இயற்கை எனது நண்பன், வாழ்க்கை எனது தத்துவ ஆசிரியன், வரலாறு எனது வழிகாட்டி - தமிழீழ தேசிய தலைவர் யோசிப்பதானால் நிதானமாக யோசியுங்கள், செயல்படுவதானால் உறுதியுடன் செயல்படுங்கள், விட்டுக் கொடுப்பதனால் பெருந்தன்மையுடன் விட்டுக் கொடுங்கள். எதிர்ப்பதனால் துணிந்து எதிர்த்து நில்லுங்கள்

என்னுடைய நான்,

உலகம் பிறந்தது எனக்காக, ஓடும் நதிகளும் எனக்காக, இன்னும் உலகின் அனைத்து ஏற்பாடுகளும் எனக்காக, ஆனால் நான் யாருக்காக ?

என்னை பற்றி !!!!!!


1. உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது?

தங்கமாரியப்பன் , அது ஒரு பெரிய கதை , அத கேட்டு சொல்லுறேன்.

உங்களுக்கு இந்தப் பெயர் பிடிக்குமா?

ரொம்ப பிடிக்கும் , ஆனா கோல்ட் மாரி ரொம்ப ரொம்ப பிடிக்கும் !

2. கடைசியாக அழுதது எப்பொழுது?

நண்பனையும் நினைத்து கண் கலக்குவது உண்டு ! (அழுவதால் ஒன்னும் குறையாது அப்படின்னு நினைப்பவன் )


3. உங்களுடைய கையெழுத்து உங்களுக்குப் பிடிக்குமா?

பிடிக்குமாறு கையெழுத்து போட விருப்பம் !

4. பிடித்த மதிய உணவு என்ன?

பசிக்கு சாப்பிடுபவன் நான் ! ருசிக்கு சாப்பிடுபவனில்ல !

5. நீங்கள் பார்த்தவுடன் யாருடனாவது உடனே நட்புக் கொண்டாடக் கூடியவரா?

பொதுவா கிடையாது , ஆனா இதுவரைக்கும் இல்ல !

6. கடலில் குளிக்கப் பிடிக்குமா? அருவியில் குளிக்கப் பிடிக்குமா?

நான் கடலில் குளித்து விட்டு அதுக்கப்புறம் அருவில் குளிப்பேன் வாழ்கையிளும் அப்படித்தான் !

7. முதலில் ஒருவரைப் பார்க்கும்போது எதனைக் கவனிப்பீர்கள்?

ஆணாக இருந்தால் கண்.
பெண்ணாக இருந்தா முகம் (சிரிப்பு) இது அவருடைய குணாதிசையங்கலையும் பிரதிபலிக்கும்


8. உங்களிடம் உங்களுக்குப் பிடித்த விடயம் என்ன? பிடிக்காத விடயம் என்ன?

பிடித்தது :
எப்போதும் புன்னகையுடன் இருப்பது.... யாரையும் காயப்படுத்தும் நோக்கத்தோடு பேசாமல் இருப்பது ......

பிடிக்காதது:
எல்லாத்தையும் எல்லோரையும் எல்லாத்துக்கும் எளிதில் நம்பிவிடுவது !

9. உங்கள் பாதியிடம் உங்களுக்குப் பிடித்த, பிடிக்காத விடயங்கள் என்ன?

என்னுடைய பாதி இதுவரை பார்க்கவில்லை ,ஆனாலும் அவள் என்னை போல் இல்லாட்டியும் ஓரளவுக்கு இருந்தால் போதுமானது !பிறகு நான் ஒன்னும் டாடா பேமிலியிலயோ இல்லை தமன்னா பேமிலியிலயோ பொண்ணு வேணுமின்னு கேட்கலை. போனா வந்தா கறி சோறு ஆக்கிப்போட்டு, தீபாவளி பொங்கலுக்கு புள்ள குட்டிகளுக்கு சட்டை எடுத்துக்குடுக்குற அளவுக்கு காசு இருக்குறவங்க இருந்தா போதும். நின்னா நெத்தியில முத்தம் குடுக்குற உயரம், துணிக்கடைக்கு போனா கஷ்டமில்லாம சேலை எடுக்குற மாதிரி கலர், தூங்கி எந்திரிச்சுவந்தாலும் சகிக்கிற மாதிரி முகம் இருந்தா போதும்னு பார்த்தா ! இது போதுமப்பா


10. யார் பக்கத்தில் இல்லாமல் இருப்பதற்காக வருந்துகிறீர்கள்?

