இயற்கை எனது நண்பன், வாழ்க்கை எனது தத்துவ ஆசிரியன், வரலாறு எனது வழிகாட்டி - தமிழீழ தேசிய தலைவர் யோசிப்பதானால் நிதானமாக யோசியுங்கள், செயல்படுவதானால் உறுதியுடன் செயல்படுங்கள், விட்டுக் கொடுப்பதனால் பெருந்தன்மையுடன் விட்டுக் கொடுங்கள். எதிர்ப்பதனால் துணிந்து எதிர்த்து நில்லுங்கள்

என்னுடைய நான்,

உலகம் பிறந்தது எனக்காக, ஓடும் நதிகளும் எனக்காக, இன்னும் உலகின் அனைத்து ஏற்பாடுகளும் எனக்காக, ஆனால் நான் யாருக்காக ?

எதோ சொல்லனும்னு தோணுச்சி சில கருத்துக்கள் !


இன்றைய காலக்கட்டத்தில் நகைக்கக் கூட நேரமின்றித் தவிக்கும் அன்பர்களுக்கு, நிறையா ஆணி எடுக்கும் அன்பர்களுக்கும் ,வாழ்க்கையில் சிரிக்க கூட நேரம் ஒதுக்காமல் இருக்கும் அன்பர்களுக்கும் , இணையத்தில் நண்பர் குழுமம் ஏற்ப்படுத்தி மகிழும் சிறு சேதிகள் , படிக்கும் கணங்களை மகிழ்ச்சிக்குள்ளாக்குகிறது என்றால் அது மிகையில்லை.



நம்மை விரும்பியவர்களை ஏமாற்றாதே! ஏமாற்றியவர்களை விரும்பாதே!



துணிவுடன் எதையும் செய், அதன் தன்மையில் புது அர்த்தங்கள் மலரும்.


எப்பொழுதும் நீ பேசாது, எந்தப் பெண்ணையும் நிறைய பேச அனுமதிக்காதே! பிற்காலத்தில் , நீ தன்னந்தனியே பேச நேரிடும்.


நர்ஸ் நம்ம கையப் புடிச்சா அது 'செக்கப்' , நாம நர்ஸ் கையைப் புடிச்சா அது 'பிக்கப்' !




ஒரு நல்ல நண்பன் உன் முதல் கண்ணீர் துளியைப் பார்ப்பவன்! இரண்டாம் கண்ணீர்துளியை கையில் ஏந்தி, மூன்றாம் துளியை நிறுத்தி, நாலாம் துளியை சிரிப்புடன் வர வைப்பவன்.


உனக்கு நீ நல்லவனா இருக்கும் வரை மற்றவர்களும் உனக்கு நல்லவர்களாகவே தெரிவார்கள் ..



நம் எல்லோருக்கும் சரிசமமான திறமைகள் இருப்பதில்லை. ஆனால், எல்லோருக்கும் திறமையை வளர்த்துக் கொள்ள சரிசமமான வாய்ப்புகள் அளிக்கிப்படுகிறது.


வாய்ப்புகள் சில முறை மட்டுமே கிட்டும் , அதனை அப்போதே பயன் படுத்த தவற வேண்டாம்


முயற்சிகள் தோல்வியடையலாம். முயற்சி செய்ய தோற்று விடாதே!


மேடு பள்ளமில்லாத பாதைகள் நல்ல ஓட்டுநரை உருவாக்குவதில்லை! அலையில்லாத கடல் நல்ல மாலுமியை உருவாக்குவதில்லை! மேகங்கள் இல்லாத வானம் நல்ல வானூர்தி வல்லுநரை உருவாக்குவதில்லை! தோல்விகள் இல்லாத வாழ்க்கை நல்ல மனிதரை உருவாக்குவதில்லை!


தோல்வியை கண்டு துவண்டு விடாதே , துணிவுடன் எதிர் கொள்



வெற்றிக்கனவுகள் என்பது தூங்கும் போது வருவதில்லை. அவை நம்மை தூங்கவிடாது செய்வது.




