சின்னப் புள்ளைல படிச்சிருப்பீங்க ஒரு வெர்புக்கு present tense - past tense - past participle னுமூனு கட்டம் போட்டு சொல்லிக்குடுத்துருப்பாங்க.

உ-ம்:

walk - walked - walked
run - ran - run
go - went - gone
do - did - done
put - put - put
cut - cut - cut
come - came - come

இதில் முதல் கட்டத்திலுள்ள ப்ரெசெண்ட் டென்ஸ் பார்மை உபயோகிக்கணும். I go to school. We go to school. You go to school. He goes to school. They go to school.

இப்போ ஃபார்மட் புரிஞ்சதுங்களா?

இது கூடவே சேர்ந்து நெகடிவ் ஃபார்மட்டையும் படிச்சுக்கிட்டோம்னா, நல்லது.

அதாவது go அப்பிடீங்கிற வார்த்தை உடையும். எப்படி உடையும்னா, do + go வா உடையும்.
ரெண்டுக்கும் நடுவில் not வந்திடும்.

இப்போ நான் ஸ்கூலுக்குப் போகலை-ன்னு சொல்லணும்.

எப்படிச் சொல்றது:

I do not go to school. அல்லது I don't go to school. இப்படிச் சொல்லணும்.

அதே வார்த்தை, இந்த தேர்ட் பேர்சன் சிங்குலரில் மட்டும் He does not go to school னுசொல்லணும். ஆக, சிம்ப்பிள் ப்ரெசெண்ட் டென்சில் இந்த தேர்ட் பேர்சன் சிங்குலரைமட்டும் மறந்திடக் கூடாது.

மெத்தப் படிச்ச மேதாவிங்களே, அவனுக்கு ஹிந்தி தெரியாது-ன்னு சொல்றதுக்கு He don't know Hindi னு சொல்வாங்க. அது பெரிய தப்பு. He does not know Hindi அல்லது He doesn't know Hindi இப்படித்தான் சொல்லணும்.

புரியதுங்களா?

நாம ஒரு வேகத்துல, He don't know anything சொல்லுவோம். அப்படிச் சொல்லாமஇன்னிக்கிலேருந்து He doesn't know anything னு சொல்லணும்.

ஓரளவுக்குப் புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன்.

நாளைக்கி அடுத்த டென்ஸைப் பாப்போம்.

வர்ட்டா?


பாடம் - 4

Present Continuous Tense

சிம்ப்பிள் ப்ரெஸெண்ட் டென்ஸை நாம வழக்கமா செய்யும் செயல்களைச்சொல்றதுக்காக உபயோகப் படுத்தினோம்.

இப்போ இந்த நிமிஷம் என்ன செய்கிறோம்-ங்கிறதைச் சொல்றதுக்கு ப்ரெஸெண்ட்கண்ட்டினியூவஸ் டென்ஸை உபயோகப் படுத்தணும். இந்த ரெண்டு டென்சுக்கும்வித்தியாசம் அவ்வளவு தான்.

உ-ம்:

இப்போ நான் என்னுடைய குழந்தைக்கு அறிவியல் பாடம் சொல்லிக்குடுத்துக்கிட்டிருக்கேன்.

Now, I am teaching science to my child.

நான் ஃபிகர் கூட கடலை போட்டுக்கிட்டு இருக்கேன்.

I am chatting with my girlfriend.

இந்த டென்சில் பாத்தீங்கன்னா now அப்புடீங்கிற வார்த்தை உபயோகமாகும்.

வெர்ப் ஃபார்மட் எப்படி வரும்-னு கேட்டீங்கன்னா, ஒரு am, is, அல்லது are இதுலே ஏதாவதுக்குத் தகுந்தபடி போட்டுக்கிட்டு வெர்போட present ஃபார்மட்டிலிருந்து ing சேர்த்துக்கிட வேண்டியதுதான். Tell (இது ப்ரெஸெண்ட் ஃபார்மட் - இதுகூட ing சேர்த்து telling ஆக்கிடுங்க. ஆனா tell-ஓட past ஃபார்மட்டான told-ஓட ing சேர்த்து தயவுசெய்து tolding ஆக்கிடாதீங்க!!! Subject-

இப்போ இந்த அட்டவணையைப் பாருங்க:






எதிர்மறை உபயோகம் எப்படி வரும்னு கொஞ்சம் பார்க்கலாமா?





am going, are going, is going இதை உடைச்சு இடையில் not போட்டுக்கிட்டா எதிர்மறைஉபயோகம்.