வருத்தம்படும் அளவிற்கு பிரிவு ஏதும் இல்லை


11. இதை எழுதும்போது என்ன வண்ண ஆடை அணிந்திருக்கிறீர்கள்?

ஊதா நிற கால்சட்டையும் ,ஊதா நிற டி-சட்டும்-சீறுடை


12. என்ன பாட்டு கேட்டுக்கொண்டு இருக்கிறீர்கள்?


எதோ நினைவுகள் கனவுகள் மனதிலே மலருதே !
காவேரி உறறாகவே! காற்றோடு காறறகவே ! தினம் காண்பது தானே ! எதோ -------- நினைவுகள் (பெண் ) படம்-- அகல் விழக்கு

13. வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக மாற உங்களுக்கு ஆசை?

ஊதா


14. பிடித்த மணம்?

கடுகு தாலிக்கும் பொது ஒருவாசம் வருமே அது ! நாத்து நடுவதுக்கு ஒரு நாளுக்கு முன் வருமே ஒரு தொளி(மண்) வாசம்


15. பிடித்த விளையாட்டு?

கிரிக்கெட் !

16. கண்ணாடி அணிபவரா?

ஆமாம் , வெயில்காலங்களில் மட்டும் ஒன்லி கூலக்ஸ் ( கண்ணாடி நிறுவனத்தின் பெயர்)


17. எப்படிப்பட்ட திரைப்படம் பிடிக்கும்?

ஜே ஜே மாதிரியான படங்கள் பிடிக்கும்

18. கடைசியாகப் பார்த்த படம்?

பொக்கிஷம்

19. பிடித்த பருவகாலம் எது?

மழைக்காலம்

20. இப்பொழுது படித்துக்கொண்டு இருக்கும் புத்தகம்?

ஏதாவது இருந்த அனுப்புங்க,படிக்கனும்னு ஆசைதான் !!


21. உங்கள் டெக்ஸ்-டொப்பில் இருக்கும் படத்தை எத்தனை நாளைக்கு ஒரு தடவை மாற்றுவீர்கள்?

எனக்கு பிடிக்கும் அடுத்த படம் கிடைக்கும் வரை !

22. உங்களுக்குப் பிடித்த சத்தம்? பிடிக்காத சத்தம்?

பிடித்த சத்தம் -
பத்து பேறுகூட சேந்து பேசும் பொது ஒரு சத்தம் வருமே அது ,எதாவது ஒரு மலை மீது தனியாக ஒரு மாலைப்பொழுதில் உக்காந்து இருக்கும் பொது ஒரு மெல்லிய இதமான காற்றோடு ஒரு நிசப்த்தம் வருமே!! ஒ மை காட்(சொல்ல முடியாது உக்காந்து பாருங்க) !

பிடிக்காத சத்தம் :

பசிக்குதுன்னு யாராவது கேக்கும் தானம்,

23. வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிகபட்சத் தொலைவு?

ஆறு மணி நேரம்!(விமானத்தில்) ஸ்ரீலங்கா ,துபாய் வழியாக ஈராக் வரை வந்துள்ளேன் !

24. உங்களுக்கு ஏதாவது தனித்திறமை இருக்கிறதா?

கவிதை நிறைய எழுதுவேன் என்மனதில்லேயே ,பின்ன கொஞ்சம் காமடியா பேசுவதாக நினைத்து கொள்ளவேன் ! வாழ்வில் முன்னால் நடப்பதை வைத்து பின்னால் என்ன நடக்க போகிறது என்று கணிக்க தெரியும்(என் வாழ்வில் மட்டும் ), முன்னர் நடந்ததை மறக்காமல் பின்னால் நடப்பதோடு ஒப்பிட்டு பேசுவது !

25. உங்களால் ஏற்றுக்கொள்ள முடியாத விடயம்?

வறுமை !

26. உங்களுக்கு உள்ளே இருக்கும் ஒரு சாத்தான்?

அடுத்தவர்கள் மனதை புண்படுத்தாமல் கேள்வி கேட்பது ? எனக்கு தெரிந்த விஷயத்தை நேரடியாக கேட்பது ?

27. உங்களுக்குப் பிடித்த சுற்றுலாத் தலம்?