ஆறு போகும் பாதையில் போக நீந்தாதிரு! நீ போகும் பாதைக்குச் செல்ல நீ நீந்தியாக வேண்டும் !


எதிரியை எதிரியின் வழியில் சென்று அடிக்க வேண்டும் ...


ஒரு பழத்தில் உள்ள விதைகளை நீ எண்ணிவிடலாம்! ஆனால், அவ்விதைகளில் எத்தனை விருட்சங்கள் உள்ளன என்பது கடவுளுக்கு மட்டுமே தெரியும். விதைகளை எண்ணுவதை விட்டுவிட்டு, விதைகளை விதைக்கப் பழகு!




நீ வெற்றி பெற்றால் யாரிடமும் விளக்கத் தேவையில்லை! ஆனால், தோல்வியுற்றால் யாரும் விளங்கக் காத்திருப்பதுமில்லை!


வேலை செய்யும் இடத்தில் நண்பர்கள் வைத்துக்கொள்ளாதே , உன்னுடைய வேலைய திறம்பட செய்ய முடியாது ..


நீ சிக்கலில் மாட்டித் தவிக்கும் போது அறிவு சொல்றதைக் கேட்காதே! அது சரி இருந்தாதானே கேட்பாய்!?



உங்களுக்கு ஒரு தகவல் :

உங்களுக்கு புலி நகம் வேணும்னா சனிக்கிழமை வீட்டுக்கு வாங்க! ஏன்னா அன்னைக்குத் தான் எப்பவும் நகம் வெட்டுவேன் !!!!


ஹி ஹி ஹி ஹி ஹி புரியுது நீங்க முறைக்கிறது !

0 comments:

Post a Comment

நானுங்கோ !!!

My photo
நான் அன்பாக, பாசமாக, கோபமாக,நட்பாக, அதிகாரமாக, அலட்சியமாக,பணிவாக, குறும்பாக பேசியிருக்கிறேன்.ஆனால் இந்த 24 ஆண்டுகளில் நான் நானாகவே இருக்கிறேன்...!

வாங்க பழகலாம்

திருக்குறள்

காமத்துப்பால்;கற்பியல்;நெஞ்சோடுபுலத்தல்:

1298-எள்ளின் இளிவாமென் றெண்ணி அவர்திறம்
உள்ளும் உயிர்க்காதல் நெஞ்சு.

பிரிந்து சென்ற காதலரை இகழ்வது தனக்கே இழிவாகும் என்பதால், அவருடைய பெருமையைப் பற்றியே என்னுயிர்க் காதல் நெஞ்சம் எண்ணிக் கொண்டிருக்கும்.

அமராவதி ஆத்தங்கரையின் விளக்கம் :

நீ பிரிந்தபிறகும் கூட
உன்னை வெறுக்கத் தோன்றவில்லை என் இதயத்துக்கு…
என் இதயம் நேசித்தவளென்பதால் மட்டுமல்ல
என் இதயத்தை நேசித்தவளென்பதாலும்!


பிரிந்து சென்ற காதலரை இகழ்வது தனக்கே இழிவாகும் என்பதால், அவருடைய பெருமையைப் பற்றியே என்னுயிர்க் காதல் நெஞ்சம் எண்ணிக் கொண்டிருக்கும் .

எனக்குப்பிடித்தவையை இணையத்தில் பிடித்தவை !

வருந்துகிறேன் !!


என் வாழ்நாள் குறைகிறது
என்பதற்காக வருந்தவில்லை...
உன் நினைவில்
வாழும் நாள் குறைகிறது
என்பதற்காக வருந்துகிறேன்... !!!


நன்றி: வாணி நாதன்

நினைவுகள்

குருதிக் குழாய்களுக்குள்
குறுக்கு நெடுக்குமாய்
பாய்ந்துக் கொண்டிருக்கிறது
இதயத்திற்குள் நிரம்பி வழிந்த
உன் நினைவுகள்...!

நன்றி : இமலாதித்தன்


நீ

சுற்றி ஒருமுறை
பார்த்துவிட்டு
உதடு குவித்து
நீ தரும் முத்தத்தில்
பாதியை அப்படியே
அள்ளிக்கொண்டு
போகிறது காற்று....