ப்ரெசெண்ட் கண்டியூனுவஸ் டென்ஸ் இத்தோடு முடியுது.

நாளைக்க்கு அடுத்த டென்ஸ் பார்க்கலாம்.


பாடம் - 5

Present Perfect Tense

இன்னிக்கு Present Perfect Tense – ஐப் பத்திப் பார்க்கலாம்.

இதை விளக்குறது கொஞ்சம் கஷ்டமானது. ஏன்னா, பாக்கிறதுக்கு Simple Past Tense-க்கும்இந்த டென்சுக்கும் வித்தியாசம் அவ்வளவா தெரியாது.

ம்.. என்னாலே முடிஞ்ச அளவு சொல்றேன்.

நிகழ்காலத்தில் நடந்து முடிந்த ஒரு செயலைச் சொல்றதுக்கு இந்த டென்ஸைஉபயோகப்படுத்தணும்.

நான் இந்த வேலையை முடித்து விட்டேன்.

I have completed this job.

அவன் இங்கேயிருந்து கிளம்பி விட்டான்.

He has left from here.

முடிச்சிட்டேன், செஞ்சுட்டேன். பாத்துட்டேன், பேசிட்டேன் – நு சொல்றதையெல்லாம்இந்த டென்ஸை வச்சு சொல்லலாம்.

அப்புறம் இந்த டென்சுக்கான வெர்ப் பார்மட்டைப் பார்ப்போம்:




எதிர்மறை உபயோகத்தைப் பார்க்கலாமா:



இதிலேயும் மிகவும் கவனமா பாக்க வேண்டியது தேர்ட் பேர்சன் சிங்குலர். அதுக்குமட்டும் has. மத்ததுக்கெல்லாம் have.



பாடம் – 6

Present Perfect Continuous Tense


இன்னிக்கு ப்ரெசெண்ட் பெர்ஃபெக்ட் கண்டினியூவஸ் டென்சைப் பத்திப் பார்க்கலாம்.

எனக்குத் தெரிஞ்சு இந்த டென்சு ஒரே ஒரு இடத்தில் மட்டும் தான் உபயோகமாகுது.

அதாவது கொஞ்ச காலமா ஒரு வேலையைச் செஞ்சுக்கிட்டு இருக்கீங்க. இப்பவும் அதையே செய்றீங்க. அதைச் சொல்றதுக்கு இதை உபயோகப் படுத்தலாம்.

He has been living there for five years.

அவன் அங்கே 5 வருஷமா வசிச்சிக்கிட்டு இருக்கான். இப்பவும் அங்கே தான் இருக்கான். இந்த வெளங்காமப் போனா இங்கிலீஷ் ஒரு வரிக்கு இந்த ரெண்டு அர்த்தமும் இருக்கு.

இதிலே பாத்தீங்கன்னா for அப்புறம் since இந்த ரெண்டு வார்த்தை உபயோகத்தில் வரும்.

For போட்டீங்கன்னா எத்தனை வருடம் அல்லது எத்தனை மாதம் நு எழுதணும்.

Since போட்டீங்கன்னா என்னிக்கிலேருந்து நு எழுதணும்.

I have been teaching Hindi for 6 years.
I have been teaching Hindi since 1993

மறுபடியும் சொல்றேன் இதுக்கு அர்த்தம் 6 வருஷமா ஹிந்தி சொல்லிக்குடுத்துக்கிட்டு இருக்காரு. இப்பவும் சொல்லிக்குடுத்துக்கிட்டு இருக்காரு.

இப்போ இந்த டென்சோட வெர்ப் ஃபார்மட்டைப் பாக்கலாம்:





ஃபார்மட்டில் பெரிய வித்தியாசம் எதுவும் இல்லை. மறுபடியும் அந்த தேர்ட் பேர்சன் சிங்குலர். அதுக்கு மட்டும் ஹேஸ். மத்ததுக்கெல்லாம் ஹேவ்.