குற்றாலம் , அப்புறம் தாஜ்மகால்

28. எப்படி இருக்கவேண்டுமென்று ஆசை?

முடிந்த உதவி முடியாதவர்களுக்கு செய்ய ஆசை , நண்பர்களோடு இருக்க ஆசை (என்னோட இருந்தாலே ரொம்ப பேர் சந்தோசமாகத்தான் இருப்பார்கள்)


29. வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்கள்.


வாழ்வு- மனிதன் கிடைக்காத ஒன்றை தேடாமல் கிடைத்த ஒன்றை பாதுகாக்க கத்துக்க வேண்டும்

6 comments:

ஓம் ஸ்ரீ July 8, 2009 at 10:21 PM  

என்னோட ப்ளாக்ல வந்து நீ பதிவு போட்டாட்டியும் நான் போட்டிருக்கேன்னா என்னோட பெருந்தன்மைதான் காரணம்னு நீ புரிஞ்சிக்கனும்

கோல்ட்மாரி July 8, 2009 at 10:49 PM  

உங்க பெருந்தன்மைய புரிச்சிக்கிட்டேன், இந்த வரே உங்க இலைக்கு

s.k.natarajan. July 14, 2009 at 6:46 AM  

very good

கோல்ட்மாரி July 14, 2009 at 11:27 AM  

nanri thala.....

Anonymous August 5, 2009 at 3:06 AM  

கோல்ட் மாரி அருமையா பதில் சொல்லிருககீங்க!உங்களை இந்த அளவுக்கு குடைந்து பேட்டியெடுத்தது யாரோ?(சிறு சிறு தவறுகள் உள்ளன நண்பா!)

தங்கள் அன்பு நாடும்:
நினா.கண்ணன்.

கோல்ட்மாரி September 15, 2009 at 6:19 AM  

சரி நான் திருத்துறேன் நண்பா !

Post a Comment

நானுங்கோ !!!

My photo
நான் அன்பாக, பாசமாக, கோபமாக,நட்பாக, அதிகாரமாக, அலட்சியமாக,பணிவாக, குறும்பாக பேசியிருக்கிறேன்.ஆனால் இந்த 24 ஆண்டுகளில் நான் நானாகவே இருக்கிறேன்...!

வாங்க பழகலாம்

திருக்குறள்

காமத்துப்பால்;கற்பியல்;நெஞ்சோடுபுலத்தல்:

1298-எள்ளின் இளிவாமென் றெண்ணி அவர்திறம்
உள்ளும் உயிர்க்காதல் நெஞ்சு.

பிரிந்து சென்ற காதலரை இகழ்வது தனக்கே இழிவாகும் என்பதால், அவருடைய பெருமையைப் பற்றியே என்னுயிர்க் காதல் நெஞ்சம் எண்ணிக் கொண்டிருக்கும்.

அமராவதி ஆத்தங்கரையின் விளக்கம் :

நீ பிரிந்தபிறகும் கூட
உன்னை வெறுக்கத் தோன்றவில்லை என் இதயத்துக்கு…
என் இதயம் நேசித்தவளென்பதால் மட்டுமல்ல
என் இதயத்தை நேசித்தவளென்பதாலும்!


பிரிந்து சென்ற காதலரை இகழ்வது தனக்கே இழிவாகும் என்பதால், அவருடைய பெருமையைப் பற்றியே என்னுயிர்க் காதல் நெஞ்சம் எண்ணிக் கொண்டிருக்கும் .

எனக்குப்பிடித்தவையை இணையத்தில் பிடித்தவை !

வருந்துகிறேன் !!


என் வாழ்நாள் குறைகிறது
என்பதற்காக வருந்தவில்லை...
உன் நினைவில்
வாழும் நாள் குறைகிறது
என்பதற்காக வருந்துகிறேன்... !!!


நன்றி: வாணி நாதன்

நினைவுகள்

குருதிக் குழாய்களுக்குள்
குறுக்கு நெடுக்குமாய்
பாய்ந்துக் கொண்டிருக்கிறது
இதயத்திற்குள் நிரம்பி வழிந்த
உன் நினைவுகள்...!

நன்றி : இமலாதித்தன்


நீ

சுற்றி ஒருமுறை
பார்த்துவிட்டு
உதடு குவித்து
நீ தரும் முத்தத்தில்
பாதியை அப்படியே
அள்ளிக்கொண்டு
போகிறது காற்று....