நன்றி : மழைக்காதலன்

நெஞ்சோடு புலத்தல்

உனக்குத் துணையாக உன்மனம்…
உன்மனதுக்குத் துணையாக என்மனம்…
எனக்குத் துணையாக…
நான் மட்டும் !


நன்றி : ஆத்தங்கரை


Search This Blog

தெரிஞ்சிக்க ! பூமியிலிருந்து சூரியன் சராசரியாக 14,88,00,000 கி.மீ (93,000,000 மைல்) தூரத்திலிருக்கிறது. சூரியனின் ஒளியானது நமது பூமியை வந்தடைய சராசரியாக 8.33 நிமிடம் எடுத்துக்கொள்கிறது. எப்படி கணக்கிட்டார்கள் : 93,000,000 மைல் தூரம் வகுத்தல் 2,97,600 ஓளியின் வேகம் சூரியனுக்கும் பூமிக்கும் இடையேயான இடைவெளி / ஓளியின் வேகம் = 148800000 / 2,97,600 = 500 500 செகெண்ட்ஸ் வகுத்தல் ஒரு நிமிடற்க்கு 60 செகெண்ட்ஸ் 500/60 = 8.33 சூரிய ஒளி பூமியை வந்தடைய எடுத்துக்கொள்ளும் நேரம்

சிந்தனைக்கு

அன்பை விதைப்பவர்கள் நிம்மதியை அறுவடை செய்பவர் .

ஒவ்வொரு முடிவும் மற்ற ஒன்றுக்கான தொடக்கம் .

கல்வி, அனுபவம் , ஜாபக சக்தி இம்மூன்றையும் உன்னிடமிருந்து யாரும் பிரிக்கமுடியாது .

விரும்பியது கிடைக்கவில்லை என்று வருந்தாதே . கிடைத்துள்ளதை விரும்பு .

அருமை அறியாதவன் வீட்டுக்கு போனால் பெருமை குறைந்து போகும் .

எனக்கு பிடிச்ச பாடல் வரிகள் !

மிக மிக கூர்மையாய் என்னை ரசித்தது உன் கண்கள்தான்..
மிருதுவாய் பேசி என்னுள் வாசித்தது உன் வார்த்தை தான்...
கண்களை காணவே இமைகளே மறுப்பதா..

(தாம் தூம் )


"நான்கு கண்ணாடி சுவர்களுக்குள்ளே நானும்மெழுகு வர்த்தியும்


தனிமை தனிமையோ கொடுமை கொடுமையோ "

(சில்லுனு ஒரு காதல்)



"உன் சின்ன இதழ் முத்தம் தின்னாமல்

இந்த ஜன்மம் வீணென்று போவேனோ ??"

(பூவெல்லாம் உன் வாசம்)



"படுத்தும் பொசுக்குனு தூங்கும் பய

பித்துக்குளி போல இப்ப முழிக்குரானே

வெள்ளன எந்திருச்சு ஓடும் பய

சுள்ளுன்னு சூரியன பாக்குறேனே



அவன் பார்த்ததுமே நான் பூத்துவிட்டேன்

அந்த ஒரு நொடியை நெஞ்சில்ஒளித்துக்கொண்டேன்

நான் குழந்தை என்றே நேற்று நினைத்திருந்தேன்

அவன் கண்களிலே என் வயதறிந்தேன்"



(காதல்)



"பேச எண்ணி சில நாள் அருகே வருவேன்

பின்பு பார்வை போதும் என நான் நினைத்தேநகர்வேன் ஏமாற்றி..



இரவும் அல்லாத

பகலும் அல்லாத

பொழுதுகள்

உன்னோடு கரையுமா??!!



கரைகள் அண்டாத

காற்றும் தீண்டாத

மனதுக்குள் எப்போது நுழைந்த்திட்டாய்??!

தடையில்லை சாவிலும் உன்னோடு வர ..."


(சுப்பிரமணியபுரம்)