இந்த டென்சுக்கு எதிர்மறை உபயோகம் இருக்கிற மாதிரி தெரியல. கொஞ்சம் உங்களுக்குள்ளேயே சொல்லிப் பாருங்க நான் 5 வருஷமா பெங்களூரில் வேலை பார்த்துக்கிட்டு இருக்கலை. இப்புடி யாராவது நட் கழண்டு போன ஆளு தான் சொல்வாங்க. அதனால, எதிர்மறை உபயோகம் பார்க்க வேண்டாம்.

அதையும் மீறிச் சொல்லித்தான் ஆகணும்னா, கீழே உள்ளது மாதிரி சொல்லுங்க:




எதுக்காக எதிர்மறைக்கு முக்கியத்துவம் குடுக்குறோம்னா, I have been not going – னு சொன்னீங்கன்னா அது தப்பா. எந்த இடத்தில not ஐ நுழைக்கணும்னு ஒரு ரூல் இருக்கு. அங்க தான் நுழைக்கணும்.

இன்னிக்கு இவ்வளவு தான். நாளைக்கிலேருந்து இறந்த காலத்துக்குப் போயிடலாம்


பாடம் – 7


Simple Past Tense


இந்த டென்ஸ் ரொம்ப முக்கியமானது. ஏன்னா இதை நாம அடிக்கடி உபயோகப்படுத்தப் போறோம்.

கடந்த காலத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியைச் சொல்வதற்கு நாம இந்த டென்ஸை உபயோகிக்கிறோம். அந்த நிகழ்ச்சி சிறிசோ பெருசோ, சிம்ப்பிள் பாஸ்ட் டென்ஸைத் தான் உபயோகிக்கணும்.

சின்ன நிகழ்ச்சி:

The car exploded at 9.30 am yesterday.
She went to the door.
We did not hear the telephone.
Did you see that car?

பெரிய நிகழ்ச்சி:

I lived in Bangkok for 10 years.
The Jurassic period lasted about 62 million years.

நிகழ்ச்சி சிறிசோ, பெருசோ, எத்தனை நிமிடம் நடந்ததோ அல்லது இரண்டு விநாடிகளுக்கு முன் நடந்ததோ, இல்லை லட்சம் ஆண்டுகளுக்கு முன் நடந்ததோ, அதெல்லாம் மேட்டர் இல்லை. சிம்பிள் டென்ஸை எப்போ உபயோகப்படுத்தணும்னா:

நிகழ்ச்சி கடந்த காலத்தில் உள்ளதா இருக்க வேண்டும்.
அது முற்றிலும் முடிந்திருக்க வேண்டும்.
அந்த வாக்கியத்தில் நேரத்தையோ அல்லது நடந்த இடத்தையோ நேராகவோ மறைமுகவோ சொல்லியிருந்தால்.

பொதுவாக, நேரமோ அல்லது இடமோ குறிப்பிடப்பட்டிருந்தால், அங்கே சிம்ப்பிள் பாஸ்ட் டென்ஸ் தான் உபயோகப் படுத்த வேண்டும். ப்ரெசெண்ட் பெர்ஃபெக்ட் டென்ஸை உபயோகப்படுத்தக்கூடாது.

I lived in that house when I was young.
He didn't like the movie.
What did you eat for dinner?
John drove to London on Monday.
Mary did not go to work yesterday.
Did you play tennis last week?
I was at work yesterday.
We were not late (for the train).
Were you angry?


அப்புறம் பாருங்க, கதை சொல்லணும்னா, பாஸ்ட் டென்ஸைத்தான் உபயோகப்படுத்தணும். பாஸ்ட் கண்டியுனுவஸ் டென்ஸ் ஒன்னு இருக்கு அதை வந்து கதையில் உள்ள சீனை செட் பண்றதுக்கு மட்டும் உபயோகிக்கலாம். ஆனால், பெரும்பாலும் சிம்ப்பிள் பாஸ்ட் டென்ஸ் தான் உபயோகிக்கணும்.


"The wind was howling around the hotel and the rain was pouring down. It was cold. The door opened and James Bond entered. He took off his coat, which was very wet, and ordered a drink at the bar. He sat down in the corner of the lounge and quietly drank his..."