நன்றி : மழைக்காதலன்

நெஞ்சோடு புலத்தல்

உனக்குத் துணையாக உன்மனம்…
உன்மனதுக்குத் துணையாக என்மனம்…
எனக்குத் துணையாக…
நான் மட்டும் !


நன்றி : ஆத்தங்கரை


Search This Blog

தெரிஞ்சிக்க ! பூமியிலிருந்து சூரியன் சராசரியாக 14,88,00,000 கி.மீ (93,000,000 மைல்) தூரத்திலிருக்கிறது. சூரியனின் ஒளியானது நமது பூமியை வந்தடைய சராசரியாக 8.33 நிமிடம் எடுத்துக்கொள்கிறது. எப்படி கணக்கிட்டார்கள் : 93,000,000 மைல் தூரம் வகுத்தல் 2,97,600 ஓளியின் வேகம் சூரியனுக்கும் பூமிக்கும் இடையேயான இடைவெளி / ஓளியின் வேகம் = 148800000 / 2,97,600 = 500 500 செகெண்ட்ஸ் வகுத்தல் ஒரு நிமிடற்க்கு 60 செகெண்ட்ஸ் 500/60 = 8.33 சூரிய ஒளி பூமியை வந்தடைய எடுத்துக்கொள்ளும் நேரம்

சிந்தனைக்கு

அன்பை விதைப்பவர்கள் நிம்மதியை அறுவடை செய்பவர் .

ஒவ்வொரு முடிவும் மற்ற ஒன்றுக்கான தொடக்கம் .

கல்வி, அனுபவம் , ஜாபக சக்தி இம்மூன்றையும் உன்னிடமிருந்து யாரும் பிரிக்கமுடியாது .

விரும்பியது கிடைக்கவில்லை என்று வருந்தாதே . கிடைத்துள்ளதை விரும்பு .

அருமை அறியாதவன் வீட்டுக்கு போனால் பெருமை குறைந்து போகும் .

எனக்கு பிடிச்ச பாடல் வரிகள் !

மிக மிக கூர்மையாய் என்னை ரசித்தது உன் கண்கள்தான்..
மிருதுவாய் பேசி என்னுள் வாசித்தது உன் வார்த்தை தான்...
கண்களை காணவே இமைகளே மறுப்பதா..

(தாம் தூம் )


"நான்கு கண்ணாடி சுவர்களுக்குள்ளே நானும்மெழுகு வர்த்தியும்


தனிமை தனிமையோ கொடுமை கொடுமையோ "

(சில்லுனு ஒரு காதல்)



"உன் சின்ன இதழ் முத்தம் தின்னாமல்

இந்த ஜன்மம் வீணென்று போவேனோ ??"

(பூவெல்லாம் உன் வாசம்)



"படுத்தும் பொசுக்குனு தூங்கும் பய

பித்துக்குளி போல இப்ப முழிக்குரானே

வெள்ளன எந்திருச்சு ஓடும் பய

சுள்ளுன்னு சூரியன பாக்குறேனே



அவன் பார்த்ததுமே நான் பூத்துவிட்டேன்

அந்த ஒரு நொடியை நெஞ்சில்ஒளித்துக்கொண்டேன்

நான் குழந்தை என்றே நேற்று நினைத்திருந்தேன்

அவன் கண்களிலே என் வயதறிந்தேன்"



(காதல்)



"பேச எண்ணி சில நாள் அருகே வருவேன்

பின்பு பார்வை போதும் என நான் நினைத்தேநகர்வேன் ஏமாற்றி..



இரவும் அல்லாத

பகலும் அல்லாத

பொழுதுகள்

உன்னோடு கரையுமா??!!



கரைகள் அண்டாத

காற்றும் தீண்டாத

மனதுக்குள் எப்போது நுழைந்த்திட்டாய்??!

தடையில்லை சாவிலும் உன்னோடு வர ..."


(சுப்பிரமணியபுரம்)

Elvis Presley's Graceland

இந்த ப்ளோக்’ல எழுதியது !

நீயில்லாத நாட்களில் வர்ணங்களும் வர்ணமற்றவையாக !!!

நீயில்லாத நாட்களில் வர்ணங்களும் வர்ணமற்றவையாக !!!

வாங்க, வாங்க, ஏன் இவ்ளோ லேட்டா வாரிங்க ?