ஏதாவது புரிஞ்சதா? புரியாட்டாலும் விடுங்க, நடைமுறையில் வந்திடும். இப்போ ஃபார்மட்டைப் பார்ப்போம்:



நாளைக்கி பாஸ்ட் கண்டினியூவஸ் டென்ஸைப் பாப்போம்.

பாடம் – 8 பாஸ்ட் கண்டினியூவஸ் டென்சுக்குள்ளே போகும் முன் மறுபடியும் இந்த ப்ரெசெண்ட் பெர்ஃபெக்ட் டென்ஸை இன்னொரு முறை ரிவ்யூ பண்ணிக்கலாமா?
ஏன்னா, Present Perfect, Simple Past இந்த டென்சும் ஒன்னு மாதிரியே தெரியும்.


ம்... இப்போ present perfect tense-ன் உபயோகத்தை மறுபடிய் ஒருமுறை பார்ப்போம்.
கடந்த காலத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியின் அனுபவத்தைப் பற்றிச் சொல்ல உபயோகப் படுத்துறோம்.


எப்போ அந்த நிகழ்ச்சி நடந்ததுங்கிறது முக்கியம் இல்லை. நடந்ததா அது தான் முக்கியம்.


I have seen Taj Mahal.


He has lived in Delhi.


We have never eaten mutton.


இந்த மூனு வாக்கியத்திலும் என்ன தெரியுதுன்னா இந்த நிகழ்ச்சிகள் கடந்த காலத்தில் நடந்தது. (கடந்த காலத்தோடு தொடர்பு) இன்னும் என் மூளைக்குள் அந்த நிகழ்ச்சி பற்றிய ஞாபகம் இருக்குது. (இது நிகழ்காலத்தோடு தொடர்பு) அப்புறம் இந்த உதாரணத்தைப் பாருங்க:


I have bought a car – இதுக்கு என்ன அர்த்தம்னா, போன வாரம் எங்கிட்டே கார் இல்லை. இப்போ இருக்கு.


Ram has broken his leg – போன வாரம் கால் நல்லாத்தான் இருந்துச்சு. இப்போ எலும்பு முறிஞ்சிடுச்சு. Has the price gone up? – இதுக்கு முன்னாடி பெட்ரோல் லிட்டர் 50 ரூ இருந்துச்சு. இப்போ 55 ரூபாய். இந்த மாதிரி உபயோகத்துக்கும் ப்ரெசெண்ட் பெர்ஃபெக்ட் டென்ஸ் பயன்படும். ஆனா, கவலைப்பட வேண்டாம். அமெரிக்காக்காரன் இந்த டென்ஸை அவ்வளவா உபயோகிக்கிறது கிடையாது (பிரிட்டிஷ்காரன் உபயோகிக்கிற அளவு). நான் சொல்றதெல்லாம் இந்த ரெண்டு டென்சில் எந்த டென்சு வேண்டுமானாலும் உபயோகிங்க. ஆனா, சரியான ஃபார்மெட் பயன்படுத்துங்க. அம்ம்புட்டுதேன். நாளைக்கி அடுத்த டென்ஸ் பார்ப்போம்.


பாடம் - 9 Past Continuous Tense
கடந்த காலத்தில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் நடந்த நிகழ்ச்சியைச் சொல்வதற்கு நமக்கு பாஸ்ட் கண்டினியூவஸ் டென்ஸ் தேவைப் படுது.
நாம பாஸ்ட் டென்ஸை உபயோகிச்சுப் பேசும்போது, அதைக் கேக்கிறவங்களுக்கு எந்த நேரத்தைப் பற்றிப் பேசுறோம்னு நல்லாத் தெரியும். இப்போ, கீழே உள்ள உதாரணத்தைப் பாருங்க:


* I was working at 10pm last night.


* They were not playing football at 9am this morning.


* What were you doing at 10pm last night?


* What were you doing when he arrived?


* She was cooking when I telephoned her.


* We were having dinner when it started to rain.


* Ram went home early because it was snowing.


கடந்த காலத்தில் நடந்த ஒரு கதையைப் பத்தி (கதைன்னாலே கடந்த காலம் தானே) சொல்லும்போது, காட்சி அமைப்பைப் பற்றி சொல்லணும்னா இந்த டென்ஸை உபயோகப்படுத்தணும். அதாவது அந்த ஆக்‌ஷன் ஆரம்பிச்ச போது பேக்கிரவுண்டு காட்சி எப்படி இருந்தது இதைப் பற்றி சொல்றதுக்கு. எப்பவுமே, கதை பாஸ்ட் கண்டினுயூவஸ் டென்ஸில் ஆரம்பிச்சு, சிம்ப்பிள் பாஸ்ட் டென்சுக்கு மூவ் ஆகிடும்.


இந்த உதாரணத்தைப் பாருங்க:


“James Bond was driving through town. It was raining. The wind was blowing hard. Nobody was walking in the streets. Suddenly, Bond saw the killer in a telephone box..."


ஒரு நீளமான செயல் நடந்துக்கிட்டிருந்துச்சு. அதுக்கு இடையில் ஒரு சின்ன செயல் நடந்துச்சு. இந்த ரெண்டையும் சேர்த்து இங்கிலீஷில் சொல்லும்போது நீளமானதுக்கு கண்டினியூவஸ் டென்சையும் சின்ன செயலுக்கு சிம்ப்பிள் பாஸ்ட் டென்சையும் உபயோகிக்கணும்.


I was watching TV at 8pm. -


இது நீளமான ஆக்‌ஷன் - சில மணி நேரம் எடுக்கக்கூடியது


You telephoned at 8pm. - இது சின்ன ஆக்‌ஷன் - சில நிமிடங்கள் தான். இந்த ரெண்டையும் when ஐ வச்சு சேர்த்தோம்னா எப்படி வருது பாருங்க. I was watching TV when you telephoned. when you telephoned - ங்கிறது “8 மணி” –ங்கிறதை இன்னொரு விதமா குறிப்பிடுறது. நாலு ஸ்டைலில் இந்த ரெண்டு ஆக்‌ஷனையும் சேர்க்கலாம். பாருங்க:


I was walking past the car when it exploded.When the car exploded I was walking past it.The car exploded while I was walking past it.While I was walking past the car it exploded. walking past the car - சில நொடிகள் நடக்கும் நிகழ்ச்சி.


exploded - சில மில்லி நொடிகள் நடக்கும் நிகழ்ச்சி. இப்போ இந்த டென்சோட ஃபார்மட்டைப் பாப்போம்:


இன்னிக்கு அவ்வளவு தான். நாளைக்கு அடுத்த டென்சைப் பார்க்கலாம்.



பாடம் – 10

Past Perfect Tense

இன்னிக்கு நாம பாக்கப் போற டென்ஸ் பாஸ்ட் ஃபெர்பெக்ட் டென்ஸ். இது ரொம்ப சுலபமான டென்ஸ். அதாவது கடந்த காலத்துக்குள்ள ஒரு கடந்த காலத்தைச் சொல்றதுக்கு இந்த டென்ஸைப் பயன்படுத்தலாம். ரொம்ப சுலபம். இல்லீங்களா…?

இப்போ ஒரு உதாரணத்தைப் பார்ப்போம்:

The train had left when we arrived.

நாங்க வந்த பொழுது டிரைய்ன் கிளம்பி போயிருந்துச்சு.

டிரைய்ன் கிளம்பினது – முதல்ல நடந்தது – இதுக்கு பாஸ்ட் பெர்ஃபெக்ட்.
நாம வந்தது – ரெண்டாவது நடந்தது – இதுக்கு சிம்ப்பிள் பாஸ்ட் டென்ஸ்.

இன்னும் சில உதாரணங்களைப் பார்ப்போம்:

I wasn't hungry. I had just eaten.
They were hungry. They had not eaten for five hours.
I didn't know who he was. I had never seen him before.
"Mary wasn't at home when I arrived."
"Really? Where had she gone?"

சில சமயம் பாஸ்ட் பெர்ஃபெக்ட் டென்ஸை ப்ரெசெண்ட் பெர்ஃபெக்ட் டென்ஸ் மாதிரி நினைச்சுக்கலாம். என்ன அது நிகழ் காலத்தில் நடந்தது. இது கடந்த காலத்தில் நடந்தது. அவ்ளோ தான் வித்தியாசம்.
உதாரணத்துக்கு நீங்க 9.15-க்கு ஸ்டேஷனுக்கு வர்றீங்க. ஸ்டேஷன் மாஸ்டர் உங்க கிட்டே சொல்றாரு:
"You are too late. The train has left."
இது ப்ரெஸெண்ட் பெர்ஃபெக்ட். இப்போ இதே விஷயத்தை நீங்க அப்புறமா உங்க நண்பர்கள் கிட்டே சொன்னீங்கன்னா எப்படி சொல்வீங்க:
"We were too late. The train had left."


இது பாஸ்ட் பெர்ஃபெக்ட்.
அப்புறம் said, told, asked, thought, wondered இந்த வார்த்தைகளுக்கு அப்புறம் வருகிற வாக்கியங்களில் (அதுக்கு ஆங்கிலத்தில் Reported Speech – னு பேர் – இதைப் பத்தி நம்ம நேர்கூற்று – அயல் கூற்று வகுப்பில் (அதாவது direct to indirect speech) பார்ப்போம். இப்போ இந்த உதாரணங்களைப் பாருங்க:
He told us that the train had left.
I thought I had met her before, but I was wrong.
He explained that he had closed the window because of the rain.
I wondered if I had been there before.
I asked them why they had not finished.


இப்போ இந்த டென்சோட ஃபார்மட்டைப் பாக்கலாம்:





இன்னிக்கு இவ்வளவு தாங்க. நாளைக்கு அடுத்த டென்சைப் பார்க்கலாம்.

0 comments:

Post a Comment

நானுங்கோ !!!

My photo
நான் அன்பாக, பாசமாக, கோபமாக,நட்பாக, அதிகாரமாக, அலட்சியமாக,பணிவாக, குறும்பாக பேசியிருக்கிறேன்.ஆனால் இந்த 24 ஆண்டுகளில் நான் நானாகவே இருக்கிறேன்...!

வாங்க பழகலாம்

திருக்குறள்

காமத்துப்பால்;கற்பியல்;நெஞ்சோடுபுலத்தல்:

1298-எள்ளின் இளிவாமென் றெண்ணி அவர்திறம்
உள்ளும் உயிர்க்காதல் நெஞ்சு.

பிரிந்து சென்ற காதலரை இகழ்வது தனக்கே இழிவாகும் என்பதால், அவருடைய பெருமையைப் பற்றியே என்னுயிர்க் காதல் நெஞ்சம் எண்ணிக் கொண்டிருக்கும்.

அமராவதி ஆத்தங்கரையின் விளக்கம் :

நீ பிரிந்தபிறகும் கூட
உன்னை வெறுக்கத் தோன்றவில்லை என் இதயத்துக்கு…
என் இதயம் நேசித்தவளென்பதால் மட்டுமல்ல
என் இதயத்தை நேசித்தவளென்பதாலும்!


பிரிந்து சென்ற காதலரை இகழ்வது தனக்கே இழிவாகும் என்பதால், அவருடைய பெருமையைப் பற்றியே என்னுயிர்க் காதல் நெஞ்சம் எண்ணிக் கொண்டிருக்கும் .

எனக்குப்பிடித்தவையை இணையத்தில் பிடித்தவை !

வருந்துகிறேன் !!


என் வாழ்நாள் குறைகிறது
என்பதற்காக வருந்தவில்லை...
உன் நினைவில்
வாழும் நாள் குறைகிறது
என்பதற்காக வருந்துகிறேன்... !!!


நன்றி: வாணி நாதன்

நினைவுகள்

குருதிக் குழாய்களுக்குள்
குறுக்கு நெடுக்குமாய்
பாய்ந்துக் கொண்டிருக்கிறது
இதயத்திற்குள் நிரம்பி வழிந்த
உன் நினைவுகள்...!

நன்றி : இமலாதித்தன்


நீ

சுற்றி ஒருமுறை
பார்த்துவிட்டு
உதடு குவித்து
நீ தரும் முத்தத்தில்
பாதியை அப்படியே
அள்ளிக்கொண்டு
போகிறது காற்று....

நன்றி : மழைக்காதலன்

நெஞ்சோடு புலத்தல்

உனக்குத் துணையாக உன்மனம்…
உன்மனதுக்குத் துணையாக என்மனம்…
எனக்குத் துணையாக…
நான் மட்டும் !


நன்றி : ஆத்தங்கரை


Search This Blog

தெரிஞ்சிக்க ! பூமியிலிருந்து சூரியன் சராசரியாக 14,88,00,000 கி.மீ (93,000,000 மைல்) தூரத்திலிருக்கிறது. சூரியனின் ஒளியானது நமது பூமியை வந்தடைய சராசரியாக 8.33 நிமிடம் எடுத்துக்கொள்கிறது. எப்படி கணக்கிட்டார்கள் : 93,000,000 மைல் தூரம் வகுத்தல் 2,97,600 ஓளியின் வேகம் சூரியனுக்கும் பூமிக்கும் இடையேயான இடைவெளி / ஓளியின் வேகம் = 148800000 / 2,97,600 = 500 500 செகெண்ட்ஸ் வகுத்தல் ஒரு நிமிடற்க்கு 60 செகெண்ட்ஸ் 500/60 = 8.33 சூரிய ஒளி பூமியை வந்தடைய எடுத்துக்கொள்ளும் நேரம்

சிந்தனைக்கு

அன்பை விதைப்பவர்கள் நிம்மதியை அறுவடை செய்பவர் .

ஒவ்வொரு முடிவும் மற்ற ஒன்றுக்கான தொடக்கம் .

கல்வி, அனுபவம் , ஜாபக சக்தி இம்மூன்றையும் உன்னிடமிருந்து யாரும் பிரிக்கமுடியாது .

விரும்பியது கிடைக்கவில்லை என்று வருந்தாதே . கிடைத்துள்ளதை விரும்பு .

அருமை அறியாதவன் வீட்டுக்கு போனால் பெருமை குறைந்து போகும் .

எனக்கு பிடிச்ச பாடல் வரிகள் !

மிக மிக கூர்மையாய் என்னை ரசித்தது உன் கண்கள்தான்..
மிருதுவாய் பேசி என்னுள் வாசித்தது உன் வார்த்தை தான்...
கண்களை காணவே இமைகளே மறுப்பதா..

(தாம் தூம் )


"நான்கு கண்ணாடி சுவர்களுக்குள்ளே நானும்மெழுகு வர்த்தியும்


தனிமை தனிமையோ கொடுமை கொடுமையோ "

(சில்லுனு ஒரு காதல்)



"உன் சின்ன இதழ் முத்தம் தின்னாமல்

இந்த ஜன்மம் வீணென்று போவேனோ ??"

(பூவெல்லாம் உன் வாசம்)



"படுத்தும் பொசுக்குனு தூங்கும் பய

பித்துக்குளி போல இப்ப முழிக்குரானே

வெள்ளன எந்திருச்சு ஓடும் பய

சுள்ளுன்னு சூரியன பாக்குறேனே



அவன் பார்த்ததுமே நான் பூத்துவிட்டேன்

அந்த ஒரு நொடியை நெஞ்சில்ஒளித்துக்கொண்டேன்

நான் குழந்தை என்றே நேற்று நினைத்திருந்தேன்

அவன் கண்களிலே என் வயதறிந்தேன்"



(காதல்)



"பேச எண்ணி சில நாள் அருகே வருவேன்

பின்பு பார்வை போதும் என நான் நினைத்தேநகர்வேன் ஏமாற்றி..



இரவும் அல்லாத

பகலும் அல்லாத

பொழுதுகள்

உன்னோடு கரையுமா??!!



கரைகள் அண்டாத

காற்றும் தீண்டாத

மனதுக்குள் எப்போது நுழைந்த்திட்டாய்??!

தடையில்லை சாவிலும் உன்னோடு வர ..."


(சுப்பிரமணியபுரம்)

Elvis Presley's Graceland

இந்த ப்ளோக்’ல எழுதியது !

நீயில்லாத நாட்களில் வர்ணங்களும் வர்ணமற்றவையாக !!!

நீயில்லாத நாட்களில் வர்ணங்களும் வர்ணமற்றவையாக !!!

வாங்க, வாங்க, ஏன் இவ்ளோ லேட்டா வாரிங்க ?